Home இரகசியகேள்வி-பதில் என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது

என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது

215

எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா?

பதில் : பொதுவாகவே திருணமான புதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியே இருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம்என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது.தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள்.

கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள் மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும். படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக் கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்கு மற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்பூவை நெய்யில் வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிது ஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள் பேசாதீர்கள்.
—————————————

பெண்களுக்கு, மாதவிடாயின்போது வயிறு வலிப்ப‍து ஏன்?

மாதவிடாய் என்பது பெண்களுக்கு, மாதந்தோறும் 3 முதல் 7 நாட் களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய அதே நேரம் தவிர்க்க‍ முடி யாத உபாதை ஆகும். இந்த மாதவிடாய்ச்சுழற்சியானது, பெண்க ளின் உடலமைப்பிற்கு கேற்ற‍வாறு 21 நாட் களிலிருந்து 35 நாட்கள் இடைவெளியில் நடக்கும் நிகழ்வு ஆகும். முதல் மாதவிடா ய் பொதுவாக 10 வயதிற்கும் 16வயதிற்கு ம் இடையே ஒரு பெண் பூப்படையும்போ து ஏற்பட்டு, அந்த பெண் 40 வயது முதல் 75 வயதுக்குள் இந்த மாத விடாய் நின்று விடும்.

பெண்களின் கருப்பையில் இருக்கும் முட்டையை ஆண் உயிரணு க்க‍ள் உரிய காலத்தில் வந்து சேராத‌ காரணத்தினால், அது அழிந்து இரத்தக் கசிவுடன் கழிவுப்பொருளாக பெண் ணின் யோனி வழியே வெளியேறுகி றது. இதைத்தான் மாதவிடாய் என்கி றோம். அத்தருணத்தில் மாதவிடாயின் போது, கர்பபை, சுருங்காமல் விரிவ டைந்து அருகில் உள்ள குடல், சிறு நீரகம், போன்ற பிற உள் உறுப்புகளை அழுத்துவதால் பெண்களுக்கு அச்சம யத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. கருப் பை எந்த அளவு விரிவடைகிறதோ அதற்கேற்ப வயிற்றுவலியின் வீரியம் இருக்கும்

————————————
ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?

ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.

பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது. அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பிறவிலேயே ‘ஸ்ரீ’ குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம். உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.

பால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.
உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

ஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

————————————-

எனக்கு குழந்தை பிறந்த பிறகு சிறிநீரை அடக்க முடியாத நிலை உண்டாகிவிட்டது. சிரித்தால், தும்மினால், இருமினால்கூட சிறுநீர் கசிகிறது. இதற்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

பதில் : நிறைய பெண்களுக்கு இப்பிரச்சனை இருக்கிறது. பிரதான காரணம் ரத்த சோகை. உலக அளவில் இந்தியப் பெண்கள்தான் ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்று.

வெளிவேலை, வீட்டுப்பொறுப்பு என இரட்டைச்சுமை சுமக்கிற பெண்கள் பெரும்பாலும் அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை. மீந்துபோன உணவு, முதல்நாள் சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். ரத்தசோகையைக் குணப்படுத்திக்கொண்டாலே இப்பிரச்சனை சரியாகும்.

”ஈஸ்னோஃபிலியா” இருந்தாலும் இப்படி இருக்கலாம். அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர சிறுநீரத்தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி இருக்கலாம். எனவே உங்களுக்கு எதனால் இப்படி இருக்கிறது என்பதை மருத்துவரை நேரில் சந்தித்து சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது.