Home பெண்கள் தாய்மை நலம் பெண்களே வலியில்லாமல் சுகப்பிசவம் ஆக நீங்கள் செய்யவேண்டியது

பெண்களே வலியில்லாமல் சுகப்பிசவம் ஆக நீங்கள் செய்யவேண்டியது

114

தாய்நலம் குறிப்பு:சுகப்பிரசவம் ஏற்பட கொஞ்சம் உடற்பயிற்சியும் நிறைய நம்பிக்கையும் வேண்டும்.

கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம் 1கிலோ எடை கூட வேண்டும்.

மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும்.

15 -20 கிலோவை தாண்டும்போதும் அதன் விளைவால் பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம்.

எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, கோதுமை, கீரை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்கணும்.

3வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, சின்னச் சின்ன எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம்,

இடுப்பெலும்பு விரிய, உட்கார்ந்து, எழுந்திருக்க வேண்டியது மிக முக்கியம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதற்கான பயிற்சிகளை தினசரி அரை மணி நேரம் வீட்டிலேயே செய்யலாம்.

அப்படிச் செய்ததன் பலனாக, 4.5 கிலோ உள்ள குழந்தையைக் கூட, சுகப்பிரசவத்தில் பெற்றடுக்க வாய்ப்பு உள்ளது.

ஒருக்களித்துதான் படுக்க வேண்டும். முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக் கொள்ளலாம்.

முதல் பிரசவத்தில் தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம்.

உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சுகப்பிரசவத்திற்கென பிரத்யேக ஆசனங்கள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும். இது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்.