Home பாலியல் பாலுணர்வு குறைவா இருக்குன்னு நினைக்கிறீங்களா?… அப்போ இதை சாப்பிடுங்க…

பாலுணர்வு குறைவா இருக்குன்னு நினைக்கிறீங்களா?… அப்போ இதை சாப்பிடுங்க…

45

உலகிலேயே மிகப் பெரிய மரத்தின் பழம் தான் இந்த பலாப்பழம். பலாப்பழம் முக்கனிகளான மா, பலா, வாழையில் ஒன்று. இந்த பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் கொட்டையில் கூட பல நன்மைகள் உண்டு என்பது நமக்கு புதிய செய்தி. பலாப்பழ கொட்டைகள் நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் பல்வேறு விதங்களில் இந்த கொட்டைகள் நமக்கு நன்மை புரிகின்றன. இவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

நன்மைகள்
பலாப்பழ கொட்டையில் உள்ள புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள் , சரும நோய்களைத் தடுக்கின்றன. இந்த கொட்டையில் உள்ள இரும்பு சத்து, இரத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இரத்த சோகை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. இந்த நோய் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகிறது.

பொதுவாக இந்த கொட்டையை வேக வைத்து உண்ணலாம். வெந்த பிறகு உருளைக் கிழங்கின் சுவையைக் ஒத்து இருக்கும் இந்த கொட்டை. இது கண்களுக்கு மிகவும் நல்லது. இதன் பலன்கள் இதோடு முடியவில்லை. மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்தசோகை
இந்த கொட்டையில் இரும்பு சத்து மிகவும் அதிகம். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் முக்கிய கூறு இந்த இரும்புச்சத்து. போதுமான அளவு இரும்புச்சத்து உடலில் இருப்பதால் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. மேலும் பல இரத்தம் தொடர்பான கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன. இரத்தசோகையின் மற்றொரு முக்கிய அறிகுறியான சோர்வை இந்த இரும்புச்சத்து போக்குகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை , இரும்புச்சத்து அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நோய்கள் உடலை தாக்காமல் தடுக்கப்படுகிறது.

செரிமானம்
பொடி செய்யப்பட்ட பலாப்பழ கொட்டைகள் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன. இந்த கொட்டையில் நார்ச்சத்து அதிகம் என்பதால், செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை மேலும் பயன்படுகின்றன. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தவும் பலாப்பழ கொட்டைகள் துணை செய்வதாக இன்னும் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன. ஆகவே, பலாப்பழ கொட்டைகளை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

கண்பார்வை
பலாப்பழ கொட்டையில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. வைட்டமின் ஏ குறைபாட்டால் மாலைக்கண் நோய் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இந்த கொட்டைகள் கேடரக்ட் என்னும் கண்புரை நோயைத் தடுக்கின்றன. மேலும் படர்ந்த நசிவு என்னும் மகுலர் டிஜெனரேஷன் என்ற கண்பார்வை இழப்பு அல்லது மங்கிய பார்வை நோயைத் தடுக்கின்றன.

இரத்தம் உறைதல்
இரத்தம் உறையும் அபாயத்தைத் தடுக்கிறது. பலாப்பழ கொட்டையில் உள்ள மங்கனீஸ் , இரத்தம் உறைதலை சீராக்குகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த பல ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.

பாலுணர்வு
இது பாலுணர்வையும் தூண்டுகிறது. பலாப்பழ கொட்டையில் உள்ள இரும்பு சத்து பாலுணர்வைத் தூண்டுவதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. பாலியல் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு பலாப்பழ கொட்டைகளை ஆசிய பாரம்பரிய மருத்துவம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கொட்டைகளை வறுத்தும் உண்ணலாம். இவை, பாலுணர்வூட்டும் ஒரு சிறந்த கருவியாக உள்ளன என்று சில வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தசைவலு
பலாப்பழக் கொட்டையில் உள்ள புரதம், தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன. தினசரி புரத உணவிற்கு மாற்றாக இவற்றை பயன்படுத்துவதைக் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், பலாப்பழக் கொட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.

தோல் சுருக்கங்கள்
இளம் வயதிலேயே முதிர்த்த தோற்றத்தை பெறுவது, மற்றும் சுருக்கங்கள் தோன்றுவது போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்கும் ப்ரீ ராடிகல்களை எதிர்த்துப் போராடும் குணம் பலாப்பழ கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்களுக்கு உண்டு. ஆகவே தொடர்ந்து இந்த கொட்டையின் பேஸ்ட்டை ஒரு நாளில் ஒரு முறை அல்லது இரண்டு முறை முகத்தில் தடவி வர, உங்கள் முகம் இளமையாகத் தோன்றும்.

சரும பொலிவு
பலாப்பழ கொட்டையை பால் மற்றும் தேன் கலந்த கலவையில் ஊற வைக்கவும். இந்த கலவையை பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். முகத்தில் சீராக இந்த பேஸ்டை தடவவும். இந்த கலவை முற்றிலும் காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இதனால் உங்கள் முகம் பொலிவாக மாறும்.

முடி வளர்ச்சி
பலாப்பழ கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, முடி உடைவதைத் தடுக்கிறது. இந்த கொட்டையில் உள்ள அதிகமான புரதச் சத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இரும்பு சத்து இந்த கொட்டையில் அதிகம் உள்ளதால், இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது. இன்னும் ஆச்சர்யமான மற்றொரு செய்தி, இந்த கொட்டை மன அழுத்தத்தைப் போக்க உதவுவது தான். இதனால் முடி உதிர்தல் குறைகிறது.

ஊட்டச்சத்துக்கள்
பலாப்பழ கொட்டையின் ஊட்டச்சத்து அளவுகள் எவ்வளவு இருக்கின்றன என்று பார்ப்போம். பலாப்பழ கொட்டை 100கிராம் அளவு அதாவது 3.5 அவுன்ஸ் அளவில்

185 கலோரிகள்

7 கிராம் புரதம்

38 கிராம் கார்போ

1.5 கிராம் நார்ச்சத்து போன்றவை உள்ளன. இதில் 1 கிராமுக்கும் குறைவாக கொழுப்பு சத்து உள்ளது.

தைமின் மற்றும் ரிபோப்லவின் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக இந்த கொட்டைகள் உள்ளன. ஜின்க், இரும்பு, பொட்டசியம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்றவையும் இவற்றில் உள்ளன. இந்த கொட்டையில் உள்ள மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து சபோனின் என்ற ரசாயனம் ஆகும்.