Home சூடான செய்திகள் மகிழ்ச்சியான வாழ்விற்கு எத்தனை முறை செக்ஸ் தேவை?

மகிழ்ச்சியான வாழ்விற்கு எத்தனை முறை செக்ஸ் தேவை?

35

காதல் உறவில் பிளவு ஏற்படாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாரம் ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வாரம் ஒருமுறை செக்ஸ் உறவில் ஈடுபடும் தம்பதிகள் வலிமையான காதல் உறவில் திளைப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாவில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அதிகம் உடலுறவில் ஈடுபடுவோர் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்ற கருத்திற்கு மாறாக ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வில், அமெரிக்காவில் வசிக்கும் திருமணமாகி 14ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த 2,400 தம்பதிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில், அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடும் தம்பதிகளின் நிலையான காதல் உறவிற்கு குறிப்பிடத்தக்க ஆதாயம் ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளர், டாக்டர். எமி மியூசி கூறுகையில், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சியை விட வாரம் ஒருமுறை வைத்துக் கொள்வதனால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலையான உறவிற்கு வலி வகுக்கும் என தெரிவித்துள்ளார்.

வாரம் ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அவர்களது வயது, காதல் வாழ்க்கை என அனைத்தின் ஆயுளையும் நீட்டிப்பதாக ஆய்வின் முடிவில் அறியப்பட்டுள்ளது.

Previous articleமார்பகங்களுக்கு அடியில் கருமையாக உள்ளதா?
Next articleசெக்ஸ் படம் பார்க்க சொல்லி மாணவியை வற்புறுத்திய கணவன்,மனைவி..!