Home சூடான செய்திகள் Love sex இந்த மாதிரி ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம்…

Love sex இந்த மாதிரி ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம்…

23

பெண்களுக்கு ஆண்களுடன் எப்போதுமே நெருங்கிய நட்புடன் பழக வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் சில ஆண்களுடைய பழக்க வழக்கங்களும் குணங்களும் தெரிந்த பின், அய்யோ இவருடன் எப்படி நட்பாக இருக்க முடியும் என்று தெறித்து ஓடிவிடுவார்கள்.

அதிலும் சில குறிப்பிட்ட குணங்கள் கொண்ட ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது.

எந்த மாதிரி ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்காது?

பெண்கள் ஆண்களை விட கொஞ்சம் அதிகமாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள் தான். ஆனால் சில ஆண்களும் நிறைய பேசுவதுண்டு. குறிப்பாக சில ஆண்கள் பெண்களைப் பேச விடாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் ஆதிக்க மனமுடையவர்கள் அதுபோல் நடந்து கொள்வதுண்டு. இதுபோன்ற ஆண்களைப் பெண்களுக்குப் பிடிப்பதில்லை.

இதுபோன்று ஆண்கள் நடந்துகொள்ளும் போது, அவர்களின் பேச்சை கேட்ட உங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், அவர்கள் சிறந்த தீர்வு கொடுத்தால் கூட மதிக்காமல் இருப்பது அவர்கள் உங்களை விட அறிவாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அர்த்தமாகும். உங்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், இந்த ஒரு குணம் உங்களை வெறுக்க போதுமானது.

ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள், பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று பேசுவது கூடாது. இவ்வாறு பேசினால் பெண்களுக்கு சுத்தமாக உங்களைப் பிடிக்காது. உங்களுக்குப் பெண்களால் ஏதேனும் கெட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் அனைத்து பெண்களையும் குறை கூறுவது தவறு.

நீங்கள் பெண்களை எவ்வளவு தான் சீண்டினாலும், எவ்வளவு கோபப்பட்டாலும், தவறு செய்தாலும் அனைத்தையும் தாங்கி கொண்டு பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நினைப்பது தவறு.

அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். எதையும் பெண்கள் பொறுத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் பெண்கள் விரும்பமாட்டார்கள்.

நீங்கள் உங்களது துணையை கஷ்டப்படுத்தும் படி கிண்டல் அடிப்பது, காமெடி என்ற பெயரில் அவரது மனதை வருந்தச் செய்வது போன்றவை வேண்டாம். இப்படி இருக்கும் ஆண்களின் அருகில் பெண்கள் நெருங்கவே மாட்டார்கள்.

பெண் என்றால் சமையல், வீட்டு வேலைகளை தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் அவர்களுக்கென எந்த ஒரு தனிப்பட்ட லட்சியமும், வேலையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்ற ஆசையும் இருக்க கூடாது என நினைக்கும் ஆண்களுடன் பெண்கள் நட்புடன் இருக்க விரும்புவதே இல்லை.

உங்களது துணைக்கு யாருமே இல்லை என்பது போல நினைத்துக்கொண்டு, அவரது எல்லா வேலைகளிலும் முக்கை நுழைப்பது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்கான வெளியையும் அவர்களுக்கான சதந்திரத்தையும் இவர்களுக்குக் கொடுப்பது மிக அவசியம்.

பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களது யோசனைகள் வெளிப்படுத்தலாம். ஆனால் தன்னுடைய எதிர்பார்ப்புகள் முழுமையும் ஒருவர் மேல் திணிப்பதும் பெண்களுக்குப் பிடிக்காது.

இதுமாதிரி குணங்கள் ஏதாவது இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.