Home ஆண்கள் ஆண்களின் ஆணுறுப்பு தாம்பத்திய உறவால் பாதிப்படையும் சில செயல்கள்

ஆண்களின் ஆணுறுப்பு தாம்பத்திய உறவால் பாதிப்படையும் சில செயல்கள்

180

ஆணுறுப்பு பிரச்னைகள்:ஒரு மனிதனின் முழு சந்தோஷமும் அவன் வாழ்க்கையில் அடையும் மகிழ்வான செயல்களை பொறுத்தே அமைகின்றது. சிறு வயது முதலே பல ஆரோக்கியமான நிகழ்வுகள் அவன் வாழ்வில் நடந்து இருக்கும். அந்த வகையில் விளையாட்டு, படிப்பு, உண்ணும் உணவு, நண்பர்கள், சுற்றுசூழல் இவையே சிறு வயதில் பிராதான விஷயங்களாக கருதப்பட்டது. அதன் பிறகு வாழ்க்கை சூழல் மாற மாற, அதற்கேற்றாற் போல மனிதனும் நகர தொடங்கினான். வளர்ந்து அடுத்த பருவத்தை அடைந்த உடன், பல மாற்றங்கள் நிகழ தொடங்கும். இதில் மிக முக்கிய நிலை வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது.

குறிப்பாக இருவரும் மிகவும் மகிழ்வான ஆரோக்கியமான வாழ்வை வாழ்தலே. ஆனால், பல நிலைகளில் இவர்கள் இருவரும் தங்களின் வாழ்வில் இன்பமாக இருப்பது இல்லை. காரணம் தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாமையே. இந்த பதிவில் ஆண்கள் எந்த உணவுகளையெல்லாம் சாப்பிடுவதால் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் இன்பத்தை அடைய விடாமல் செய்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆணும், பெண்ணும்… இந்த உலகில் ஒரு உயிரினத்தை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால், அதற்கு முதலில் இருவரும் இணைய வேண்டும். அவ்வாறு அவர்கள் காதலோடு தங்கள் இணையுடன் சேரும்போது மகிழ்வான இல்லற வாழ்வை மேற்கொண்டு, நல்ல முறையில் ஒரு உயிரை பெற்று எடுப்பார்கள். இது பல நேரங்களில் இருவருக்கும் தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் தடைபட கூடும்.

சுத்தமான பற்கள் இல்லையா..? பற்களின் சுத்தம் மிகவும் இன்றியமையாததாகும். பல ஆய்வுகளும் இதை பற்றி விரிவாக ஆய்துள்ளது. ஆண்களின் பிறப்புறுப்பு பாதிப்படைய பல் நோய்களும் ஒரு மிக பெரிய காரணமாக இருக்கிறதாம். பற்களின் பாக்டீரியாக்கள் ரத்த நாளங்கள் வழியாக உங்கள் பிறப்புறுப்பை அடைந்து அதற்கு பாதிப்பை தருமாம்.

அதிக இனிப்பு வேண்டாமே..! பொதுவாக இனிப்பு பொருட்கள் என்றாலே அவை பல விதத்திலும் நம் ஆரோக்கியத்தை கெடுக்க கூடியது. அதிக அளவில் இனிப்பு பொருட்களை நாம் உணவு பழக்கத்தில் சேர்த்து கொண்டால் அது உடல் நலனை முற்றிலுமாக கெடுத்து விடும். மேலும், தாம்பத்தியத்தில் இன்பத்தை குறைத்து விடும். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பில் விறைப்பு தன்மையை தந்து இதன் செயல்பாட்டை குறைத்து விடும்

தூக்கமில்லை..! இன்பமுமில்லை..! ஒரு மனிதன் எவ்வளவு உழைக்கின்றானோ அதே அளவிற்கு அவன் கட்டாயம் நல்ல தூக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்கள் 7 முதல் 8 மணி நேரம் தினமும் உறங்கவில்லை என்றால் அது டெஸ்டோஸ்டெரோன் அளவை குறைத்து பிறப்புறுப்பு தசைகளில் பாதிப்பு ஏற்படுத்தும். அத்துடன் இது பசியின்மை, அதிக சோர்வு போன்றவற்றையும் தரும்.

கார்ப்ஸ் செய்யும் வேலைகள்..! உணவில் அதிகமாக கார்போஹைடிரேட் சேர்த்து கொண்டால் அது சீரான உடல் செயல்பாட்டை ஏற்படுத்தாது. எனவே இது ஆண்களின் பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை குறைத்து, தாம்பத்தியத்தில் நல்ல பலனை அடைய விடாமல் தடுக்கும். அத்துடன் இதய கோளாறுகள் போன்றவற்றையும் இது ஏற்படுத்தும்.

தர்பூசணியை தவிர்க்காதீர்..! டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தது. அவற்றில் ஒன்று இந்த தர்பூசணியை தவிர்ப்பவர்கள் விறைப்பு தன்மையை அதிகம் அடைவார்கள் என அறிந்தனர். அதாவது, தர்ப்பூசணி சாப்பிடுவோர் நல்ல ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்வை மேற்கொள்வதாக கூறுகின்றனர்.

உடற்பயிற்சியும் பிறப்புறுப்பும்… பிறப்புறுப்பில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த உடற்பயிற்சி இன்மையும் தான். சிலர், சரியான உடற்பயிற்சி செய்யாததால் உடலின் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இல்லாமல் போய்விடும். அத்துடன் இல்லற வாழ்விலும் இது இன்பத்தை தராது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.

ஜங்க் உணவுக்கு நோ…! இன்று பல ஆண்கள் செய்யும் மிக பெரிய தவறு இந்த ஜங்க்உணவு அதிகம் சாப்பிடுவதே. பசிக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு விடுவதால் இது அவர்களின் முழு ஆரோக்கியத்தையும் சீர் கேடு அடைய வைக்கிறது. சிப்ஸ், கேக், பதப்படத்தாத உணவுகள் போன்றவை விந்தணுவின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்து குழந்தை இன்மை பிரச்சினைக்கு வழி வகுக்கிறது

புகை பிறப்புறுப்புக்கும் பகை..! பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அவற்றில் ஒன்றுதான், புகை பழக்கம் கொண்ட ஆண்களின் பிறப்புறுகள் அதிக விறைப்பு தன்மை ஏற்பட்டு இல்லற வாழ்வில் ஈடுபட முடியாமல் செய்து விடும். அத்துடன் இதில் உள்ள நிகோடின் என்னும் நச்சு பொருள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

ஒரே இடத்தில பல மணி நேரம்… ஆண்கள் யாரெல்லாம் ஒரே இடத்தில பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு மிக மோசமான உடல் சூழல் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களின் பிறப்புறுப்புகள் அதிகம் பாதிப்படையும் எனவும் கூறுகின்றனர்.

போதுமான தாம்பத்தியம்… எந்த ஒரு விஷயமும் அளவுக்கு அதிகமாகவும் போக கூடாது, அளவுக்கு குறைவாகவும் இருக்க கூடாது. அந்த வகையில் ஆண்கள் தங்கள் இல்லற வாழ்வில் போதுமான இன்பம் கொள்ளவில்லை என்றால் அதுவும் அவர்களின் பிறப்புறுப்பை பாதிக்க செய்யுமாம். மேலும் அளவுக்கு மிஞ்சின தாம்பத்தியமும் தேவை அற்றது. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.