Home ஆண்கள் ஆண்களை விந்தணுவை அதிகரிக்க பெரியவர்கள் சொன்னவை இவை

ஆண்களை விந்தணுவை அதிகரிக்க பெரியவர்கள் சொன்னவை இவை

753

ஆண்களின் விந்தணு:ஆண்களுக்கான பிரச்சினைகளில் முதன்மையானதாக கருதப்படுவது இந்த விந்தணு கோளாறுகள் தான். இன்று பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் இதே பிரச்சினையால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. இதை குணப்படுத்துவதாக சொல்லி பல்வேறு மருந்துகள் சந்தையில் வந்து குவிகிறது. இதனை தொடர்ந்து ஒரு வியாபாரமாகவே மாற்றி விட்டனர்.

நாமும், இதில் விற்கப்படும் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம். பிறகு, இதனால் ஏற்பட கூடிய விளைவுகள் தான் அதிகமே தவிர, பயன்கள் எதுவும் இருக்காது. விந்தணு கோளாறுக்கான தீர்வை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அவை என்னென்ன முறைகள் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

ஆண்களுக்கான பிரச்சினை…! இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் நம்மை பாதிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய பழக்க வழக்கங்கள் இங்கு அதிகம் உள்ளது. சீரற்ற உணவு முறை, ஸ்மார்ட் போன் பயன்பாடு, மருந்துகள் என பல காரணிகள் ஆண்களின் பிரச்சினைக்கு உறுதுணையாக இருக்கிறது.

சேது பந்தாசனம் இது ஆண்களுக்கான மிக முக்கிய ஆசனமாகும். விந்தணு எண்ணிக்கையை சீராக அதிகரிக்க இந்த ஆசனம் உதவும். மேலும், பிறப்புறுப்புகளில் ரத்தை ஓட்டத்தை சமமான அளவில் வைத்து கொள்ளும். விந்தணுவின் நீந்து தன்மையும் இந்த ஆசனம் விரைவாக்கும்.

ஆசன முறை… இந்த ஆசனத்தை செய்ய, முதலில் முது பக்கம் தரையில் படுவது போன்று படுத்து கொள்ள வேண்டும். அடுத்து, முழங்காலை மடக்கி கொண்டு, கால்களையும் கைகளையும் தரையில் வைத்து கொள்ளவும். இந்த நிலையில் உடலை மேலே தூக்க மூச்சை மெல்ல இழுத்து விடவும். இதே நிலையை மீண்டும் மீண்டும் செய்து வந்தால் விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அக்னிசார் க்ரியா நமது முன்னோர்கள் விந்தணு பிரச்சினைக்காக பயன்படுத்திய முதன்மையான முறைகளில் இது மிக முக்கியமான ஆசனமாகும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலே விந்தணு பிரச்சினைகள் தீர்ந்து விடும். மேலும், தாம்பத்தியத்தில் அதிக திறனுடன் செயல்படவும் முடியும்.

பயிற்சி முறை… முதலில் கால்களை கீழே வைத்து கொண்டு அதன்மீது அமரவும். பிறகு கைகளை தொடையின் மீது வைத்து விரல்களை மடக்கி வைக்கவும். இப்போது வயிற்று பகுதியில் மூச்சை உள்ளிழுத்து விரைவாக வெளியே விடவும். தொடர்ந்து இதே பயிற்சியை 20 வினாடிகள் வரை செய்யவும். பின்பு மூச்சை வாயின் வழியாக வெளியிடவும்

அர்த மத்ஸ்யேந்திர ஆசனம் இந்த ஆசன முறையானது மிகவும் சிறந்த பயிற்சியாகும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விந்தணுவின் செயல்திறன் கூடும். மேலும், விந்தணு குறைபாடு உள்ளவர்களுக்கு இது முற்றிலும் பயன்படும்.

பயிற்சி முறை… இந்த ஆசனத்தை செய்ய முதலில் இரண்டு கால்களையும் நீட்டி கொண்டு, பின் வலது காலை இடது காலின் மேல் போட்டு விட்டு, இடது காலை வலது காலிற்கு அடியில் வைத்து கொள்ளவும். அடுத்து, இடது கையை வலது காலின் கட்டை விரலை பிடிக்கும்படி செய்யுங்கள். அத்துடன் வலது கையை முதுகுக்கு பின்புறம் வைத்து கொள்ளவும். இந்த நிலையில் மூச்சை இழுத்து மெல்லமாக விடவும்.

தனுராசனம் தனு என்பதற்கு “வில்” என்ற அர்த்தம் உண்டு. இந்த ஆசனம் செய்ய, வில்லை வளைப்பது போன்று நம் உடலையும் வளைக்க வேண்டும். இவை விறைப்பு தன்மை, ஆண்மை குறைபாடு, விந்தணு உற்பத்தி குறைபாடு போன்றவற்றை குணமாக்கும். எனவே, ஆண்களுக்கான எல்லா பிரச்சினைகளையும் இது சரி செய்து விடும்.

பயிற்சி முறை… இந்த ஆசனத்தை செய்ய முதலில் குப்பற படுக்க வேண்டும். அடுத்து இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொண்டு, நெஞ்சை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உங்கள் உடலை வளைத்து பயிற்சி செய்தால் விந்து கோளாறுகள் நீங்கும்.

ஆசன முறை #1… இரு கால்களையும் சேர்த்து வைத்து கொண்டு நேராக நிற்க வேண்டும். பிறகு இரு கைகளையும் தலை மேல் தூக்கி நிறுத்தி கொண்டு, கழுத்துக்கு கீழே உள்ள பகுதிகளை பின்பக்கமாக சாய வைக்க வேண்டும். அடுத்து இதே நிலையில் முன்னால் குனிந்து கொள்ளவும். இப்போது கணுக்காலை தொட முயற்சி செய்யுங்கள். பின் மூக்கால் முழங்காலை தொடவும்.

ஆசன முறை #2… இடது காலை ஒட்டி இரு கைகளையும் தரையில் வைக்கவும். இப்போது வலது காலை முன்னால் கொண்டு வந்து மடக்கி, உடலை பின்னல் தள்ள வேண்டும். பிறகு, உடலின் மேல் பகுதியை பின் பக்கமாக தூக்கி நிறுத்துங்கள். அடுத்து இரு கால்களையும் சேர்த்து வைத்து கொண்டு, இடுப்பு பகுதியை மேல் செல்லுமாறு வைக்கவும். இந்த நிலையில் கை மற்றும் கால்களில் மொத்த எடையையும் தரவும். இவ்வாறு தொடர்ந்து முடிந்த வரை செய்யலாம்.

ஹலாசனம்- பயிற்சி முறை #1… விந்தணுவின் நீந்து தன்மையை அதிகரிக்க இந்த பயிற்சி நன்கு உதவும். முதலில் மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும். அடுத்து இரு கால்களையும் மேலே தூக்கவும். இப்போது இரு கைகளையும் இடுப்பு பகுதியை பிடித்து கொள்ளுமாறு வைத்து கொள்ளவும். பிறகு கைகளின் உதவியோடு தலையை தவிர முழு உடலையும் மேலே தூக்கி நிறுத்தவும். இந்த நிலையில் கால்கள் செங்குத்தாக மேல் நோக்கி நிறுத்தவும்.

பயிற்சி முறை #2… அடுத்து, உங்களின் முழு உடல் எடையையும் தோல் பகுதிக்கு கொண்டு வந்து, கால்களை எதிர் பக்கமாக நீட்டி கொள்ளுங்கள். இந்த நிலையில் கால் கட்டை விரல் மட்டுமே தரையில் பட வேண்டும். இந்த ஆசன நிலையில் உங்களால் முடிந்த அளவிற்கு இருங்கள். மீண்டும் இதே பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.