Home சூடான செய்திகள் நீங்கள் கொடுக்கும் முத்தம் உங்களைபற்றி என்ன சொல்கிறது ?

நீங்கள் கொடுக்கும் முத்தம் உங்களைபற்றி என்ன சொல்கிறது ?

32

முத்த அளவு:மூக்கு, நாக்கு, கண்கள்.. விரல்கள்… பிறந்த தேதி, மாதம் என பல விஷயங்களை வைத்து ஒரு நபரின் தனிப்பட்ட குணாதியங்கள் குறித்து நாம் தமிழ் போல்ட்ஸ்கை தளத்தில் படித்திருக்கிறோம்.

ஒருவர் உறவில் எப்படிப்பட்ட நபராக இருப்பார் என்பதை அவர் முத்தமிடும் முறை மற்றும் ஸ்டைலை வைத்தே அறிந்துக் கொள்ளலாம். மேலும், இதன் மூலமாக அவர்களது உறவு எப்படியானதாக இருக்கும். அவர்கள் துணையை கொடுத்து வைத்தவர்களா? துர்பாக்கியசாலிகளா என்பதை கூற அறிந்துக் கொள்ளலாம்…

மொத்தம் இதில் ஏழு வகைகள் இருக்கின்றன.. இந்த ஏழுல நீங்க எந்த வகைன்னு தெரிஞ்சுக்கங்க… நீங்க ட்ரை பண்ற கிஸ் ஸ்டைல் சரியா, தவறான்னு படிச்சு தெரிஞ்சுக்குங்க…

யோசித்து… முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது இடையே இடைவேளை விடுவது… இத்தகைய முத்தமிடுவதை திங்கர் (Thinker) என்று கூறுகிறார்கள். இவர்கள் எதையும் கொஞ்சம் யோசித்து, மெதுவாக செயல்படுத்தும் நபர்கள். ஏதாவது செய்யும் முன்னர்… அந்த செயலின் மூலம் என்னென்ன நன்மைகள், தீமைகள் விளைய வாய்ப்புகள் உண்டா என்று யோசித்து தான் முடிவெடுப்பார்கள். இது ஒரு நல்ல விஷயம் என்றாலும்… இதே தன்மை சில சமயங்களில் உங்களை எதையும் தாமதமாக செய்யும் நபராகவும் வெளிப்படுத்தும். ஒருவேளை உங்கள் துணை ஆக்டிவான நபராக இருந்தால்… இது அதிர்ப்தியாக கூட முடியலாம்

அக்கறையுள்ள… முத்தமிடும் போது.. முத்தமிடும் பாகத்தில் மட்டும் கவனமாக இன்றி… துணையை அக்கறையாக அனைத்துக் கொண்டு முத்தமிடுபவர்கள்… கைகளை பிடித்துக் கொண்டு… ஆரவனைத்து… மென்மையாக நடந்துக் கொள்ளும் இவர்கள்.. எப்போதும் உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். துணையிடம் எதுவாக இருந்தாலும் பண்பாக எடுத்துக் கூறுவார்கள். இவர்கள் அக்கறை மிகுந்த நபராக திகழ்வார்கள்.

ரொமாண்டிக்! முத்தமிடுதல் என்பதை ஒரு பாடலை அதன் ஸ்ருதி கெடாமல் பாடுவது போன்றதாகும். முத்தமிடுவதை ஒரு மெலடி பாடலை போல கையாளும் நபர்கள்… இவர்கள் முத்தத்தை ஒரு கலையாக காண்பவர்கள். மென்மையாக, ஜென்டில்மேனாக. முத்தத்துடன் தங்கள் காதலையும் வெளிப்படுத்தும் இவர்கள் முத்தத்தில் கொஞ்சம் இச்சை தூவப்பட்டிருக்கும். சூழலை உருவாக்கிக் கொண்டு முத்தமிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இப்படியான துணை கிடைக்கு பெண்கள்/ ஆண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கேலி! முத்தம் ரொமான்ஸ் என்பது ஒருபுறம் எனில்… முத்தம் ஒரு சிறந்த காதல் விளையாட்டும் கூட… குழந்தையிடம் அதற்கு பிடித்த பொருளை கொடுப்பது போல கொடுக்காமல் விளையாடுவது எப்படியோ… அப்படி தான் முத்தம் காதலில் ஒரு சிறந்த விளையாட்டு. இது ஆர்வத்தை தூண்டும், ரொமான்ஸ் கூட்டும்… காதலராக வெற்றிப் பெற சிறந்த கருவியாக அமையும். ஆனால், இந்த விளையாட்டை அமிர்தமாக உபயோகப்படுத்த வேண்டும். திகட்ட செய்திடல் கூடாது.

எக்ஸ்ப்ளோர்! லிப் லாக் எக்பேர்ட்ஸ். முத்தத்தில் இதழ்கள் இணையும் முன்னர் நாவினை இணைக்கும் எக்ஸ்ப்ளோர்ரர்கள். முத்தத்தில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் டிராவலர்கள். இதற்கு பொறுமை வேண்டும், ஆர்வம் வேண்டும்…. முத்தெடுப்பது போல மூச்சை அடக்கும் திறம் வேண்டும்… அனைத்திற்கும் மேலாக துணையை சௌகரியமாக உணர செய்தல் வேண்டும்.

குறும்பு முத்தத்தின் போது செல்லமாக கடிப்பது… ச்சீ… கடிக்கிறதா? என்று முகம்சுளிக்க வேண்டாம்.. இது முத்தத்தில் மிக இயல்பான ஒன்று. காமசூத்திரத்தில் இது இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும்… பேரார்வத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறுகிறார்கள். இதனால் துணையின் உச்ச விஷயங்கள் தூண்டிவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒன்று… கடித்தல் மென்மையானதாக இருக்க வேண்டும். இது துணையை ஆச்சரியப்படுத்தும் விஷயமாக அமைய வேண்டும். அச்சப்படுத்த கூடாது.

சுயநலம்! முத்தம் என்பது அழகான ஒன்று… ஆனால், இதிலும் சுயநலமாக நடக்கும் நபர்கள் இருக்கிறார்கள். அதாவது தாங்கள் விரும்பும் போது மட்டும் முத்தமிடும் நபர்கள். தங்கள் துணை முத்தத்திற்காக காத்திருப்பதை மறக்கும் நபர்கள். இவர்களால் துணை முத்தம் வேண்டுகிறார் என்பதை பார்வையால் அறிய முடியாது. இப்படியான விஷயம் நிச்சயம் உறவில் ஒரு குறைபாடாக தான் அமையும். இது ஒரு நல்ல குணம் கிடையாது. இதனால் உறவில் சில அசௌகரியங்கள் உண்டாகலாம்.