Home காமசூத்ரா தேன்நிலவு வெறும் உடல்கள் சேர்வது மட்டுமல்ல அதுக்கும் மேல

தேன்நிலவு வெறும் உடல்கள் சேர்வது மட்டுமல்ல அதுக்கும் மேல

206

காமசூத்திர உறவுகள்:திருமண வாழ்க்கையில் எந்தவொரு கட்டமும் தேனிலவு போன்று களிப்பூட்டக் கூடியதாகவும் மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகவும் இருப்பது இல்லை. கணவன் மனைவி இருவரும் இந்த கட்டத்தில் சிறந்த சுய நிலையில் இருப்பதால், இது அன்பு, காமம், அக்கறை ஆகியவற்றால் நிறைந்துள்ளது.

அங்கு எந்த அழுகையும், சுமையும் இல்லை. இந்த கட்டம் கவிதை போன்றது. மேலும் இது ரோஜா நிற கண்ணாடிகள் மூலம் உங்களை உலகைப் பார்க்க செய்கிறது. தேனிலவு கட்டம் விரைவில் முடிவுக்கு வந்த பின்னர் உண்மையானதை ஏற்றுக்கொள்ள கடினமானதாகிவிடுகிறது.

சரி, இங்கு எது தேனிலவை திருமணத்தின் ஒரு சிறந்த கட்டமாக மாற்றுகிறது என்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தூய மோகம் இந்த இனிய கட்டமானது உங்களை மிக குறைந்த நேரத்தில் காதலில் விழச் செய்யும். இந்த தேனிலவு காலம் திடீரென நீங்கள் உங்கள் துணையை நேசித்திடச் செய்யும். “ஓ! இவன் அழகாக இருக்கிறான்”, “இவள் மிகவும் அழகானவள்” போன்ற சொற்கள் உங்கள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். மேலும் உங்கள் இதயம் உங்களை வழிநடத்திச் செல்லும்.

காதல் எல்லையற்றது இந்த கட்டத்தின் போது அதிக மனக்கிளர்ச்சி இருக்கும். காதலுக்கு இரவு பகல் என்பதெல்லாம் கிடையாது. அனைத்துமே காதல் சாகசமாகிப் போகும்.

தற்காலிக ஒப்பந்தம் ஆம், நீங்கள் படித்தது சரிதான். தேனிலவு கட்டத்தின் போது எந்த வேறுபாடுகளும் இருப்பதில்லை. டின்னர் மெனுதேர்வு செய்வதாகட்டும், படுக்கையில் எந்த பக்கம் தூங்குவது என்பதாகட்டும், ஏதேனும் திட்டங்களை ரத்து செய்வதாகட்டும், உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்றே மற்றவர் கூறுவார். ஆனால் தேன்நிலவு கட்டம் முடிந்த பிறகு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொள்வதே நீங்கள் செய்யும் முதல் விஷயம்.

உண்மையான சண்டைகள் எதுவும் இல்லை இறுதியாக, உங்கள் திருமண வாழ்வின் சிறந்த பருவமாக தேன்நிலவை மாற்றும் அற்புதமான காரணத்திற்கு வந்து விட்டோம். குழப்பம், கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட, அன்புடன் நிலைமையை கையாளும் போது, அது உண்மையான சண்டையாக இருப்பதில்லை. சண்டை முடிந்தவுடன் உங்கள் வேடிக்கையான சண்டையை எண்ணி இருவரும் சிரித்துக் கொள்வீர்கள். இதனால் இது காதலை அதிகரிக்கும். ஆனால் தேனிலவு காலம் முடிந்தவுடன், எதற்காக சண்டை போட வேண்டும், அதை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஒரு விதியும், எல்லையும் இல்லை. மேலும் சண்டைகளால் சில இரவுகளில் உங்களில் ஒருவர் தனியாக படுத்துக் கொள்ளவும் நேரிடலாம்.

உங்களை மட்டுமே பார்த்துக் கொள்கிறீர்கள் இந்த பருவத்தில் உங்கள் துணைவர் மற்ற பெண்களை பார்க்கமாட்டார். உங்களை ஆராய்வதிலேயே ஈடுபாடு கொண்டிருப்பார். இறுதியில் நேரம் செல்ல செல்ல, கண்கள் அங்கும் இங்குமாக அலையும்.

அவர் மீதான உங்கள் காதல் களங்கமற்றது நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதல் தூய்மையானது. மற்றவரின் குறுக்கீடு, எதிர்பார்ப்புகள் அல்லது உங்களுக்காகவே மற்றவர் மீது தோன்றும் சந்தேகம் போன்றவை களங்கம் ஏற்படுத்தாது. நீங்கள் ஒருவருக்கொருவர் உங்களில் உள்ள நல்லதை மட்டுமே பார்க்கிறீர்கள். உங்கள் கனவுகள் எதிர்காலத்தில் நம்பத் தகாதவாறு மாறினால், உங்களுக்குள் இடைவெளி ஏற்படும்.

அவர் குறித்த எதுவும் உங்களுக்கு எரிச்சலூட்டாது அவர் கரகரப்பான குரல், வியர்வை வாசம் என அனைத்தையும் நீங்கள் விரும்புவீர்கள். நீங்கள் அவரது தலையணையில் உங்கள் முகத்தைப் புதைத்துக் கொள்வீர்கள். ஆனால் இந்த பருவம் முடிந்த பின்னர், அவர் உங்களை எரிச்சலூட்டும் விஷயங்களை ஒரு முடிவற்ற பட்டியல் போட்டு கொடுப்பீர்கள்.

உங்கள் கவனம் முழுவதும் ஒருவருக்கொருவர் மீதே இருக்கும் இந்த நேரத்தின் போது, உங்கள் வாழ்க்கையில் முக்கியமானதாக படும் ஒரே விஷயம் உங்களின் துணை மட்டுமே. அதனால் விளையாட்டில் ஈடுபடுதல், முகநூலில் நேரத்தை செலவிடுதல் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரை தொலைபேசியில் அழைத்தல் போன்றவைகளில் ஈடுபடமாட்டீர்கள். அதன் பிறகு, வாழ்க்கை என்பது நீங்கள் இரண்டு பேர் மட்டுமல்ல; மாறாக உங்களை சுற்றியுள்ள அனைத்தும் தான் என்பதை உணர்வீர்கள்.

ஒருவரை ஒருவர் ரசிப்பீர்கள் தேனிலவு காலகட்டத்தின் போது நீங்கள் அதிகமாக ரசிப்பது உங்களது துணையை மட்டுமே. அதன் பின்னர், உங்கள் இருவருக்கும் பரீட்சயம் அதிகமாக வளரும் போது, ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். இதனளவு சற்று அதிகமாகவே இருக்கக்கூடும்.

“ஒருவருக்காக மற்றவர்” என்ற உணர்வு உங்கள் வாழ்க்கைத் துணையை விட முக்கியமான நபர் யாராக இருக்க முடியும்? ஆனாலும் கூட காலம் கடக்கையில் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் விரும்புவீர்கள்.