Home பெண்கள் பெண்குறி பெண்ணின் அந்தரங்க பகுதியில் புண் வருவது ஏன் தெரியுமா?

பெண்ணின் அந்தரங்க பகுதியில் புண் வருவது ஏன் தெரியுமா?

192

பெணின் அந்தரங்கம்:அந்தரங்க உறுப்பில் புண் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அந்தரங்க உறுப்பு மிகவும் சென்சிவ்வானது. இப்பகுதியில் ஏதேனும் சிறு பிரச்சனை இருந்தாலும், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி பின் பயங்கர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தரங்க உறுப்பில் புண் ஏற்படுவதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அவை என்னவென்று பார்க்கலாம்.

சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் சில நேரங்களில் சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே அந்தரங்க பகுதியில் அதிகமாக சோப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏன் துணிகளில் உள்ள சாயங்களால் கூட சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டு, அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் ஏற்படலாம்.

அந்தரங்க பகுதியில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டாலும், அப்பகுதி காயமடையும். அந்தரங்க பகுதியில் ஹார்மோன் மாற்றங்கள், பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் இதர மருந்துகளாலும் வறட்சி ஏற்படலாம்.

அந்தரங்க பகுதியில் காயங்கள் மற்றும் கடுமையான எரிச்சலை உணர்ந்தால், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட்டிருக்கலாம். இம்மாதிரி உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்.

பிறப்புறுப்பு ஹெர்பெஸ், கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பாலியல் நோய்களாலும் யோனியில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே அந்தரங்க பகுதியில் காயங்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே திசு வளர்ச்சி அடைந்திருந்தால், அதன் காரணமாகவும் யோனியில் காயங்களையும், வலியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.