Home இரகசியகேள்வி-பதில் வயதானால் உறவு சுகமும் ஆண்களின் அந்தரங்க கேள்விகளும் -டாக்டர் பதில்

வயதானால் உறவு சுகமும் ஆண்களின் அந்தரங்க கேள்விகளும் -டாக்டர் பதில்

634

டாக்டர் கேள்வி பதில்கள்:வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச் சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை. இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும்விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள். இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்;த வயதில்தான் தாம்பத்ய சுகத்தை பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.

பெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய்முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும், மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ பயன்படுத்தலாம்.

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

—————————————————————–
கேள்வி: உடலுறவில் ஈடுபடும்போது கூட என் ஆண் உறுப்பு முன் தோல் கீழிறங்கவில்லை அப்படியே இருக்கிறது. மேல் தோல் இருக்கமாக உள்ளது. நான் என் உறுப்பு மொட்டையும் (Glans of Penis) பார்த்ததில்லை, இதற்கு என்ன தீர்வு?

பதில்:
உங்கள் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் பைமோசிஸ் (Phimosis) என்று பெயர்.

Ø இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் நுனியை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடிக்கொண்டு இருக்கும். தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக பார்க்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

Ø ஒரு சாதாரணமான ஆண்குறி விரைப்படைந்தால், தோல் அதுவாகவே பின்னோக்கி நகர்ந்து மொட்டு வெளிப்படும். அல்லது, நீங்கள் தோலை பின்னால் இழுத்து விட்டால், மொட்டு வெளியே முழுமையாக தெரிந்து விடும்.

Ø ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போது, இயற்கையிலேயே தோல் ஆண்குறி மொட்டை மூடியபடி தான் இருக்கும்.அந்தப் பையன் இளம் பருவத்தை அடையும்போது, அவனுடைய தோல் பின்னோக்கி நகர்ந்து விடும். அதிக பட்சமாக பதினெட்டு வயதுக்குள் தோல் (Foreskin) தளர்ந்து, ஆண் குறியின் மொட்டு முழுமையாக வெளியே தெரியும்.

காரணங்கள்:
ü பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனை (Congenital Phimosis).
ü ஆண் குறி மொட்டு வீங்கி இருத்தல் (Balanitis).
ü ஆண் குறித் தோலை கையால், வேகமாக இழுத்ததால் ஏற்படும் காயம்.
ü வித்தியாசமான சுய இன்ப நிலை – உதாரணமாக, தலைக் குப்புறப் படுத்து, தலையணையில் ஆண் குறியைத் தேய்த்தல். அல்லது கடினமான பகுதியின் மேல் ஆணுறுப்பை தேய்த்தல்.
ü நீரிழிவு நோயால் ஏற்படும் நோய் (இது நடுத்தர வயதினருக்கு வரும்)
ü சுகாதாரமின்மை. (ஆண்குறியின் முன் தோலில் ஸ்மெக்மா எனப்படும் அழுக்கு சேர்ந்து நோய்த்தொற்று ஏற்படலாம்.

கேள்வி; எனது ஆண் உறுப்பு மிகவும் சிறியதாக உள்ளது. இப்போது எனது வீட்டிலேயே எனக்கு பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. எனது ஆண் உறுப்பை பெரிதாக்க என்ன செய்யலாம் .தயவு செய்து விரைவாக பதில் சொல்லவும்.

பதில்: முதலில் மற்றவரின் ஆணுறுப்போடு உங்கள் ஆணுறுப்பை ஒப்பிடுவது மிகவும் தவறானதாகும்.

Ø ஒவ்வொருவரின் உயரம் வேறு படுவது போலவே அவர்களின் ஆணுறுப்பின் அளவும் வேறுபடும்.

Ø உயரம் குறைவானவர்கள் ஒன்றும் தாழ்வனவர்கள் அல்ல அதே போலத்தான் ஆணுறுப்பு சிறிதானவர்களும் ஆண்மை குறைந்தவர்கள் அல்ல.

Ø நீங்கள் செக்ஸ் படங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம். அவை மற்றவர்களை கவர்வதற்காக கவர்ச்சியாவனவர்களை வைத்து எடுக்கப்படும் செயற்கையான படங்கள். அவற்றோடு நிஜத்தை ஒப்பிட வேண்டாம்.

Ø ஆண்மை தங்கியுள்ளது ஆணுறுப்பின் அளவில் அல்ல.

Ø ஆண்மைக்கு முக்கிய ஆணித்தரமே மன உறுதிதான் . தேவை இல்லாத யோசனைகளை மூலம் உங்கள் மன உறுதியைத் தொலைத்து உங்கள் ஆண்மையை வீணாக்கி விடாதீர்கள்.

Ø உங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து .சந்தோசமாக வாழுங்கள்.

Ø விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.

Ø விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும்

Ø அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது, சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே பருமனில் அதிகரிக்கும்.

Ø ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

Ø பெண்களின் பிறப்புறுப்பின் அளவினை (ஆழம்) எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும்.

Ø ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின் போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது.

Ø அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும்.இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது.

Ø இன்பம் கிடைப்பது ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல செயல்பாட்டை பொருத்தே பெண்ணை திருப்தி படுத்த முடியும்.

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?
இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படையாமல்’ இருப்பது மிக முக்கியமானதாகும்.

உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதால் உடலுறவு முழுமை பெறாமலிருக்கும். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இருப்பினும் இது தொடர்ச்சியாக நிகழும்போது அது Erectile Dysfunction என்று அழைக்கப்படுகிறது.

v ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு விறைப்பின்மை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
v சிலருக்கு விறைப்பின்மை லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
v வயது அதிகமாகும்போது விறைப்பின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

இளைஞர்களுக்கு விறைப்பின்மை ஏற்படுவது பெரும்பாலும் உள்ளம் சார்ந்ததே.
நிறைய பேர் விறைப்பின்மை குறைபாடை மறைத்து நண்பர்களிடம் வாய்ச்சொல்லில் வீர்ர்களாக காண்பித்துக்கொள்வார்கள். ஆனால் படுக்கை அறையில் நடக்கும் உண்மை வேறு.

இதன் முக்கியமான விஷயம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார்களே தவிர சரியான மருத்துவ சிகிச்சை பெறுவதில்லை.

விறைப்பின்மைக்கான காரணம்:
பலருக்கு இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். விறைப்பின்மை வேறு நோய்களின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

Ø ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
Ø நீரிழிவு (சர்க்கரை நோய்) ஒரு முக்கிய காரணமாகும். நிறைய நீரிழிவு நோயளிகளை இப்பிரச்சனை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Ø போதைப் பொருள் உபயோகித்தல் மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மது குடித்தல்,மற்ற போதைப்பொருள் பயன்படுத்துதல் விறைப்பின்மையை அதிகப்படுத்தும்.
Ø சிலருக்கு இது மன உணர்ச்சிகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். மன அழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை போன்ற உளவியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.
Ø உடலுறவு பற்றிய பதற்றம் (Sex Performance Anxiety), உடலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (Relationship Failure, Fear of intimacy) போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
Ø சிலருக்கு சிறு வயதிலிருந்து அதிகப்படியான கைப்பழக்கம் இருந்தால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக விறைப்பின்மை ஏற்படலாம்.
Ø புரஸ்டேட் நோய், முதுகு தண்டில் ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
Ø வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக்குறைபாடு ஏற்படலாம். இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
Ø மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
Ø விறைப்பின்மை உள்லம் சார்ந்ததா அல்லது உடல் சார்ந்ததா?
Ø பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உள்ளம் சார்ந்ததாகவும் இருக்கிறது

இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
மனநிலை சார்ந்த அறிகுறிகள்
ü திடீரென விறைப்பின்மை ஏற்படும்,
ü சில நாட்கள் விறைப்பு ஏற்படும், சில நாட்கள் விறைப்பு ஏற்படாது,
ü பொதுவாக 40க்கு உட்பட்ட வயதினருக்கு உள்ளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம்.
ü தினமும் அதிகாலையில் தூக்கத்தின்போது ஆண்களுக்கு தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உள்ளம் சார்ந்ததே.
ü உடலுறவில் ஆர்வமற்றுப் போவதும் உள்ளம் சார்ந்த்தே.

உடல் சார்ந்த அறிகுறிகள்
ü ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
ü எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
ü பொதுவாக 40க்கு மேற்பட்ட வயதினருக்கு ஏற்படும் விறைப்பின்மை.
ü நிரந்தரமாக அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படையாமல் போதல்.
ü உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு விறைப்படையாமல் போதல்.

மருத்துவ பரிசோதனை
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டோஸ்டீரான் குறைபாடு இருக்கிறதா என அறிய இரத்தப்பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார்.

ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவை பரிசோதிக்கப்படும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன பரிசோதிக்கப்படும்.

சிகிச்சை
v நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம்.
v புகைத்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். அல்லது நிரந்தரமாக நிறுத்துவது மிகச் சிறந்தது.
v நவீன மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் நல்ல பலனைக் கொடுக்கின்றன.
v ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
v நெஞ்சு வலிக்கு Trinitrate உபயோகிப்பவர்கள் அதனுடன் நவீன மருந்துகளை சேர்த்து உபயோகிக்கக் கூடாது