Home சூடான செய்திகள் இந்த நாடுகளிலெல்லாம் கணவன் மனைவிக்கிடையே உண்மைத்தன்மையே கிடையாதாம்…

இந்த நாடுகளிலெல்லாம் கணவன் மனைவிக்கிடையே உண்மைத்தன்மையே கிடையாதாம்…

17

பிரான்ஸ் நாட்டில் திருமணமான பெண்களிடையே, தங்கள் கணவர் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாக குறைந்துவருவது சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஃபாப் கருத்துக்கணிப்பு நிறுவனம், புதிய வரவான டேலவ்.காம் இணையதளத்துடன் இணைந்து பெண்கள் அவர்களது கணவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அவர்களை ஏமாற்றி வேறொரு ஆணுடன் வைத்துள்ள கள்ளத்தொடர்பு தொடர்பான கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.

அதன்முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, திருமணமான பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர், உடலுறவிற்காக கணவரை மட்டும் சார்ந்திராமல் மற்றொரு ஆணுடனும் ரகசிய தொடர்பு வைத்துள்ளனர்.

இத்தகைய பெண்களின் விகிதம், 1970ம் ஆண்டில் 10 சதவீதம் இருந்ததாகவும், 2001ம் ஆண்டில் இவ்விகிதம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கணவர் மேல் பற்று ஏற்படாதிருப்பதற்கு மற்ற ஆண்கள் சிறந்த கட்டுறுதியுடனும் ஆண்மைத்தன்மையுடன் இருப்பதாக 62 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கணவர் மீது அவநம்பிக்கையும், மற்ற ஆண்கள் மீது ஈர்ப்பும் ஏற்பட இணையதளங்களும் முக்கிய காரணியாக இருப்பதாக 42 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.

டியூரக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கணவன் – மனைவி இடையே நம்பிக்கையின்மை அதிகமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், 56 சதவீதத்துடன் தாய்லாந்து முதல் இடத்திலும், 45 சதவீதத்துடன் டென்மார்க் இரண்டாம் இடத்திலும், 43 சதவீதத்துடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

அதிர்ஷ்டவசமாக, பிரிட்டன் 36 சதவீதத்துடன் இப்பட்டியலில் சற்று பின்தங்கியுள்ளது….