Home சூடான செய்திகள் ஆண்களிடம் என்னென்ன பிடிக்கும், பிடிக்காது – பெண்களின் கருத்துக்கள்!

ஆண்களிடம் என்னென்ன பிடிக்கும், பிடிக்காது – பெண்களின் கருத்துக்கள்!

33

captureஇன்றைய தலைமுறையில் ஆண், பெண் என்ற பேதம் இருக்கிறதா என்ன? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு, கல்வி, வேலை, குடும்ப பொறுப்பு, சமூக பார்வை என ஆண்களுக்கு நிகராக, அவர்களுக்கும் மேல் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

ஆயினும் பெண்களுக்கான சமநிலை சமூகத்தில் கிடைக்கிறதா? இந்த மாடர்ன் தலைமுறை ஆண்கள் எந்தெந்த விதத்தில் பெண்களால் விரும்பப்படுகிறார்கள்? எந்தெந்த விதத்தில் வெறுக்கப்படுகிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்…

பிடித்தவை #1 ஜோவியலாக பழகுவது! எந்த ஒரு தவறான பார்வையும் இன்றி, ஆண் நண்பர்களுடன் பழகுவது போன்றே, தங்களிடமும் பழகுவது பிடித்த விஷயம் என கூறியிருக்கிறார்கள்.

பிடித்தவை #2 உதவும் மனப்பான்மை! சென்ற தலைமுறை வரை ஒருசில விஷயங்களில் பெண்களுக்கு உதவ ஆண்கள் தயங்குவார்கள். அல்லது செய்யலாமா, வேண்டாமா என்ற தயக்கம் இருக்கும். ஆனால், இன்று அப்படி இல்லை, வகுப்பில் தோழிக்கு, உடன் பணிபுரியும் பெண்ணுக்கு எந்தவிதமான உதவியாக இருப்பினும் அதை தயக்கம் இன்றி செய்ய முனைகிறார்கள்.

பிடித்தவை #3 தங்கள் வீட்டு பெண்ணாக பார்ப்பது! முன்பெல்லாம், ஆண் ஒருவர் அவரது வீட்டில் பெண்களை அறிமுகப்படுத்துவதே கடினம். வீட்டிலும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது பெண்களுக்கும் உண்டு. ஆனால், இப்போது அப்படியில்லை. பெண்கள் வீடுகளை காட்டிலும், ஆண்களின் வீடுகளில் மகனின் தோழிகளை மகளாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அதிகரித்துள்ளது.

பிடிக்காதவை #1 காதல் தோல்வி! காதல் தோல்வி என்றால் உடனே அந்த பெண்ணின் படத்தை சமூக தளங்களில் பரப்பி அவளை அசிங்கப்படுத்துவது, பெண்கள் பொதுவாக திட்டி, அருவருப்பான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டுவது போன்றவை.

பிடிக்காதவை #2 உயர்வு! தான் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுக்கு கீழே பணிபுரிய மறுப்பது, வெறுப்பது. ஒரு பெண் பதிவி உயர்வு பெற்றாள் என்றால், அவள் தவறான முறையில் தான் அந்த இடத்தை அடைந்திருப்பாள் என கிசுகிசு பேசுவது.

பிடிக்காதவை #3 சமநிலை! சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு சமநிலை அளிக்க ஒன்றும் பலர் தயங்குகிறார்கள். முதல்வர் பெண்ணாக இருப்பினும், நகர அவையில் ஒரு பெண்ணின் பேச்சு எடுத்துக் கொள்ளப்படுகிறதா என்பது தான் கேள்வி. இது சமூகத்தில் உயர்ந்த, தாழ்ந்த எல்லா இடத்திலும் மறுக்கப்படும் ஒரு செயலாகவே தொடர்ந்து வருகிறது.