Home இரகசியகேள்வி-பதில் எனக்கு பெண்ணாக மாறவேண்டுமென்ற ஆசையும் உள்ளுணர்வும் அதிகமாக உள்ளது

எனக்கு பெண்ணாக மாறவேண்டுமென்ற ஆசையும் உள்ளுணர்வும் அதிகமாக உள்ளது

114

கேள்வி:- என் மனைவிக்கு நான் மற்ற பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என்ற சந்தேகம் இருக்கிறது. இதை தீர்ப்பது எப்படி?

பதில்:- எனக்கு வேறு எந்த பெண்ணிடமும் ஈடுபாடு இல்லை என்று கூறிக்கொண்டே அருகிலுள்ள பெண்ணை நோட்டமிட்டால் மனைவியின் சந்தேகத்தை தீர்ப்பது கடினம். உங்களது செய்கை, பாவனைகளே உங்கள் மனைவியின் சந்தேகங்களை போக்கும்.. உங்களது நன்னடத்தையையும் மீறி அவர் உங்களை சந்தேகித்தால் இருவரும் ஒரு உளவியல் ஆலோசகரின் ஆலோசனை பெறுவது நல்லது.

கேள்வி:- நான் 5 வருடங்களுக்கு முன் ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டேன். எந்த நோயும் இல்லை. ஆனால் எனக்கு பல நிறங்களில் மலம் வருகிறது. மிகவும் பயமாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

பதில்:- அமீபியாசிஸ் எனப்படும் ஒருவகை குடல் அழற்சியாக இருக்கலாம். கிருமிகளால் வரும் குடல் அழற்சியில் பல நிறத்தில் மலம் கழியும், குறிப்பாக பச்சை நிறத்தில் நுரைத்துவரும். உணவகங்களில் அசைவம் & மசாலா கலந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பழங்கள் அதிகம் சாப்பிட்டு நீர் நிறைய குடிக்க வேண்டும். இது பெரிய வியாதியல்ல. பயப்பட வேண்டாம். இது பால்வினை நோயல்ல. சுகாதரமற்ற உணவை சாப்பிடுவதால் வரும் நோய். மலத்தை பரிசோதனை செய்யவும். கட்டாயம் மருத்துவரை ஆலோசிக்கவும்

கேள்வி:- எனக்கு வயது 30. நான் 8 வருடங்களாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். என் வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறார்கள்.என்னை மாற்றிக்கொள்ள வழி உண்டா? எனக்கு பயமாக உள்ளது.

பதில்:- ஓரின சேர்க்கை நல்லதல்ல. உங்களின் ஓரின சேர்க்கை நண்பர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடுங்கள். அவர்களின் இடத்திற்க்கு போகாதீர்கள். உங்களுக்காக பெற்றோர் நிச்சயித்திருக்கும் பெண்ணுடன் பேசி பழகுங்கள். கண்டிப்பாக மாற வாய்ப்பு உண்டு.

கேள்வி:- மனைவி கருவுற்றிருக்கும் போது காலத்தில் உடலுறவு கொள்ளலாமா?

பதில்:- மனைவிக்கு வாந்தி, தலைச்சுற்றல் சோர்வு ஆகிய கர்ப்பம் சார்ந்த பிரச்னைகள் இல்லாதபோது மென்மையான உடலுறவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கேள்வி:- நான் என் காதலனுடன் 2 வருடங்களாக உடலுறவு வைத்துள்ளேன். இதற்கு முன் எனக்கு மாதவிடாயில் பிரச்னை இருந்ததில்லை. இப்போது சரியாக வருவதில்லை. ஸ்கேன் செய்ததில் எந்த நோயும் இல்லை என்றார்கள். இந்த பிரச்னைக்கு என்ன காரணம்?
பதில்:- திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. உங்களது வயதை குறிப்பிடாமல் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம். மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்.

கேள்வி:- எனக்கு பெண்ணாக மாறவேண்டுமென்ற ஆசையும் உள்ளுணர்வும் அதிகமாக உள்ளது. தனிமையிலிருக்கும் போது எனது சகோதரியின் ஆடையை அணிந்துகொள்கிறேன். என்னை பெண்ணாக மாற்றிகொள்ள வழி உண்டா?

பதில்:- சில சமயங்களில் மனநிலையில் பல்வேறு காரணங்களால் இவ்வகை மாற்றம் ஏற்படலாம். பொதுவாக இது தற்காலிகமானது. பெண்ணைப் போன்றே ஆடை அணிய, முடியை வளர்த்துக்கொள்ள, நகைகள் அணிய ஆசை ஏற்பட்டால் மருத்துவர் அல்லது உளவியல் ஆலோசகரை தயக்கமின்றி அணுகி ஆலோசனை பெறவும்.

கேள்வி:- சுய இன்பம் செய்தால் சுறுசுறுப்பாக இருக்கமுடியுமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

பதில்:- பாலியல் தொடர்பு ஒரு அடிப்படைத் தேவை. சுறுசுறுப்பு கிடைக்குமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாயத்தின் கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு ஏற்படாதா என்பதும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. இருந்தபோதும் அதிகப்படியான சுய இன்பத்தால் உடலிலும் உள்ளத்திலும் சோர்வும் தளர்வும் ஏற்படலாம். எனவே கட்டுப்பாடுடன் செய்வது நல்லது.