Home பெண்கள் பெண்குறி பெண்களே, அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்யும் முன் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!

பெண்களே, அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்யும் முன் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!

81

10-1473499686-1womengetalertareyoushavingyourpublichairsafelyபெண்கள் மத்தியில் வேக்ஸிங் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அந்தரங்க பகுதிகள் என்று மட்டுமில்லாமல், உடலில் உள்ள கூந்தல் வளர்ச்சியை அப்புறப்படுத்துவது தான் அழகு என்ற எண்ணம் ஆழ பதிந்துவிட்டது. ஆனால், இது எவ்வளவு நல்லது என நீங்கள் எண்ணுகின்றனர். அமெரிக்காவில் 70% வரை பெண்கள் அந்தரங்க பகுதியில் வேக்ஸிங் செய்ய சலூன் செல்கின்றனர் என கூறப்படுகிறது. காரணம், ஷேவிங் செய்யும் போது பெண்கள் அவர்களை அறியாமல் செய்யும் தவறு, பெண்ணுறுப்பில் தொற்றுகள் உண்டாக காரணமாகிவிடுகிறது.

உணர்மிக்க சருமம்! ஆண்களை விட, பெண்களின் அந்தரங்க பகுதியின் சருமம் அதிக உணர்மிக்கது ஆகும். பொதுவாகவே பிறப்புறுப்பு பகுதியில் வியர்வை காரணமாகவும், காற்றுப்புகா வண்ணம் நாம் உடுத்தும் உடைகளின் காரணத்தாலும், பாக்டீரியாக்கள் அதிகம் தொற்று இருக்கும் பகுதியாக இருக்கிறது.

சிராய்ப்பு! இந்த இடத்தில், பெண்கள் ஷேவிங் செய்யும் போது அவர்களையே அறியாமல் உண்டாகும் சிறு வெட்டு காயம் அல்லது சிறிய சிராய்ப்பு உண்டானால் கூட எளிதாக பாக்டீரியா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.

பால்வினை நோய் தாக்கம்! அதிகமாக ஷேவிங் செய்வது, எளிதாக பால்வினை நோய் தாக்கம் / தொற்று உண்டாக காரணியாக இருக்கிறது என கடந்த 2012-ம் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது எளிதாக பாக்டீரியா உடலினும் செல்ல வழிவகுத்து கொடுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரிம்! முடிந்த வரை ஷேவிங் செய்யாமல், ட்ரிம் செய்வதே சரியானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள். பொதுவாகவே பெண்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் நோய் தொற்று அண்ட வாய்ப்புகள் உண்டு. பெண்களே அறியாமல் அவர்கள் உடலில் ஷேவிங் செய்யும் போது ஏற்படும் தவறு, இந்த தொற்றுகளை அதிகப்படுத்தலாம்.

உடல் பருமனை விட கொடியது! அமெரிக்க ஆய்வொன்றில், உடல் பருமனாக இருக்கும் பெண்ணை விட, ஷேவிங் செய்வது அதிக அபாயம் ஏற்படுத்தும் செயல் என கூறப்பட்டுள்ளது. பெண்ணுறுப்பில் முடிகள் இருப்பது தான் அவர்களுக்கு பாதுகாப்பானது, அதனால், முழுமையாக அகற்ற வேண்டாம் என்றும் நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.

அழகு! பெண்கள் மத்தியில் இப்போது, அந்தரங்கள் பகுதிகள் மட்டுமின்றி, உடல் முழுக்க வேக்ஸிங் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும். அழகு என்ற பெயரில், சருமத்தின் நலனை நீங்களாக கெடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.