Home உறவு-காதல் உங்கள் மனைவியிடம் கேட்க கூடாத சில அந்த கேள்விகள்

உங்கள் மனைவியிடம் கேட்க கூடாத சில அந்த கேள்விகள்

283

கணவன் மனைவி உறவு:24×7 சந்தோஷமாக, இன்பமாக, மகிழ்ச்சியாக.. அப்படியே ஒருவர் முகத்தை ஒரு பார்த்துக் கொண்டு ஆரத்தழுவி, அரவணைத்து கொஞ்சிக் குலாவி கொண்டே இருந்தால்… அல்லது இருக்கும் வாய்ப்பு, தருணம் அமைந்தால்…. நிச்சயம் சொர்க்கமாக இருந்தாலுமே கூட அப்படியான சூழல் அமையாது. அமைந்தாலும் அந்த வாழ்க்கை நன்றாக இருக்காது.

இதயத்துடிப்பு மேலும், கீழும் இறங்காமல்… மேலேயே போய் கொண்டிருந்தாலுமே கூட நாம் இறந்துவிடுவோம்.. அதை நாமும் அறிவோம். வெற்றி மேல் வெற்றி காண்பதை காட்டிலும், கீழே விழுந்த பிறகு மீண்டும் வெற்றி அடைவதில் தான் ஒரு பெரும் வீரியம் நிறைந்திருக்கும். அப்படியானதாக தான் ஒரு உறவும் இருக்க வேண்டும்.

ஆனால், தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு, எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த 10 விஷயங்களை கேட்டுவிட கூடாது..

சைலன்ஸ்!
சைலன்ஸ் என்பது இருமுனை கத்தி போல. சில சமயம் பல சண்டைகள் உண்டாகாமல் தடுக்க காரணமும் சைலன்ஸ் தான். பல சமயம் சண்டைகள் பெரிதாக காரணமாக இருப்பதும் சைலன்ஸ் தான்.

எனவே, ஒரு ஆகச்சிறந்த காதலனாக / கணவனாக நீங்கள் இருக்க வேண்டும் என்றால்… யுவன் ஷங்கர் ராஜா போல… எந்த இடத்தில் பி.ஜி.எம் ஸ்கோர் செய்ய வேண்டும், எந்த இடத்தில் நிசப்தமாக காட்சியை நகர விட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

முடிஞ்சதா?
பெண்கள் வெளியே செல்லும் வேலைகளில் ரெடியாக சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வார்கள். எனவே, அவர்கள் ரெடியாகிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சென்று முடிஞ்சதா? இன்னுமா ரெடி ஆகுற? லேட் ஆகுது என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். காரணம், நீங்கள் கேள்வி, கேட்க, கேட்க பெண்கள் ரெடியாகும் நேரம் மட்டுமல்ல, உங்கள் மீதான க்ரைம் ரெட் கூடிக் கொண்டே போகும்.

அந்த நாளா? முடிந்த வரை உங்கள் துணையின் அந்த மூன்று நாட்கள் மாதத்தின் எந்த நாளில் வர சாத்தியம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் புருஷ லட்சணம் தான். அல்லது, சென்ற மாதத்தில் உங்கள் மனைவிக்கு எந்த நாளில் பீரியட் ஸ்டார்ட் ஆனது என்பதையாவது மறக்காமல் இருக்க வேண்டும். சிலசமயம் அவர்களே இதை மறக்க வாய்ப்பிருக்கிறது. இது எதுவும் தெரிந்துக் வைத்துக் கொள்ளாமல், திடீரென ஒரு நாள் சென்று அந்த நாள் குறித்த குழப்பமான கேள்விகள் கேட்டால்… நிச்சயம் ஒரு ருத்ரதாண்டவதை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.

செம்மல….! எக்காரணம் கொண்டும்… தெரிந்தோ தெரியாமலோ மற்றொரு பெண்ணின் உடல் வாகினை பற்றி புகழ்ந்து பேசுவதோ, விமர்சிப்பதோ வேண்டாம். அது வேறு பெண்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை… உங்கள் துணையின் தோழி, சகோதரி என யாராக இருந்தாலும் சரி… அதனால் வெளிப்படும் கோபம், தாக்கம், விளைவுகள் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்.

அத சாப்பிட போறியா? ஒருவேளை உங்கள் துணைக்கு பிடித்த உணவு உங்களுக்கு பிடிக்காது என்றாலோ, அல்லது அவர் சாப்பிட போகும் உணவில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது…, அது அதிகம் சாப்பிட்டால் அது வரும், இதுவரும் என்று நொட்டை பேச்சை… அவர்கள் ஆசையாக சாப்பிட செல்லும் போது சொல்ல வேண்டாம். ஒன்று, முன்பே சொல்லிவிட வேண்டும். இல்லையேல்… அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, இடத்தை காலி செய்த பின்… நாசூக்காக… அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை எடுத்துக் கூறுங்கள். சாப்பிட, சாப்பிடு இடையூறு செய்வது முற்றிலும் தவறு. இது சாப்பாட்டில் மட்டுமல்ல.. உடை, அலங்காரம், என அவர்களது மற்ற எல்லா தேர்வுகளுக்கும் பொருந்தும்.

அவ நல்லா பண்ணுவா..! சில சமயம் ஆண்களிடம் வெளிப்படும் கெட்ட பழக்கமே ஒப்பிடுவது தான். ஏதாவது ஆசையாக சமைத்து கொண்டு வந்து கொடுத்தால் நன்றி கூறி சாப்பிட்டு விடுங்கள். அதைவிட்டு… என் அத்தை பொண்ணு நல்லா பண்ணுவா… அம்மா சூப்பரா சமைப்பாங்க… அந்த பிரெண்ட் இதுல எக்ஸ்பர்ட் என்றெல்லாம் வேறு யாருடனாவது ஒப்பீடு செய்தால்.. நாளப்பின்ன உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. ஒருசில நாள் இரவும் பட்டினி போடப்படலாம்.

ஏன் இப்படி எமோஷன் ஆகுற? பெரும்பாலும் ஆண்கள் பெண்களிடம் கேட்கும் கேள்வி இது.. எதுக்கு இப்ப நீ எமோஷனல் ஆகுற… அட காதல், உறவுன்னு வந்தால் அதுல எமோஷன் இருக்க தான் செய்யும். எமோஷன் இருந்தா தான் அது காதல், இல்லறம். ஏனோ.. ஆண்டவன் ஆம்பளைங்க மத்தியில அந்த எமோஷன் கனக்ஷன்ல ஏதோ கோளாறு பண்ணிட்டான் போல, அதனால் தான் நமக்கும் பெரிதாக எமோஷன் வருவதில்லை.. பெண்கள் எமோஷன் ஆனாலும், அதை அடக்கிவிட பார்க்கிறோம். எங்கே அதிக காதலும், அக்கறையும் இருக்கிறதோ.. அங்க எமோஷன் கொஞ்சம் கூடுதலாகவே வெளிப்படும்.

சோம்பேறி… காலையில எழுந்து டீ, காபி போட்டுக்கொடுத்து, டிபன், லன்ச் சமைச்சு… குளிக்க ஹீட்டர் கரக்ட்டா ஆண் பண்ணிவிட்டு.. உங்கள கிளப்பிவிட்டு, அவங்களும் ரெடியாகி ஆபீஸ் போயிட்டு வந்து… கொஞ்சம் சோர்வா இருந்தாலுமே… சாயங்காலம் வந்ததும் டின்னர் ஏற்பாடு பண்ணி… தூங்குறதுக்கு முன்ன, காலையில என்னென்ன சமைக்கணும்னு பிளான் பண்ணி, பாத்திரம் எல்லாம் கழுவி வெச்சிட்டு அக்கடான்னு உட்கார்ந்தா.. பேச்சு வாக்குல… நீ ஏன் சோம்பேறியா இருக்கேன்னு நாம கேட்டுடுவோம்… அப்படி கேட்டீங்கன்னா.. மேல, நீங்க படிச்ச எல்லாத்தையும் கொஞ்சம் எமோஷனோட… காரம் கொஞ்சம் தூக்கலான வார்த்தைகளோட டைரக்ட் ஸ்பீச்ல கேட்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் வரும்.

நீ தான் பண்ணிக்கணும்… கணவன் – மனைவி உறவுல நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு தவறு தான். ஆனா, சின்ன சின்ன எதிர்பார்ப்புகள கூட, இதெல்லாம் நீயே பண்ணிக்க மாட்டியா என்று தட்டி கழிப்பது… அதைவிட பெரும் தவறு. பிறகு எதற்கு காதலன் – காதலி ; கணவன் – மனைவி என்ற உறவு. உண்மையில் நமது உறவினை இணைத்து வைத்திருக்கும் பாலத்தின் ஆரோக்கியம் இந்த சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தான் அடங்கி இருக்கிறது.