Home இரகசியகேள்வி-பதில் நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவுகள் -இவற்றின் பாதிப்புகள்

நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவுகள் -இவற்றின் பாதிப்புகள்

42

கேள்வி : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவுகள் -இவற்றின் பாதிப்புகள் எப்படி இருக்கும்?இவற்றின் முக்கியமான அறிகுறிகள்என்னென்ன? நரம்புத் தளர்ச்சி நீங்கமருந்துகள் என்னென்ன?

பதில் : நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லறவாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடையமுடியாமையை ஆண்மைக்குறைவு என்கி றோம்.இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லா மலும்போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பலகாரணங்கள் உள்ளன.

1. நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல்மனதில் அமைதி இல்லாதவர்கள்.

2. நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோதண்டுவடம் பழுதடைந்து விடுதல்.

3. குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும்வழக்கம்.

4. காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிகஅதிக அளவு சேர்த்துக் கொள்ளுதல்.

5. இரவில் தேவைக்கும் அதிகமாக உணவைஉட்கொள்வது.

6. விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்றகொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால்சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சிஏற்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள்கீழேயுள்ள அறிகுறிகளைக் கொண்டு நரம்புத்தளர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

அ. தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்புவிரைவில் துவண்டு விடுதல்.

ஆ. விரைப்பு இருந்த போதிலும் விந்துவெளியேறி விடுவது.

இ. விந்து வெளியேறாமலேயே இருப்பது.

இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின்காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும்இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும்.இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல.ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள்மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால்பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்லஎண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வேஅஸ்தமனமாகிவிட்டது என்று தவறாகப் புலம்பக்கூடாது. குடிப்பழக்கம் இருந்தால் அதனைக்கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர் குளியல்செய்யலாம். ஒரே வேலை வேலை என்றுஇருக்காமல் குடும்பத்தாருடன் ஓய்வுஎடுத்துக்கொள்ள வேண்டும். மனதைவேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம்,மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலானநரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

கேள்வி : ஒரு பெண்ணுக்கு வெள்ளைப்படுதல்உள்ளது என்பதை எப்படி அறிந்துகொள்வது? அறிகுறிகள் என்னென்ன?இதனால் பெண் உறுப்பு எப்படிபாதிக்கப்படும்?

பதில் : பொதுவாக பெண்களின் கருப்பையானதுவலுவிழந்து பலவீனமடையும் காலங்களில்வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. இளம் வயதுமுதல் முதிய வயது வரை எந்த வயதிலும் இதுபெண்களைத் தாக்கலாம். உறுப்பில் இருந்துமிகுந்த வலியுடன் துர்நாற்றத்துடன் ஒரு விததிரவம் வெளியேறுவதையே வெள்ளைப்படுதல்என்கிறோம். இரு ஒரு பெண்ணைத்தாக்கியுள்ளது என்பதை பின்வரும் அறிகுறிகளால்அறிந்து கொள்ளலாம்.

1. உறுப்பில் இருந்து கெட்ட வாடையுடன் வரும்திரவம்.

2. இரத்தம் கலந்த திரவம்.

3. இந்த சமயத்தில் இடுப்பு, அடி வயிறு மற்றும்காலில் வலி ஏற்படுதல்.

4. உடல் எடை குறைந்து மெலிதல்.

5. சிறுநீரக எரிச்சல்

6. களைப்பு ஏற்படுதல்

7. உறுப்பில் நமைச்சல், எரிச்சல் மற்றும் புண்ஏற்படுதல்.

கேள்வி 5 : பால்வினை நோயால் வெள்ளைப்படுமா?இதனால் நரம்புகள் பாதிப்படையுமா?வெள்ளைப்படுவதால் குழந்தையில்லாமல்போகுமா?

பதில் : கருப்பையின் வாயில் புண் இருப்பவர்களுக்கும்பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோருக்கும்வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அடிக்கடிகருக்கலைப்பு செய்து கொள்ளும்போது கருப்பைபுண், கருப்பையில் கட்டி அல்லது தசை வளர்ச்சி,டி.பி. புற்று நோய் மற்றும் நுண் கிருமிகளால்கருப்பை பாதிக்கப்படல், மாதவிலக்குக்காலங்களில் பயன்படுத்தப்படும் பருத்திதுணிகள்பெண்ணுறுப்பினுள் தங்கி விடுதல் போன்றகாரணங்களாலும் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.

இதனால் நரம்புகள் விரிவடைந்து கருப்பைமீதுபட்டு வலுவிழந்து விடும். வெள்ளைப்படுதலால்கரு முட்டைகள் கருப்பையைச் சென்றுஅடையாமல் வெளியேறுகிறது. ஆகவே,வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டோர்கருவுறுதலுக்கான வாய்ப்புகள் ஏற்படுவதில்லை.குழந்தை பாக்கியம் பெரும்நிலையும் இல்லாமல்மன வேதனைதான் மிஞ்சும். இதனால்பாதிக்கப்பட்ட பெண் தப்பித்தவறி கருவுற்றாலும்கரு முழுமை பெறும் என்று கூற முடியாது.