Home ஆரோக்கியம் 35 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் இயல்பானதா?

35 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் இயல்பானதா?

32

மாதந்தோறும் 28 நாள்கள் அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வந்தால்தான் அது ஒழுங்கான மாதவிடாய் என்கிற கருத்து, பல காலமாக நம் எண்ணங்களில் இருக்கிறது. மருத்துவரீதியாக அது உண்மைதானா? இன்றைய வாழ்க்கைமுறையால் மாதவிடாய் ஒழுங்கில் மாற்றங்கள் நிகழ்வது பயப்படும் விஷயமா என்பது குறித்து பார்க்கலாம்.

“மாதந்தோறும் 28 அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வருவதை ஒழுங்கான மாதவிடாய் எனச் சொல்வது சரிதான். ஆனால். அது மட்டுமே ஒழுங்கான பீரியட்ஸ் கிடையாது. 30 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வருபவர்களுக்கு மாதந்தோறும் ஒரே தேதியில் ஏற்படலாம். இதுவே 28 நாள்களுக்கு ஒருமுறை வருபவர்களுக்கு எப்படி ஒரே தேதியில் வரும்? ஆனால், அதுவும் ஒழுங்கான மாதவிடாய் என்பது காலங்காலமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணுக்கு ஜனவரி 28-ம் தேதியில் பிரீயட்ஸ் வருகிறது என்றால், பிப்ரவரியில் 26-ம் தேதியே வந்துவிடும். அடுத்த மாதம் இன்னும் இரண்டு நாள்கள் முன்னதாக வரும். இதுவும் ஒழுங்கான மாதவிடாய்தான்.

21 நாளிலிருந்து 35 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வருவது என்பதே நார்மலான விஷயம்தான்.

அப்படியானால் மாதவிடாய் பிரச்னை என்பதுதான் எது? 21 நாள்களுக்கோ, 35 நாள்களுக்கோ ஒருமுறை வந்துகொண்டிருந்த மாதவிடாய், திடீரென்று 40 நாள்கள் தள்ளியோ அல்லது இஷ்டத்துக்கு மாறி வந்தால், உடம்பில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உங்கள் உடம்புக்கு என ஒரு சைக்கிள் இருக்கும். அது மாறாமல் தொடர வேண்டும், அவ்வளவுதான். இது தவறுகிறபட்சத்தில், தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை, பாலிசிஸ்டிக் ஓவரிக்கான ஸ்கேன், கொலாஸ்டின் ஹார்மோன் டெஸ்ட் போன்ற மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

இன்றைய பரபரப்பான காலத்தில், ஸ்ட்ரெஸ் காரணமாகவே பெரும்பாலும் ஒழுங்கற்ற பீரியட்ஸ் உண்டாகிறது. அடுத்து, நைட்ஷிப்ட் வேலை. பகல் வெளிச்சத்தில் வேலை செய்வதும், இரவின் இருளில் ஓய்வும் உறக்கமும் எடுப்பதுமே இயற்கை உருவாக்கியிருக்கும் ரிதம். இது, இன்றைய நவீன யுகத்தில் மனிதர்கள் மாற்றியமைக்கும்போது ஹார்மோன்களில் சுருதி தப்புகிறது. இதுவே இர்ரெகுலர் பீரியட்ஸாக மாறுகிறது.

ஒரு பெண்ணுக்கு வருடத்துக்கு 11 முதல் 13 மாதவிலக்குகள் வந்தால், ‘ஷீ இஸ் ஃபைன்’ என்று அர்த்தம். சிலருக்கு 10 நாள்கள், 12 நாள்களிலேயே பீரிய்ட்ஸ் ஆகும். இதுவே அப்நார்மல். ஆனால், பெரிய மனுஷியான முதல் வருடத்திலிருந்தே 7 நாள்களில் பீரியட்ஸ் வரும். இது நார்மல்தான். அப்போது, 2 முதல் 7 நாள்கள் வரை பீரியட்ஸ் ஆவது என்பது அவரவர் குடும்ப மரபணுவைப் பொறுத்தது. இதில் பயப்பட ஒன்றுமில்லை.