Home பாலியல் மார்னிங் செக்ஸ்! அதிக பயன்தரும் ரொமாண்டிக் உடற்பயிற்சி

மார்னிங் செக்ஸ்! அதிக பயன்தரும் ரொமாண்டிக் உடற்பயிற்சி

165

பாலியல் தகவல்:உலகில் பிறந்த எந்த ஜீவராசிக்கும் செக்ஸ் என்பது இன்றியமையாத ஒன்று. குறிப்பாக மனிதப் பிறவிகளுக்கு. செக்ஸ் இல்லாமல் வாழும் மனிதர்கள், வாழ்வில் முற்றுப் பெறாத மனிதர்கள் தான் எனலாம். இதில் பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், செக்ஸ் இல்லாத வாழ்க்கை முழுமைப் பெறாது. அது ஆணாக இருந்தாலும் சரி… பெண்ணாக இருந்தாலும் சரி! இருப்பினும், அந்த செக்ஸ் முறைதவறி போகும் போது தான் பிரச்சனைகள் உருவாகின்றது.

ஒரு கணவன், தனது மனைவியுடன் உடலுறவு கொண்டால் கூட, அதில் காதல் கலந்து இருக்க வேண்டும். மனைவி என்பதற்காக அத்துமீறுதல் இருந்தால் அது காட்டுமிராண்டித் தனமாகிவிடும். தன்னவளின் மனம் அறிந்து அவளுடன் கலவி கொள்பவனே உண்மையான கணவனாக இருக்க முடியும்.

குறிப்பாக, காலை வேளையில் உடலுறவு கொள்ளும் போது என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

* காலையில் எழுந்திருக்கும் போதே, மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது, மூளை மிகவும் சுறுசுறுப்பாகிறதாம். மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் மூளை இயங்குமாம். எட்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு, மனைவியிடம் காதல் செய்யும் பழக்கம், உங்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு உங்கள் மூளை நரம்புகளை உற்சாகமாக செயல்பட வைக்கிறதாம்.

* காலையில் உடலுறவு கொள்வதால், உடலில் உள்ள IgA எனப்படும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். நோய் தொற்றுகளை எதிர்ப்பதற்கு இது உதவுகிறதாம்.

* காலையிலேயே உடலுறவு கொள்வதால், அந்த நாள் முழுவதும் உங்களது எண்ணம் நேர்மையாகவே இருக்குமாம். அந்நாளில் என்ன நடந்தாலும், உங்கள் மனம் நேர்மறையாகவே சிந்திக்குமாம். இதனால், நீங்கள் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியுமாம்.

* தலைவலி ஏற்பட்டால், காலையில் உடலுறவு கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால், தலைவலி மட்டுமல்லாது, உடலின் மற்ற வலிகள் குறித்த சிந்தனையே உங்களுக்கு உருவாகாதாம்.

* உடலின் ரத்த ஓட்டம் அதிகரிப்பதற்கும், இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் இது உதவுகிறதாம். குறிப்பாக பெண்கள் காலையில் உடலுறவில் ஈடுபடும் போது, ஆக்ஸிகோன்டின் எனும் ஹார்மோன் வெளியேற்றப்படுவதால், இரத்தம் அழுத்தம் குறைகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.