Home பெண்கள் தாய்மை நலம் பெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் உண்டாகும் நன்மைகள்

பெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் உண்டாகும் நன்மைகள்

82

தாய் நலம்:தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.

* தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் கருப்பை வேகமாகச் சுருங்கும். குழந்தை பேருக்கு முன் இருந்த உடல் போல் மாற அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

* தாய்ப்பால் கொடுத்தல், உடல் எடை பிரசவத்திற்கு பிறகு மளமளவென ஏறாமல் தடுக்கச்செய்யும்.

* தாய்ப்பால் கொடுப்பது ஒரு கருத்தடை முறையாகவே பார்க்கப்படுகிறது.

* அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்த நோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர் ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை.

* அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* தாய்ப்பால் கொடுப்பது கர்ப்பப்பை புற்று நோயிலிருந்தும் மார்பகப் புற்றுநோயிலிருந்தும் காக்கிறது.