Home பாலியல் உடல் நலம் எப்படியோ அது போல்தான் கட்டில் உறவும் இனிக்கும்

உடல் நலம் எப்படியோ அது போல்தான் கட்டில் உறவும் இனிக்கும்

73

பாலியல் தகவல்:காமக்கலை பற்றி படங்களுடன் விளக்கும் ஆங்கிலப் புத்தகங்களை எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிவிடுவான். வித்தியாசமான கோணங்களில் உடலுறவு கொள்வதை விளக்கும் குறுந்தகடுகளை பார்ப்பதும் அவனது வழக்கம்.

இவ்வாறு புத்தகங்களை படித்தும், டி.வி.டி. படங்களை பார்த்தும் தனது செக்ஸ் அறிவை விசாலமாக்கி இருந்தான். அவனுடைய காதலி ஷில்பாவுக்கும் செக்ஸ் விஷயங்களில் நல்ல ஆர்வம் இருந்தது. இவன் படித்த புத்தகங்களை அவளுக்கும் படிக்க கொடுப்பான்.

இருவருக்கும் திருமணமாக ஒரு மாதம் இருந்தது. அதற்கு முன்பாக ஒரு முறை முதலிரவுக்கு ரிகர்சல் செய்து பார்த்து விடலாம் என இருவரும் முடிவெடுத்தனர். அவனது ஃபிளாட்டிலேயே இந்த ரிகர்சலை வைத்துக் கொள்ளலாம் என ஷில்பா சொல்லிவிட்டதில், ராம்குமார் ஏக குஷியில் இருந்தான். படுக்கையறையை ஓடியாடி அலங்கரித்தான். ஷில்பாவும் புதுப்பெண் போலவே புடவையெல்லாம் கட்டி சொன்ன நேரத்துக்கு முன்பே வந்துவிட்டாள்.

இருவரும் உறவு கொள்ள முயன்ற போது ராம்குமாரின் முதுகு பிடித்துக் கொண்டு வலி எடுக்க ஆரம்பித்தது. அவனால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை. டாக்டரிடம் காட்டிய போது உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாத வாழ்க்கை முறையே முதுகுவலிக்கு காரணம் என்றார். செக்ஸ் மீதான ஆசையும், அது பற்றிய அறிவும் மட்டும் இருந்தால் போதாது.

அதில் ஈடுபட ஆரோக்கியமாக உடலை வைத்திருப்பது அவசியம் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். சமீபத்திய உலக அளவிலான ஆன்லைன் சர்வே ‘செக்ஸில் ஈடுபடும் போது மூன்றில் ஒரு பங்கு மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்’ எனச் சொல்கிறது. கடின உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறையே பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி வர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் 58 சதவிகித மக்களுக்கு உடலுறவின் போது ஒரு முறையாவது முதுகு வலியோ, இடுப்புப் பகுதியில் வலியோ ஏற்படுகிறது என அறிவித்து இருக்கிறது.

முதுகுத் தசைகளில் ஏற்படும் அழுத்தமும், தசைநார்கள் பலவீனமடைவதும் 80 முதல் 90 சதவிகிதம் முதுகுவலிக்கு அடிப்படை காரணம். இதனால் முதுகு தண்டுவடத்தினுள் பிரச்னைகள் எதுவுமிருக்காது. அதனால் கவலைப்படத் தேவையில்லை. முதுகுத் தசைகளை வலுப்படுத்தினால் போதுமானது. முதுகுத் தசைகளை நல்ல நிலையில் வைக்கும் வார்ம்-அப் உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.

ஒரு பிசியோதெரபிஸ்டின் ஆலோசனையின் படி முதுகு தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் இன்னும் நல்லது. முதுகுதசைகள் வலுவாக இருந்தாலே முதுகு தண்டுவடத்தை சரியான இடத்தில் நிறுத்தி அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். Core muscles என ஆங்கிலத்தில் குறிப்பிடும் முதுகு, இடுப்பு, வயிற்றின் முக்கிய தசைகளை வலுவாக்க வேண்டும். இதன் மூலம் உடலுறவில் எந்த வலியும் இல்லாமல் சிறந்த முறையில் ஈடுபட முடியும்.

ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் உடலுறவு கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். முதுகு வலியை ஏற்படுத்தாத நிலைகளில் மட்டுமே செக்ஸில் ஈடுபட வேண்டும். தீவிரமாக இயங்காமல் கொஞ்சம் மெதுவாக இயங்கினால் நீடித்த இன்பம் பெறலாம்.

படுக்கையானது கடினமான மெத்தையால் அமைந்திருக்க வேண்டும். படுத்தவுடன் உள்ளே அமுங்கும் மெது மெத்தைகளை பயன்படுத்தினால் முதுகுவலிக்கான வாய்ப்பை அதிகமாக்கும். உடலுறவின் போது மூட்டுவலி வராமல் இருக்க மூட்டுகளுக்கு அடியில் தலையணை வைத்து இயங்க வேண்டும். முதுகில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இயங்க பழகிக்கொள்ள வேண்டும். யோகா, பிசியோதெரபி பயிற்சி எடுத்து முதுகை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் நலமுடன் இருக்கும்.

Previous articleபெண்கள் கர்ப்பகாலத்தில் புகை பிடிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள்
Next articleஉங்கள் கடந்த கால காதலை பெண்ணிடம் சொன்னால் எனக்கும் தெரியுமா?