Home ஆண்கள் ஆண்மையை அதிகரிக்க எளிமையாக கிடைக்கும் இந்த காய்கனிகள்

ஆண்மையை அதிகரிக்க எளிமையாக கிடைக்கும் இந்த காய்கனிகள்

334

ஆண்மை அதிகரிப்பு:இன்று எல்லா துறைகளிலும் நாம் முன்னேறி வருகின்றோம். அறிவியலின் வளர்ச்சி நம்மை விண்வெளி வரைக்கும் அழைத்து சென்றுள்ளது. இன்னும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதே நிதர்சனம். இத்தகைய வகையில் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இன்னும் இவை பாமர மக்களுக்கு சென்றடையவில்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு என்றாலும் அவை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இல்லையேல் அவற்றின் மதிப்பும் அவசியமும் குறைந்து விடும். பல வகையான நோய்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இருப்பினும் சில முக்கிய வியாதிகளுக்கும், குறைபாடுகளுக்கும் மருந்துகள் இல்லாமலே நாம் உண்ணும் உணவை வைத்தே நம்மால் சரி செய்ய இயலும். இந்த பதிவில் ஆண்கள் அதிகம் வேதனைப்பட காரணமாக இருக்கும் விந்தணு குறைபாட்டை குணப்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

ஆண்களுக்கான முதன்மை பிரச்சினை..! ஆண்கள் பருவம் அடைந்த பிறகு அடுத்த நிலையாக திருமண வயது வரும். இந்த நிலையில் ஒரு ஆண், தனது இணையை தேர்ந்தெடுப்பது இயல்பே. இவர்கள் இருவரும் சேரும்போது அவர்களுக்கான இல்லற வாழ்வு தொடங்கும். ஆனால், இன்று பலர் இதனை கண்டே மிகவும் அச்சம் கொள்கின்றனர். தன்னால் ஒரு உயிரை உருவாக்க இயலுமா முடியாதா..? என்ற குழப்பமே அவர்களை பாடாய் படுத்துகிறது.

பயம் ஏன்..? பெண்களுக்கு ஒரு வித ஹார்மோன் பிரச்சினை, குறைபாடு, கர்ப்பப்பை கோளாறுகள் போன்றவை ஒரு பக்கம் இருந்தால், ஆண்களுக்கு வேறு சில பிரச்சினைகள் இருக்கிறது. ஆண்களுக்கு ஆண்மை குறைவு, விந்தணு குறைபாடு, விறைப்பு தன்மை, மலட்டு தன்மை ஏற்படுகிறது. இதனாலே பல ஆண்கள் இல்லற வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருக்கின்றனர்.

எந்த வகை காய், கனிகள்..? பொதுவாக எல்லா வகையான உணவுகளையும் நாம் உண்போம். ஆனால், உணவுகளுக்கென்று ஒரு சில வரையறை இருக்கிறது. அந்த வகையில் விந்தணு குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய முக்கிய உணவுகளை கட்டாயம் அறிந்து அதன்படி பின்பற்ற வேண்டும். அதிக ஃபோலேட், ஜின்க், வைட்டமின் பி12, ஒமேகா 3, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் டி போன்றவை அதிகம் உள்ள காய் கனிகளை உண்டாலே இதனை பெரிதும் குணப்படுத்தி விடலாம்.

வாழைப்பழம் நாம் வாழைப்பழத்தை சாதாரணமான பழமாக கருதி உண்போம். ஆனால், இவற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. வைட்டமின் எ, பி1, சி போன்றவை இவற்றில் அதிகம் இருப்பதால் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும். வாழைப்பழத்தில் உள்ள Bromelain என்ற நொதி, விந்தணு செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

முளைக்கீரை கீரைகளை இன்று நாம் உணவில் சேர்த்து கொள்ளும் பழக்கத்தையே மறந்து வருகின்றோம். விந்தணு குறைபாட்டை முற்றிலுமாக குணப்படுத்தும் ஆற்றல் முளைக்கீரைக்கு உள்ளதாம். இவை, விந்தணுக்கள் கரு முட்டையை அடைந்து ஆரோக்கியமான கருவை உருவாக்க வழி செய்கிறது. மேலும் விந்துகளின் உற்பத்தியையும் கூட்டுகிறது.

தக்காளி உணவில் பெரும்பாலும் நாம் சேர்த்து கொள்ளும் இந்த தக்காளியில் உள்ள lycopene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் விந்துகளின் ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்து வரும் ஆண்களின் விந்தணுக்கள் அதிக ஆரோக்கியம் கொண்டதாக இருக்கிறது என பல ஆய்வுகளும் சொல்கிறது.

ப்ரோக்கோலி வைட்டமின் பி9 மற்றும் போலிக் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ள ப்ரோக்கோலி பெண்களுகளின் மலட்டு தன்மையை போக்கும் ஆற்றல் பெற்றது. அத்துடன் ஆண்களின் எல்லா வித பிரச்சினைக்கும் இது தீர்வு தருகிறது. தொடர்ந்து ப்ரோக்கோலி சாப்பிடும் 70% ஆண்களின் விந்தணு குறைபாடு பிரச்சினை குணமாகும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

மாதுளை விந்தணு குறைபாட்டை குணம்படுத்தும் அற்புதம் இந்த மாதுளைக்கு உள்ளதாம். இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் விந்துக்களை எளிதாக உற்பத்தி செய்ய உதவுமாம். மேலும், இல்லற வாழ்வில் இனிமையை இந்த மாதுளை தருகிறதாம்.

பெரி வகை கனிகள்… ஸ்ட்ராவ்பெர்ரி, ப்ளூபெரி, பிளாக்பெரி போன்ற பழ வகைளில் எண்ணற்ற ஆண்களுக்கான நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றில் anti-inflammatory மற்றும் antioxidants தன்மை அதிகம் உள்ளதால் விந்தணுவின் சக்தியை அதிகரித்து, அவற்றின் நலனை காக்கும்.

பூண்டு இல்லற வாழ்வை இனிமை ஆக்கும் சக்தி பூண்டிற்கு உள்ளதாம். வைட்டமின் பி6, செலினியம் பெரும்பாலும் பூண்டில் இருப்பதால் விந்துகளின் உற்பத்தியை மேம்படுத்தும். மேலும் ரத்தத்தை சுத்திகரித்து விந்துகளின் நலனை பாதுகாக்குமாம். அத்துடன் எதிர்ப்பு சக்தியையும் இது கூட்டும்.

பீன்ஸ் ஜின்க் அதிகம் நிறைத்த காய்கறிகளில் முதன்மையானது பீன்ஸ்தான். இவை ஆண்களின் விரையின் ஆரோக்கியத்தை அதிகரித்து விந்து குறைபாட்டை சரி செய்யும். ஆனால், தினமும் 15 mg அளவே ஜின்க் உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்.

சிட்ரஸ் கனிகள் விந்தணு குறைப்பாட்டை போக்கும் ஆற்றல் அதிக அளவில் சிட்ரஸ் உள்ள கனிகளில் உள்ளதாம். ஆரஞ்ச், திராட்சை, எலுமிச்சை போன்றவற்றில் இந்த சிட்ரஸ் தன்மை அதிகம் இருக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஆண்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதாம்.

கேரட் Beta-carotene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள கேரட்டை உணவில் சேர்த்து கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். மேலும், கரு முட்டையில் விந்தணுக்கள் எளிதாக சென்றடைந்து சிசுவை உருவாக்க இவை வழி செய்கிறது.

அஸ்பாரகஸ் வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த அஸ்பாரகஸ் விந்தணுக்களுக்கு மிகவும் நல்லதாம். இவை விந்துகளின் ஆரோக்கியத்தை செம்மைப்படுத்த உதவுகிறது. அத்துடன் விந்துகளின் உற்பத்தியை பெருக்கி, நல்ல வளர்ச்சியை தருகிறது.

வெந்தயம் பல ஆராய்ச்சிகளும் வெந்தயத்தின் அருமையை பற்றி விரிவாக சொல்கிறது. இவை பெண்களுக்கு எந்த அளவிற்கு பயன் தருகிறதோ, அதே அளவிற்கு ஆண்களின் பிரச்சினையை தீர்க்கிறது. தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு நீங்கி விடும்.

எனவே, மேற்சொன்ன காய், கனிகளை உண்டு இன்பமான ஆரோக்கிய வாழ்வை வாழுங்கள் நண்பர்களே. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.