Home இரகசியகேள்வி-பதில் உடலுறவு சார்ந்த 6 சந்தேகங்களுக்கு பாலியல் நிபுணர் அளிக்கும் பதில்கள்!

உடலுறவு சார்ந்த 6 சந்தேகங்களுக்கு பாலியல் நிபுணர் அளிக்கும் பதில்கள்!

62

Captureநடுரோட்டில் அசிங்கமாக, கேவலமாக திட்டிக் கொள்வதற்கு கூட யாரும் தயக்கமோ, சங்கோஜமோ அடைவதில்லை. ஆனால், உயிரினங்கள் மத்தியில் பொதுவாக திகழும் உடலுறவு பற்றி பேச, சந்தேகங்களை கேட்டு அதற்கான தீர்வு என்ன என்று அறிந்துக் கொள்ள மிகவும் தயங்குகிறோம். மிக சிலர் மட்டுமே தயங்கி, தயங்கி கடைசியில் பாலியல் மருத்துவ நிபுணர்களை சந்தித்து உடலுறவில் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டு அறிந்துக் கொள்கின்றனர்.

இதில், பாலியல் மருத்துவர்களிடம் அதிகமாக கேட்கப்படும் சந்தேகங்கள் என்னென்ன? அதற்கான தீர்வு என்ன என்று நிபுணர்கள் கூறும் பதில்கள் குறித்து இங்கு காண்போம்…

சந்தேகம் #1 அடுத்த முறை உடலுறவில் ஈடுபட மாட்டோம் என்றாலும் கூட பரவாயில்லை என்று தான் தோனுகிறது. தாம்பத்தியத்தில் ஆசை குறைவாக இருக்கிறது.

நிபுணர் பதில்: பல பெண்கள் இது போன்ற கேள்விகளை முன் வைக்கின்றனர். உடலுறவு என்பது உடலின் தீண்டுதல் மற்றும் சுகத்திற்காக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உண்மையில், மன நிம்மதி, இலகுவாக உணர, மன அழுத்தம் குறைய, தம்பதிகள் இருவர் மத்தியில் ஓர் இணக்கம் குறையாமல் இருக்க, உங்களது செயலாற்றல் சிறந்த விளங்க என உடலுறவு பல விஷயங்களுக்கு துணை நிற்கிறது. எனவே, இது வெறும் இச்சை உணர்வு என எண்ண வேண்டாம்.

சந்தேகம் #2 உடலுறவு அற்ற இல்லறம், என்னை ஏமாற்ற தூண்டுகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

நிபுணர் பதில்: பல தம்பதிகள் இந்த தவறில் ஈடுபட நினைப்பது உண்டு. இது தவிர்க்க வேண்டிய ஒன்று தான். ஓர் எல்லையை தாண்டும் நிலை வருகிறது என உணரும் போதே, உங்கள் துணையுடன் பேசி ஓர் நல்ல முடிவுக்கு வர முயற்சி செய்யுங்கள். மீண்டும், உங்கள் உறவிற்கு ஓர் புத்துயிர் வழங்க முனையுங்கள். உறவில் சோர்வு ஏற்படுவது போல இருந்தால். நீங்களும், உங்கள் துணையும் மட்டும் ஓர் சிறிய இடைவேளை எடுத்து பிக்னிக் போல சென்று வரலாம். இவை எல்லாம் உங்கள் உறவை மீட்டெடுக்க உதவும்.

சந்தேகம் #3 நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதில்லை.

நிபுணர் பதில்: சில பெண்கள் முன் வைக்கும் சங்கடமான விஷயம் இது. தாம்பத்திய உணர்வு, வேட்கை இருபாலினருக்கும் சமம் தான். படுக்கையில் கணவன் நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதில்லை என்ற குற்றசாட்டும் பெண்களால் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு காரணம், பெண்களுக்கு கொஞ்சி விளையாடுதலில் தான் இன்பம் அடைய உதவும். வெறும் உடல் ரீதியாக மட்டும் இன்றி, தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மனம் ரீதியாகவும் இணைய முனையுங்கள். இப்படி செய்வதால் தம்பதிகள் மத்தியில் மனக்கசப்பு, வேண்டாத எண்ணங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சந்தேகம் #4 தாம்பத்தியம் வரவர சலிப்பூட்டுவதாக இருக்கிறது.

நிபுணர் பதில்: உண்மை என்னவெனில், திருமணத்தின் ஆரம்பத்தில் தேனிலவு காலத்தில் நீங்கள் ஈடுபட்ட அதே அளவு தாம்பத்தியத்தில் இன்பம் காண்பது என்பது இன்றியமையாத ஒன்று. வயதாக, வயதாக உடலுறவு சார்ந்த ஆசை ஆண்களை காட்டிலும் பெண்கள் மத்தியில் வேகமாக குறைய வாய்ப்புகள் உண்டு. இதை ஆண்கள் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும். 35-40 வயதுக்கு மேலும், இருபதுகளில் ஈடுபட்ட மாதிரியான தாம்பத்தியத்தை எதிர்பார்க்க வேண்டாம். இந்தஎதிர்பார்ப்பு தான் சலிப்பூட்டுகிறது என்ற மாயை பிறக்க காரணியாக இருக்கிறது.

சந்தேகம் #5 உடலுறவு ரீதியாக எங்களுள் நெருக்கும் அல்லது இணைப்பு இருப்பதாக தெரியவில்லை.

நிபுணர் பதில்: வேலை, குடும்பம் மற்றும் குழந்தைகளும் மீதான கவனம் அதிகமாகம் போது, தாம்பத்தியத்தின் மீதான கவனம் குறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. இதன் நடுவே உங்களுக்கு இணைப்பு குறைவது போன்று இருந்தால். அதை நீங்கள் தான் சரிசெய்துக் கொள்ள வேண்டும். நேரம் எடுத்துக் கொண்டு தனியே பேசுங்கள். உங்கள் இருவருக்கான நேரத்தை ஒதுக்குங்கள். ஒருவர் மீது ஒருவர் அதிக அக்கறை செலுத்துங்கள். முடிந்த வரைஇருவரும் ஒன்றாக எங்காவது சென்று வர முயலுங்கள். கடைவீதிக்கு செல்வது, கோயிலுக்கு செல்வது, ஷாப்பிங் எங்கே போனாலும் ஒன்றாக போய்வாருங்கள்.

சந்தேகம் #6 உடலுறவில் ஈடுபட நேரம் கிடைப்பதில்லை.

நிபுணர் பதில்: இன்றைய வேலை சூழலில் பெரும்பாலான தம்பதிகள் கேட்கும் கேள்வி இது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று வரும் போது. இந்த பிரச்சனை ஏற்படலாம். இதற்கான தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது. நேரம் ஒதுக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் கணவன், மனைவி சரியாக செயல்பட்டாலே இல்லறத்தில், தாம்பத்திய உறவில் எந்த பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், கணவன் மனைவி இருவர் மத்தியிலான தனிப்பட்ட கேளிக்கைகள் அதிகரிக்க வேண்டும். கட்டிப்பிடித்துக் கொள்வது, முத்தமிட்டுக் கொள்வது, நடனம், ஒன்றாக சமைப்பது, பழைய ஒன்றாக உட்கார்ந்து பேசி பழைய நினைவுகளை மீட்டெடுப்பது போன்றவற்றை செய்யும் போதுதானாக உங்களுக்குள் ரொமான்ஸ் அதிகரிக்கும்.

Previous articleபெண்களே, இந்த செயல்களால் உங்கள் மார்பகங்கள் பாதிக்கப்படும் என உங்களுக்கு தெரியுமா?
Next articleஆண்கள், பெண்களிடம் செக்ஸியாக உணரும் 8 விஷயங்கள்!