Home காமசூத்ரா செக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்!

செக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்!

77

உண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்தல். இதற்கான வழிமுறைகளை பல நூற்றாண்டுக ளுக்கு முன்னர், வாத்சாயனர், கொக்கோகர், வஜீகரன், பத்மஸ்ரீ, கவிசேகரன், ஜெயதேவா, கல்யானமல்லா, யசோதரா போன்ற பல அறிஞர்கள் பாலியலை ஒரு அறிவியல் துறையாக கருதி, ஆராய்ச்சி செய்து பல உண்மைகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.
மனித இனம் தோன்றிய போதே… ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, அனுபவ ரீதியாக வளர்க்கப்பட்டு, முதல் அறிவியல் துறையாக பாலியல்துறை இருந்துள்ளது. பழங்காலத்தில் நம் நாட்டில் காமத்தை ஒரு அறிவியல் ரீதீயாக கருதினர். காமம் என்பது நம்முடைய உள்ளுணர்வாக இருந்தாலும், அதை கலையாக வளர்த்தனர். அதற்கான விதிமுறைகள், நெறிமுறைகளை விளக்கி நூல்கள் எழுதப்பட்டன.

‘ரதி ரகஷ்யா’ என்ற நூலை கொக்கோகர் தொகுத்துள்ளார். இவர் கி.பி.1000- க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பெண்கள் எளிதில் பாலுணர்வுத் தூண்டுதலுக்கு ஆளாகும் பகுதிகள் மற்றும் தூண்டப்படும் காலம் பற்றிய விசயங்களை மிகவும் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்கள், பெண்களின் 3 பிரிவுகளையும், பிறப்புறுப்பின் அளவைக் கொண்டு பாலுறவில் ஒன்பது நிலைகள் இருப்பதையும் விவரமாக குறிப்பிட்டுள்ளார்.
கவிசேகரா என்பவர் கி.பி.1300 ஆம் ஆண்டில் ‘பஞ்சயாகா’ என்ற பாலியல் நூலை எழுதியுள்ளார். பாலுணர்வைத் தூண்டும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்கள் பற்றி நிறைய எழுதியுள்ளார். தளர்ந்த மார்பகத்தை உயர்த்தி நிறுத்தும் மருந்து போன்ற சில குறிப்பிட்ட மருந்துப் பொருட்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இதில் மாதவிலக்கு, கருத்தரிப்பு மற்றும் மலட்டுத் தன்மை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

காம சாஸ்திரத்துக்கு ‘ஜெயமங்களா’ என்ற உரையை எழுதியவர் யசோதரா. கி.பி.1000-க்கும் 1300-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். ஜெயமங்களா நூல் உரையாக அல்லாமல், தனிப்பட்ட புத்தகத்தைப் போல் விளங்குகிறது. இதில் வாத்சாயனார் மற்றும் பிறரால் கையாளப்பட்ட பதங்களைப் பயன்படுத்தியுள்ளார் யசோதரா.
ஆன்மிகமும், இல்லறமும் எல்லா மனிதனுக்கும் தேவை. இந்த இரண்டையும் முழுமையாக பெறுவதன் வாழ்க்கையின் அடையாளம் என்று முன்னோர்கள் கருதினர். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை. தர்ம சாஸ்திரம்… நீதி, நெறி மற்றும் ஒழுக்கத்தின் அவசியத்தை கூறுகிறது. அர்த்தசாஸ்திரம்… பொருளாதா ரத்தைப் பற்றி விளக்குகிறது. காமசாஸ்திரம்… நம்முடைய உடலின் ஆசைகளை விவரிக்கிறது. ‘மோட்சம்’ என்பது இந்த மூன்றையும் அனுபவிப் பதால் அடையும் நிலை என்கிறது.

பாலுணர்வைப் பற்றிய முதல் நூல் ‘காமசூத்ரா.’ இதை எழுதியவர் வாத்சா யனார். இவர் கி.பி.300 முதல் கி.பி.400 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில், வாழ்ந்தவர். இந்த நூலில், காமம் என்பது கேட்டல், பார்த்தல், உணர்தல், நுகர்தல், முகர்தல் என்ற ஐம்புலன்கள் மட்டுமின்றி, மனமும், ஆத்மாவும் இணைந்து தோன்றுவது என்று குறிப்பிடுகிறார். இதில் பாலு ணர்வு நிலைகள், இன்பத்தை நீடிக்க வைக்கும் வழிமுறைகள் பயன் படுத்தும் பொருட்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

 

காதல் நுணுக்கங்களைப் பற்றி விவரிக்கும் ‘ரதி மஞ்சரி’ என்ற கவிதை நூலை எழுதியவர் ஜெயதேவா. கி.பி. 1500ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் மிகச் சிறியது. அதேசமயம், சிறந்த நடையில், பாலியல் குறித்து எழுதப்பட்டுள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டில் ‘கல்யாண மல்லா’ என்பவர், தனது அரசரை மகிழ்விப்பதற்காக ‘அனங்கரங்கா’ என்ற நூலை எழுதி உள்ளார். இதில் தாம்பத்திய உறவை வெற்றிகரமாக நடத்துவது பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

கி.பி.1000 ஆம் ஆண்டில் வாழ்ந்த பத்மஸ்ரீ என்பவர் ‘நகர சர்வஸ்வம்’ என்ற நூலில் சங்கத் எனப்படும் பாலுறவுக் குறிப்புச் செய்கைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர், ஒரு பவுத்த துறவி. நகர சர்வஸ்வம் நூலில் காதல் மட்டுமன்றி பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாகக் எழுதியுள்ளார். மேலும் காமம் மற்றும் இனப்பெருக்கம் பற்றி அழகாக இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்.

பண்டைக்கால ஆயுர்வேத மருத்துவர்களுள் சிறந்த எட்டு பேர்களில் ஒருவர் ‘வஜிகரன்’. பாலுறவில் பயன் படுத்தப்படும் வாஜிகாராணா என்ற மருத்துவப் பொருளைப் பற்றி ஆழமாக விவரித்துள்ளார். இவர், குதிரையைப் போன்ற திறனும், நீண்ட நேரம் பாலுறவு கொள்ளவும் ஏதுவான மருந்துகளைக் கண்டு பிடித்தவர். இந்த நூலில் ஆகார உணவுகள், மருந்து உணவுகள், பாலுறவுக் கான சூழல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆழமாக விளக்கியுள்ளார்.