Home சூடான செய்திகள் காதல் எனும் பெயரில் காமம் கலக்கப்படலாமா?????????

காதல் எனும் பெயரில் காமம் கலக்கப்படலாமா?????????

36

வெயிலின் உக்கிரம் தணிந்து மாலை வேளை ஆரம்பிப்பதற்கான அறிகுறி, அந்த கடற்கரை எப்போதும் மக்களின் ஆரவாரம் நிரம்பியே காணப்படும். எப்போதும் போல் காதலர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்து தமது காதலை வெவ்வேறு விதமாக வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த மாலை நேர வெயில் சூடு தணிந்து இருந்தாலும் அந்த உக்ஷ்ணம் தாங்க இயலாது காதலர்கள் விநோதமான குடைகளைப் பிடித்திருந்தனர். அதாவது காதலிகளின் தாவணியே அவர்களுக்கு சிறந்த குடையாகக் காணப்பட்டது.

காதலர்கள் மிக நெருக்கத்தில் தனிமையில் இருந்ததால் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட லொவ்விக் கொண்டிருந்தனர்.

ஒரு சில காதலர்கள் கடற்கரையோரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கடலின் பால் நுரைகளில் தமது கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர

இன்னும் சிலர் ஆர்வ மிகுதியால் கடலுக்குள் இறங்கி குளிர்ந்த காற்றின் இதத்திற்கும் அலைகளின் இசைக்கும் ஏற்ப ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அலை வந்து வேகமாக மோதும் போது காதலி காதலனை இறுக்கி அணைத்துக் கொள்ள, அவனோ இது தான் சரியான நேரம் என்று அவளை எசக்குபிசகாக அணைத்து சிலிர்த்துக் கொள்வான்.

காதலனின் அந்த தீண்டல் காதலிக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், அந்த தீண்டல் தந்த சுகத்தை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்தாள். அதனால் அலை மோதுவதற்கு முதலே இவள் காதலன் மீது மோதி அலையில் விழுந்து உருண்டு புரண்டாள்.

இதற்கிடையில், கடல் அலைகளோடு விளையாடி மூழ்காமல் காதல் முத்தெடுத்த யோடிகள் ஆங்காங்கே கிடைத்த நிழலில் அமர்ந்து கொண்டனர். எவரது பார்வைகளும் தங்களை படமெடுக்காத்தால் விரலின் ஸ்பரிசங்களால் சிலிர்த்துக் கொண்டிருந்தார்கள். காதலியின் அழகு பொங்கும் அங்கங்களில் அனுமதியின்றி ஒட்டியிருந்த கடல் மண்ணை, அவள் அனுமதியின்றியே அகற்றி, தனது இதயத்துடிப்பின் வேகத்தை ஏற்றிக் கொண்டான் காதலன். கூடவே காதலியின் இதயத் துடிப்பும் தங்கத்தின் விலை போல் சட்டென்று ஏறுகிறது.

இப்படியே மற்றவர்கள் தமது காதலை வளர்த்துக் கொள்ள புதிதாக(முதன் முதலாக) தமது காதலை அறிமுகப்படுத்தியவர்கள் அக் கடற்கரைக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

அதே வெயில் இவர்களுக்கும் வெயிலின் சூடு தாங்க முடியாததால் அவள் கொண்டு வந்த சிறிய லேடீஸ் குடைக்குள் அவனும் ஒதுங்குகிறான்.

அந்த சின்னக் குடை தந்த நிழலில் கையோடு கை உரசிக்கொண்டு இருவரும் நடந்தார்கள். இதற்கு முன்பு இவ்வாறு நெருங்கிய உரசலோடு சென்ற அனுபவம் கிடையாததால், இருவரின் வார்த்தைகளும் வாய்க்குள்ளேயே மெளனப் போராட்டம் நடாத்தின.

சிறிது தூரம் தான் நடந்திருப்பார்கள், காற்றின் வேகத்தால் அவளின் மென்மையான பிடியினைத் தளர்த்திக் கொண்டு குடை தனியாகப் பறந்தது. அதைப் பிடிக்க இருவரும் ஓடினர். சிறிது தூரம் பறந்தது குடை, பயனற்றுக் கிடந்த ஒரு படகின் மீது மோதிக்கொண்டு நின்றது. படகைத் தள்ளும் முயற்சியில் குடைக்குத் தோல்வியே கிடைத்ததால், இருவரும் குடையை எளிதில் பிடித்துக் கொண்டனர்.

கை நழுவிப்போன குடையை எடுத்த மாத்திரத்தில் எழுந்த போது தான் அடுத்த பக்கத்தில் அந்த காட்சியைக் கண்டனர். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் மூடி காதல் ஆராய்ச்சியில் மூழ்கி இருந்தான் காதலன்.
அதைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க அருகில் இருந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். தோளோடு தோள் உரசிய படி இருந்தனர்.

இருவர் மனதிலும், காதல் ஆராய்ச்சி செய்த ஜோடியின் காட்சியே பலமாக பதிவாகி இருந்ததால், அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித்தவித்தது. அந்த மனதிற்கு அணைபோட கவனத்தை வேறு திசைகளில் திருப்பிப் பார்க்கின்றனர். ஆனால் குரங்கு மனது கேட்பதாக இல்லை.

அவர்களுக்குள் காதல் தீ பற்றி எரிந்தது. மெல்ல மெல்ல அவளை திரும்பிப் பார்த்தான். அவள் அணிந்திருந்த ஆடை அவனுள் ஏதோ செய்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் கணப்பொழுதில் அவள் மீது மோகம் கொண்டவன், எதிர் பாராதவிதமாக அவள் உதட்டில் இச் மழை பொழிந்துவிட்டான்.

இதை எதிர்பார்க்காதவள் சட்டென்று எழுந்தாள், அவள் கன்னங்கள் கோவத்தால் சிவந்தது, கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவது போல் கையை தூக்கி வந்தாள்.

“ நீ இப்பிடி நடந்து கொள்வாய் என நான் எதிர்பார்க்கேல்ல.. லவ் சொன்ன முதல் நாளே இப்படின்னா?? நிச்சயமா நம்மால இந்த காதல தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது. இப்பவே இந்த நிமிடமே பிரிஞ்சிடுவம். இனி நீ யாரோ… நான் யாரோ…” என்று வார்த்தைகளை பட்டாசு போல வெடிக்க விட்டாள். தன்னை அறியாமல் நடந்த தவறுக்காக பரிதவித்து நின்றான் அவன்.

தற்போது பெரும்பாலான காதலர்கள் மோதிக்கொள்வது இது போன்ற விடயங்களில் தான். ‘ என்னைப் பார்த்துக் காதலிக்கவில்லை.. என் உடலைப் பார்த்து தான் காதலித்தான்..’ என்ற இந்த விடயத்தில் காதலிகள் குற்றம் சாட்டினால் , அது சற்று யோசிக்க வேண்டிய விடயம் தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்ததுதான்.

நெய் எடுக்க வேண்டும் என்றால் பாலை முதலில் நன்கு காய்ச்ச வேண்டும். பிறகு தயிர் ஆக்க வேண்டும். பிறகு மோர் ஆக்க வேண்டும். அந்த மோரை கடைந்தால் வெண்ணெய் வரும். அந்த வெண்ணெயை உருக்கினால் தான் நாம் விரும்பும் நெய் பெறமுடியும்.

காமமும் அப்படியே! காதலி கிடைத்து விட்டாள் என்பதற்காக சட்டென்று அவள் மீது மோகம் கொண்டுவிடக் கூடாது. காதலை சுமூகமாக வளர்த்து திருமணத்தில் முடிந்த பிறகுதான் அதை அரங்கேற்ற வேண்டும். அது தான் உண்மைக் காதலுக்கு அழகு.

அதற்கு என்ன செய்யலாம்????????

* காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்த கண்களின் பார்வையில் திருமணம் கைகூடும் வரையில் ஆபாசம் வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது. அவளே விருப்பப்பட்டு கவர்ச்சியான ஆடை அணிந்து வந்தாலும் கூட அழகாக இருக்கு என்று சொல்லலாமே ஒழிய.. அந்த ஆடையில், ஆபாசத்தை கண்களால் தேடுவது அழகல்ல.

*காதலியுடன் நேருக்கு நேர் கதைக்கும் போது அவள் கண்ணைப் பார்த்து பேசுங்கள்/ பேசப்பழகுங்கள். அந்த ‘கண்ணோடு கண் பார்வை’ உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும்.

*காதலியின் ஆடை அப்பட்டமாக அவள் அந்தரங்கத்தை பிரதிபலிக்குமானால், ஆடை அணியும் நேரத்தினை அதிகரித்தால் இன்னும் ஜொலிக்கலாம் என கூறுங்கள். அவள் அதனை விளங்கிக் கொள்வாள்.

*ஒரு நிமிடம் பேசினாலும் காதலியிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தல் வேண்டும். அவளை அழகாக வர்ணிக்கலாமே ஒழிய ஆபாசமாக வர்ணிக்கக் கூடாது.

*காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல. அதே நேரம் நீங்கள் பார்ப்பதை அவள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், அவளோடு அந்த செயலைத் தொடரலாம். இதே செயல் உங்களுக்குள் தொடர்ந்தால் , பின் நாளில் உங்களுக்குள் பிரச்சினை வருவது நிச்சயம். திருமணத்திற்குப் பின்னர் கூட.. “ அன்றே நீ அப்படித்தானே….??” என்ற ரீதியில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

*பீச், பார்க், ஹோட்டல் என சுற்றும் காதலர்கள் திருமணத்திற்கு முதல் தகாத உறவுகள் வைத்துக் கொள்ளல் கூடாது. அது சில நேரம் மறைமுகமாக காதலனால்/காதலியால் காட்டப்படுமாயின் அது அவர்கள் காதலுக்கு நல்லதல்ல.

*முக்கியமாக காதலன் மனதில் காமம் வளர காதலி காரணமாக அமைகிறாள். அதற்கு அவள் ஆடைதான் காரணம். அவள் ஆடையில் குடும்பப்பாங்கு இருக்குமெனின் அவன் எளிதில் எல்லை மீறமாட்டான்.

எப்பேற்பட்டவனாக இருந்தாலும் ஓர் பெண் நினைத்தால் அவனை இலகுவாக மாற்றிவிட முடியும். ஆதலாலேயே பெண்களுக்கு அதிகமாக முக்கியம் கொடுத்து எமது இலக்கியங்கள் எழுதப்பட்டன. ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் சக்தி பெண்மைக்கு உண்டு. ஆதல்லால் தான் ஒரு இடத்தினை அடிமைப்படுத்த வேண்டுமெனின் முதலில் அங்குள்ள பெண்களை பலவீனர்கள் ஆக்க வேண்டும். அதன் பின் அவ்விடம் அடிமைப்படும். பெண்களை பலவீனப்படுத்த எடுக்கும் ஆயுதம் காமம். அதற்கு பெண்களின் நடை, உடை இரண்டுமே காரணமாகின்றது.