Home இரகசியகேள்வி-பதில் நான் எப்போது வயதிற்க்கு வருவேன்? எப்படி?- கன்னி பெண்ணின் கேள்வி

நான் எப்போது வயதிற்க்கு வருவேன்? எப்படி?- கன்னி பெண்ணின் கேள்வி

409

பெண்பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இதனையே சிலர் பிள்ளைகள் பெரியபிள்ளை ஆகுதல், வயதுக்குவருதல் என்றெல்லாம் சொல்வது வழக்கம். இந்நிகழ்வை மக்கள் தமது கலாசாரத்துக்கேற்றவாறு ஒரு சடங்காகவோ அல்லது ஒரு சம்பிரதாய நிகழ்வாகவோ கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால், சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எத்தனை வயதில் பருவமடையவேண்டும் என்றும் அவ்வாறு பருவமடையும் போது எவ்வாறான மாற்றங்கள் ஆரம்பிக்கும் என்றும் இவை தொடர்பான தாமதங்கள் இருந்தால் எத்தனை வயதில் மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும் எனவும் அறிய விரும்புகின்றார்கள்.

ஆகையால் பெண்கள் பருவமடைதல் தொடர்பாக இன்று ஆராய்வோம்.

பருவமடைதல் எத்தனை வயதில் நடைபெறும்?

சராசரியாக பெண்கள் பருவமடைதல் தொடர்பான மாற்றங்கள் 9 வயதில் ஆரம்பிக்கும். எனினும் இவ் வயது எல்லையானது ஒவ்வொருவர் பரம்பரை இயல்பையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பொறுத்து மாறுபடும். அதாவது பெண் ஒருவர் 8 வயதில் இருந்து 16 வயதுவரை பருவமடைதல் மாற்றங்களை ஆரம்பிக்கலாம்.

பருவமடைதல் உடலில் எவ்வாறு ஆரம்பிக்கும்?
மூளையில் இருந்து வெளியேறும் ஹோர்மோன்கள் தான் பருவமடைதலை தீர்மானிக்கும். பருவமடையும் வயதுவரும் போது மூளையில் இருந்து சில ஹோர்மோன்கள் அதிகமாக வெளியேறி குருதியில் கலக்கும். பின்னர் குருதி மூலம் கடத்தப்பட்டு வயிற்றில் உள்ள சூலகங்களை சென்றடையும். சூலகங்களை இவை தூண்டும் போது சூலகத்தில் இருந்தும் வேறு சில ஹோர்மோன்கள் வெளியேறி குருதி மூலம் கடத்தப்பட்டு மார்பகங்களை சென்றடைந்து மார்பக விருத்தியையும், கர்ப்பப்பையை சென்றடைந்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாதவிடாய் போன்ற குருதிக் கசிவையும் ஏற்படுத்தும்.

பருவமடையும் போது ஏற்படும் உடல்மாற்றங்கள் எவை? பருவமடைதல் (Puberty) – என்ன நடக்கிறது?

பருவம் அடைதல் என்பது பாலுறவுகொள்வதற்கான தகுதியை அவளது உடலுறுப்புஅடைந்துவிட்டது என்பதைக் குறிப்பது. பெண்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருக்கும்.

* அக்குள் மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றி உரோமங்கள் முளைத்தல்

* குரலில் மாற்றம்

* மார்பகக் காம்பு உயர்தல், மார்பகம் வளர்தல்

* மார்பகக் காம்புகளில் வலி, பிறப்புறுப்புப் பகுதியில் வலி

* பிறப்புறுப்பிலிருந்து உதிரக் கசிவுவருதல்

* மார்பகக் காம்பைச் சுற்றி செவிலி நிறமாக மாறுதல், மார்பகம் வளர்வது அந்த வயது பெண்களுக்கு விந்தையான உணர்வாக இருக்கும்.

* இதுவரை நட்புரீதியில் பழகியவள், எதிர்பாலினரைப் பார்த்ததும் வெட்கம் அடைய ஆரம்பித்தல், அவர்களோடு தொடர்புவைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு,

* செக்ஸ் தொடர்பான படங்களைப் பார்த்தல், படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவை அதிகம் இருக்கும்.

இந்த எண்ணங்களுக்கு ஆரம்பத்திலேயே அணை போட வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

ஆண்களுடனான நட்பை நாசூக்காக தவிர்க்க பழக்க வேண்டும்.

பூப்பெய்துதல் என்பது ஆச்சரியமான விஷயமாகப் பெண்களுக்குத் தோன்றும். அதே சமயம் பயமாகவும் இருக்கும்.

இந்த வயது பிள்ளைகளுக்கு இதைப் பற்றி எப்படி சொல்லித் தருவது?

உடல் மாற்றங்கள், மாதவிலக்கின் தோற்றம், மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் ஆகியவை பற்றி வீட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் சொல்லித் தருவதில்லை.ஆனால் சொல்லித் தரவேண்டும்.அவை பற்றிய முழுமையான விவரத்தைக் கற்றுக் கொடுத்தால், அல்லது அதைப் பற்றி மகளுடன், தங்கையுடன் விவாதித்தால் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மனநிலைத் தயக்கம், குழப்பம் போன்றவை நீங்கும்.

என்னென்ன சொல்ல வேண்டும்.?

எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.

மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.

பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவுரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும், மன நிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்புபோன்றவைஇருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செர்லித் தரவேண்டும்.

அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.

அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும்,

அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது,

விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.

என்ன மாதிரியான அறிகுறிகள் வந்தாலும் அதை அம்மாவிடம், டாக்டரிடம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பிறகு அது பெரிய பிரச்சினையாக முடியும் என்பதையும் கற்பிக்க வேண்டும்.

எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.

மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.

பருவமடைதல் (Puberty) – என்ன நடக்கிறது? பூப்பெய்துதல்

பொதுவாக பெண்கள் 11-14 வயதில் பூப்பெய்துகிறார்கள். இந்தக் காலத்திலிருந்து 28 நாளுக்கு ஒரு முறை அவர்களது பிறப்புறுப்பிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படும். இது தொடர்ச்சியாக ஒவ்வொருமுறையும் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். இவையெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும்வரக்கூடியவை.

துவக்கக் காலத்தில் மாதாந்திரப் போக்கு ஒழுங்காக வராது. சில மாதங்கள் வராமல் இருக்கலாம். திரும்ப மீண்டும் வரலாம். அதேபோல குறிப்பிட்ட நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு மேல் நீடிப்பதும் உண்டு, குறைவான நாட்களில் முடிவதும் உண்டு.

அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்கவேண்டும். அதேபோல துர்நாற்றத்துடனோ, திரிந்தோ, தாமதமாகவோ, வெகு சீக்கிரமாகவோ, ஒரு முறை வந்து பல மாதங்கள் வரை நின்றுபோனாலோ, வலியுடன் இருந்தாலோ மருத்துவப் பரிசோதனை அவசியம். காரணம் இவை ஏதேனும் நோய்களின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கலாம்.

மாதவிலக்கு நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்?

* தலைவலி அல்லது தலை பாரம்
* முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* கீழ் வயிற்றில் வலி
* இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு
* அதிகமாக வியர்த்தல்
* படபடப்பு
* பரபரப்புஅல்லது மந்தமான மனநிலை,
* எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு
* உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு
* உற்சாகமின்மை,
* உடலுறவுகொள்ளவேண்டும் என்ற வேட்கை
* கரும்புள்ளிகள், முகப்பருக்கள்

சில பெண்களுக்கு மூக்கு, காதுகள், ஆசனவாய் போன்றவற்றிலும் இந்த ரத்த ஒழுக்கு வரும். இதை விகாரியஸ் மென்சஸ் என்கிறார்கள். இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவேண்டும்.
* மாதவிலக்கு வரும் சமயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ரத்த சோகை வரும் வாய்ப்புஅதிகம்.
* டீன் ஏஜ் காலத்தில் வெளியில் செல்லும் பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை, நோயும் இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பொருள். கன்னிப் பெண் கர்ப்பமாவதை சமூகம் அங்கீகரிப்பதில்லை.. டீன் ஏஜ் பெண் மாதவிலக்கு காலத்தில் வேலை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது மாதவிலக்காகும் பெண்ணுக்கு மிக நல்லது.