Home உறவு-காதல் உங்கள் கடந்த கால காதலை பெண்ணிடம் சொன்னால் எனக்கும் தெரியுமா?

உங்கள் கடந்த கால காதலை பெண்ணிடம் சொன்னால் எனக்கும் தெரியுமா?

207

காதல் உறவுகள்:கடந்த காதலை துணையிடம் சொல்வது சரியான முடிவா?
பெரும்பாலான கணவன், மனைவி இணை கருத்து வேறுபாட்டுடன் குடும்ப வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதும், அறிந்து வைத்திருபதிலும் தான் திருமண வாழ்க்கையின் அடிப்படை இருக்கிறது.

காதலை கடப்பவர்கள் தான் நாம்
இன்றைய கால கட்டத்தில் பலரும் திருமணத்திற்கு முன்பு ஒரு பந்தத்தை அல்லது காதலை கடந்து தான் வருகின்றனர். காதலில் தோல்வி அடையும் நபர்கள் பிறகு திருமண வாழ்க்கைக்குள் நுழைகின்றனர். அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், பாதுகாப்பும் சற்று அதிகப்படியாகவே இருக்கும்.

பிரச்னைக்குரிய நபர்கள்
அவற்றில் குளறுபடி ஏற்படும் போது திருமண வாழ்க்கை மேற்கூறிய நபர்களுக்கு பிரச்னையை தருகிறது. கடந்த கால காதலை துணையிடம் சொல்வதில் உங்களுக்கு குழப்பமிருந்தால். தொடர்ந்து படிக்கவும்.

திருமணத்திற்கு முந்தைய காதல்
தம்பதிகளுக்குள் பிரச்சனையை உருவாக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று திருமணத்திற்கு முந்தைய காதல் அல்லது நடத்தைகள் தான்.

பெண்களின் இயல்பு
தெரிந்தோ,தெரியாமலோ செய்துவிட்ட ஒரு தவறால், மனதில் குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அது எப்போது தனது கணவருக்குத் தெரிய வருமோ? என்ற உறுத்தல் வாழ்க்கையைப் பாதிக்கும்.

பய உணர்வு
வேறு யாராவது குறுக்கிட்டு உண்மைகளைச் சொல்லி வாழ்க்கையை நாசமாக்கிவிடுவார்களோ? என்ற பய உணர்வு கூட எழும்.

அவசர முடிவுகள் வேண்டாம்
அதற்காக மனம் விட்டு பேசுகிறேன் என்ற பெயரில் கடந்த கால விஷயங்களை எல்லாம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.

திருமண வாழ்க்கை தான் முக்கியம்
திருமணத்திற்குப் பின் இருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

கடந்த கால உண்மைகள்
கடந்த கால உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது. அப்படி செய்திடவும் கூடாது என்பதை இருவரும் சரியாக புரிந்திருக்க வேண்டும்.

எதிர்மறையான ரகசியம்
எதிர்காலத்தில் நம்மைப் பற்றிய எதிர்மறை ரகசியம் யார் மூலமாகவோ தெரியவந்தால் என்ன செய்வது என்று பயந்து வாழாமல், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை இருவரும் பெற்றிருக்க வேண்டும்.

இதுதான் நல்லது
ஆண், பெண் இருவருமே கடந்த கால விஷயங்கள் தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் பிரச்னையை உருவாக்கும் என்று நினைத்தால் அதை ஒருவரிடம் மற்றொருவர் கேட்டு தெரிந்து கொள்ள நினைக்காமல் இருப்பது தான் நல்லது. அதற்காக ஒருவர் மற்றவரிடம் உண்மையாக இல்லையென்று அர்த்தமில்லை.

நிகழ்கால வாழ்க்கை தான் முக்கியம்
இருவரும் இணைந்து சேர்ந்து வாழ்கிற இந்த நிகழ்கால வாழ்க்கை தான் இருவருக்குள்ளும் பரஸ்பரத்தோடு இணைந்து வாழ வேண்டிய தருணம் என்பதைப் புரிந்து கொண்டு இருவரும் செயல்படுவதே எதிராக்காலத்திற்கு நல்லது.