Home குழந்தை நலம் குழந்தையில் நாம் குடித்த பசும்பாலுக்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம்?

குழந்தையில் நாம் குடித்த பசும்பாலுக்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம்?

23

captureகுழந்தைகள் குறைந்தது ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குடிப்பது சிறந்தது. அதற்கடுத்து நாம் வேறு சில உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் என்ன ஆரோக்கியமான உணவுகள் கொடுத்தாலும் அவற்றோடு குழந்தைக்கு பசும்பாலும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என மருது்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அப்படி குழந்தைக்குப் பசும்பால் கொடுக்க வேண்டிய தேவை தான் என்ன?

பசும்பாலில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள்,ஜிங்க் ஆகிய குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

பசும்பாலில் தேவையான அளவு கால்சியம் உள்ளது. அது குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று. அது பல் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.

குழந்தைக்கு புரதம் மிக அவசியம். பசும்பாலில் புரதம் நிறைந்திருக்கிறது.

பசும்பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இது பாலில் உள்ள கால்சியத்தை குழந்தையின் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கிறது. இப்படி குழந்தையாக இருக்கும்போது கொடுக்கப்படும் பசும்பால், வாழ்நாளின் பிற்காலங்களில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்துகள் நம்மை நெருங்காமல் இருக்குமாம்.

கலப்படமில்லாத பசும்பால் புற்றுநோயைத் தடுக்கும் தன்மையுடையது.

குழந்தைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பசும்பால் தான் கொடுக்க வேண்டும்?

அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. அளவுக்கு அதிகமாகப் போனால் அதுவும் பிரச்னை தான். அதுவே குழந்தைக்கு ரத்தசோகையையும் உண்டாக்கிவிடும்.

ஒரு நாளைக்கு 16 அவுன்ஸ் வரை பசும்பால் கொடுக்கலாம். அதாவது இரண்டு கப். இரண்டு வயதுக்குப் பிறகு அதை 24 அவுன்ஸாக அதிகப்படுத்திக் கொள்ளலாம்.