Home சமையல் குறிப்புகள் சண்டே ஸ்பெஷல்: குறும்பாட்டுக் கறி வறுவல்

சண்டே ஸ்பெஷல்: குறும்பாட்டுக் கறி வறுவல்

43

சுவையான காரமான குறும்பாட்டுக் கறி வறுவல் செய்வதற்கான எளிய வழிமுறைகளைக் காண்போம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1 கிலோ
ரெட் ஒயின்- 3 அவுன்ஸ்
எஸ்பஜினோ சாஸ் – சிறிதளவு
உஸ்டர் சாஸ் – சிறிதளவு
ஆலிவ்ஸ், வெண்ணெய் – தேவயைன அளவு
வேக வைத்த கேரட் – 1 கப்
பீன்ஸ் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஷ்ரூம் – 1/4 கப்
சின்ன வெங்காயம் – 6
மூலிகை தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள், உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் மட்டனை எடுத்துக்கொண்டு அதில் வெண்ணெய், மூலிகை தூள், மிளகு தூள், உப்பு, ரெட் ஒயின், உஸ்டர் சாஸ் சேர்த்து நன்கு கலந்துக் கொண்டு 5மணி நே
ரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின்பு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு வெண்ணெய் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வேக வைத்த காய்கறிகள், சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து அதில் மஷ்ரூம், ரெட் ஒயினில் ஊற வைத்த சின்ன வெங்காயம், எஸ்பஜினோ சாஸ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைத்து சாஸை தயாரித்துக் கொள்ளவும்.
இறுதியாக தட்டில் காய்கறி கலவைகளை வைத்து அதன் மேல் வறுத்து எடுத்த மட்டனை சிறு சிறு துண்டுகளாக வைத்து அதன் மேல் செய்து வைத்துள்ள சாஸ் சேர்த்து, அழகுக்காக ஆலிவிஸ் தூவி பரிமாறவும்.
சுவையான குறும்பாட்டுக் கறி வறுவல் தயார்.