Home இரகசியகேள்வி-பதில் கள்ளக்காதலனை கை பிடிக்கும் பெண்கள், பெரும்பாலும், நிம்மதியாக, சட்டப்பூர்வ ம னைவியாக வாழ்வதில்லை

கள்ளக்காதலனை கை பிடிக்கும் பெண்கள், பெரும்பாலும், நிம்மதியாக, சட்டப்பூர்வ ம னைவியாக வாழ்வதில்லை

230

அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம்.
என் வயது, 28; வீட்டுக்கு ஒரே பிள்ளை. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன்; சிறுவயதிலிருந்தே தாத்தா, பாட் டியின் அரவணைப்பில்
வளர்ந்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செ ய்தேன்; தற்போது, அதிலிருந்துவிலகி, வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

என் அப்பா, இறந்து விட்டார். என் அப்பாவிற்கு, என் அம்மா இரண்டாவது மனைவி. அப்பாவின் முதல் மனைவி மற்றும் அவர் பிள்ளை தற்சமயம் உயிரோடு இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது, அப்பாவுக்கு ம், அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். நான் சிறு வன் என்பதால், இந்த சண்டை எதனால் வருகிறது என் று தெரியாது. என் அப்பாவின் நண்பர் ஒருவர் அடிக்க டி வீட்டிற்கு வருவார். அவருக்கும், என் அம்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அம்மா அவருடன் சென்று விட்ட தால், அப்பாவும் அம்மாவை பிரிந்து விட்டார். என்னை ப் பற்றி யாரும் கவலைப் படவில்லை.
என்னை, என் தாத்தா, பாட் டி (என் அம்மாவின் பெற் றோர்) அழைத்துச் சென்று விட்டனர். பிரிந்துசென்ற என் அம்மாவுக்கு, இன்று வரையிலும் நிம்மதி இல்லை. அந்த மனிதன் இன்று வ ரை வேலைக்கு சென்றதி ல்லை. அரசு ஊழியரான என் அம்மாவின் வருமானத் திலேயே, உடலை வளர்த்து வந்தான்.
அந்த மனிதனின் அம்மாவும், அக்காவும், தினமும் என் அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமைப் படுத்தியுள்ளனர். சில சமயங்களில் அடிக்கவும் செய் துள்ளனர். இதைப் பற்றி வெளியில் சொன்னால், உன் மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால், எனக்காக அம்மா எல்லாவற்றையும் தாங்கி க் கொண்டு இருந்துள்ளார்.

இச்சமயத்தில், அவருக்கு சொந்தமான நிலத்தை விற் று, அந்தப் பணத்தில், தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியே, அவ்வளவு பணத்தையும் செலவு செய்து, இன்று அதில் சிறிதளவு கூட இல்லாமல் இருக்கிறார்.
இது அனைத்தும் அவருடைய அம்மாவுக்கும், அக்காவு க்கும் தெரிந்திருந்தும், என் அம்மாவின் மீது பழி போட வேண்டுமென்ற காரணத்திற்காக, ‘இந்த பணத்தையெ ல்லாம் நீ தான் பறித்துக் கொண்டாய்…’ என்று, அம்மா வுக்கு திருட்டுப் பட்டம் சுமத்தினர். இதனால், என் அம் மா பட்ட துன்பங்களையும், தகாத வார்த்தைகளால் பட்ட அவமானங்களையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பிரச்னையால், நான்கு ஆண்டுகளுக்கு முன், எங்கள் வீட்டிற்கே வந்து விட்டார் அம்மா. ஆனா லும், இந்த நான்கு ஆண்டுகளாக, அந்த மனிதரும் அவ ரைச் சார்ந்தோரும், ஏதாவது பிரச்னையை எழுப்பி, எங்களுடன் சண்டைக்கு வருகின்றனர்.
நான் ஒழுக்கமாக வாழ ஆசைப்படுபவன். ஊரில் அ னைவரிடத்திலும், எனக்கு நல்ல மரியாதை உண்டு. நான் தற்பெருமைக்காக சொல்ல வில்லை… எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. இந்த காரணத்திற் காக, என் அம்மா, ‘அவர்களுடன் சண்டைக்குப் போகா தே…’ என்று தடுத்து விடுவார்.

நாங்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆ னால், அவர்களோ இரு தரப்பிலும் பணம் பறிப்பதிலே யே குறியாக இருக்கின்றனர். அங்கே உண்மைக்கு இட மில்லை என்று தெரிந்து கொண்டோம்.
என் அம்மா, அவருடன் வாழ்ந்தாரே தவிர, அதற்குண் டான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இதுபோன்ற எந்த ஒரு ஆதாரமும் என் அம்மா பெற்றுக் கொள்ளவில்லை.) அரசு பணியி ல் இருப்பதால், அதிலுள்ள அனைத்து பதிவுகளிலும், என் தந்தை மற்றும் என் பெயரே இருக்கிறது. என் அம் மாவுக்கு பின், நான் தான் வாரிசு என்பதற்குண்டான அனைத்து ஆவணங்களையும் அம்மா செய்து வைத்து ள்ளார். இதற்கும், அவர் அம்மாவிடம் பிரச்னை செய்து ள்ளார்.
என்அம்மா வேலைக்கு செல்லும் போது, தினமும் வழி மறித்து பிரச்னை செய்கிறார். இதை அம்மா என்னிடம் சொல்லும் போது, அவரை கொலை செய்து விடலாமா என்று தோன்றுகிறது. ஆனால், எனக்கு ஏதாவது என் றால், என்வீட்டில் யாரும் உயிரோடு இருக்கமாட்டார் கள். அதனால், அமைதியாகஇருக்கிறேன். எனக்கு திரு மணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருக்கி ன்றனர். திருமண விஷயத்தில், அவர் பிரச்னை செய் வார் என்று எங்களுக்கு தெரியும். இதனால், என் திரு மணம் நடக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர் என் குடு ம்பத்தார்.
அம்மா, நீங்கள் சொல்லுங்கள் இந்த பிரச்னையை எவ் வாறு கையாளுவது? நீதிமன்றங்கள்ரீதியாக, இதற் கோர் நிரந்தரதீர்வுகிடைக்குமா அல்லது காவல்துறை யை அணுக வேண்டுமா? எவ்வாறு இப்பிரச்ச‌னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்று ஆலோசனைகூறுங்க ள்.
இப்ப‍டிக்கு
பெயர்சொல்லாத விரும்பாத மகன்

அன்பு மகனுக்கு,
பெற்றோரின் தவறுகளால், பிள்ளைகளின் வாழ்க்கை பெரியளவில் பாதிக்கிறது. முதல் மனைவியோடு திரு ப்தியாய் குடும்பம் நடத்தாமல், உன் தாயை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டது உன் தந்தையின் குற்றம். இரண்டாம் தாரமாய் வாழ்க்கையை நடத்தினாலும், அதனுடன் நிறுத்திக் கொள்ளாமல், கணவனின் நண் பனுடன் குடும்பம் நடத்தப் போனது உன் தாய் செய்த குற்றம். பெற்றோரால் வஞ்சிக்கப்பட்ட நீ, அதிகம் படி த்து நல்ல வேலைக்கு போகாமல், பத்தாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டது நீ செய்த குற்றம். அதிலும், பார்த் து வந்த வேலையிலிருந்து நின்று, வேறு வேலை தேடி க் கொண்டு இருக்கிறாய்.
கணவனை துறந்து, கள்ளக்காதலனை கை பிடிக்கும் பெண்கள், பெரும்பாலும், நிம்மதியாக, சட்டப்பூர்வ ம னைவியாக வாழ்வதில்லை. தாலி கட்டிய கணவனை பேய் என்று ஏசி, பிசாசுடன் கூட்டு சேர்கின்றனர். கள்ள க்காதலர்கள் ஸ்திரிலோலன்களாக, குடிகாரர்களாக மற்றும் ஒட்டுண்ணிகளாக திகழ்கின்றனர். கள்ளக் கா தல் வழி கிடைக்கும் பெண்களை, ஆண்கள், பணம் சம் பாதித்து தரும் கறவை மாடுகளாக பாவிக்கின்றனர். கள்ள உறவுகளை அங்கீகரிக்கா விட்டாலும், கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நெருங்கிய உறவினர்கள் சுயலாபம் எதிர்பார்க்கின்றனர்.
உன் தாய், சாக்கடையில் ஆனந்தமாய் அமிழ்ந்து கிட க்கும் பன்றியின் மனப்பான்மையில் இருந்திருக்கிறா ர். அதனாலேயே, தாலி கட்டிய அந்தஸ்தை பெறாமல், அடிமையாக கள்ளக்காதலனுடன், 25 ஆண்டுகள் வாழ் ந்திருக்கிறார்.

உன் தாயின் கள்ளக்காதலனை கொலை செய்வது பிர ச்சனைக்கான நிரந்தர தீர்வல்ல. கொலையாளியாகி, ஆயுள் தண்டனைபெற்று சிறையில் உழல்வாய். ஆயு ள் தண்டனைக்கு பின், விடுதலையாகி வரும் உன்னை , உன் சமூகமும், நட்பும் சீண்டாது; உரிய பணி கிடைக் காது; நல்ல திருமண வாழ்க்கை அமையாமல் மக்கிப் போவாய்.
உன் குடும்பப் பின்னணி அறிந்து, பெண் வீட்டார் உனக் கு பெண் தர மறுக்கலாம். ஆனால், நல்ல மாப்பிள்ளை கிடைத்தால்போதும் என்போர் பெண்கொடுப்பர். கள்ள க்காதலனின் வீட்டார் உன் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பர் என்பது அபத்தமான கற்பனை.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே…
உன் தாயாரின் வேலைக்கு பிரச்னை வராமல், உன் தா யாரின் கள்ளக்காதலன் மீது, காவல்துறையில் புகார் கொடுக்க, ஒரு கிரிமினல் வக்கீலை அணுகி, கட்டண ம் வழங்கி, சட்ட ஆலோசனை பெறு. உன் தாய், மகளிர் காவல் நிலையம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையத்தை அணுகி, தேவையான அறிவுரைகளை பெ றலாம். கள்ளக்காதலன் மற்றும் அவனது குடும்பத்தா ரை வரவழைத்து சமாதானம் பேசி, நிரந்தர விலகலுக் கு வழி செய்யலாம். உன் தாயுடன் அமைதியாய் வாழ விரும்புவதாக கள்ளக்காதலன் தெரிவித்தால், சாட்சிக் காரன்காலில் விழுவதைவிட, சண்டைக்காரன்காலில் விழுவதுமேல் என்கிற விதத்தில், கள்ளக்காதலனை யே முறையாக திருமணம் செய்து கொள்ளச் சொல்.
எல்லாவகை தீர்வுகளும், மருந்தும் உன் கையில்தான் இருக்கிறது. நீ சாணக்கியத்துடன் செயல்பட்டால் கத் தியின்றி, ரத்தமின்றி உன் பிரச்னைகளை ஜெயிக்கலா ம். உனக்கு நல்ல வேலையும், நல்ல வாழ்க்கைத் துணையும் அமைய, நெஞ்சார வாழ்த்துகிறேன்.