Home குழந்தை நலம் எடை குறைவாகப் பிறத்தல் கவனிக்கவேண்டியவை..

எடை குறைவாகப் பிறத்தல் கவனிக்கவேண்டியவை..

20

நன்கு போஷிக்கபட்ட கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் என உலகளவில் வரையருக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை கர்ப்பக்காலம் முடிந்த பின்னர் அல்லது முன்னதாக பிறக்கலாம்.

குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதை தவிர்க்க கீழ்க்காணும் முறையினைக் கையாளலாம்.

* குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் கருவளர்ச்சிப் பருவத்தில் நன்கு அக்கறை செலுத்த வேண்டும்

* கருத்தரிப்பினை முதலிலேயே பதிவு செய்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இனங்கண்டறிய வேண்டும்.

* கர்ப்ப காலத்தின் போது, மற்றக்காலங்களை விட சத்தான உணவ உட்கொள்ள வேண்டும். எல்லா ஊட்டப் பொருட்களும் கொண்ட சமன்செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு உற்சாகப்படுத்த வேண்டும். கூடுதலான ஊட்டப்பொருட்கள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் போலிக்ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

* புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

* இரண்டு பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளி காலம்,
அதற்கு தேவையான கருத்தடை முறைகள் போன்றவற்றை கைக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

* பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகள் மேம்படுத்தப் படவேண்டும்.