Home குழந்தை நலம் பெற்றோர் குந்தைகள் முன் கட்டிதழுவலாமா ?

பெற்றோர் குந்தைகள் முன் கட்டிதழுவலாமா ?

34

தம்பதியினர் தங்கள் குழந்தைகள் தூங்கி கொண்டிருக்கும் அதே அறையில் உடலுறவு வைத்து கொள்வது சரியா? என்ற விவாதம் அதிகமாக இணையதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதம் மதத்திற்கு முன்பு இணையதளவாசி ஒருவர், நெட்மம்ஸ்.காம் என்ற தளத்தில், அவரது தோழியும், தோழியின் கணவரும், அவர்கள் குழந்தைகள் தூங்கி கொண்டிருந்த அதே அறையில் உடலுறவு வைத்து கொண்டதை கேள்விப்பட்டு மிகவும் கவலைப்பட்டேன். “ எனது தோழி அந்த உடலுறவை நியாயப்படுத்தி பேசினார், குழந்தைகள் தூங்கிய பின்பே, கண்ஃ பாரம் செய்துவிட்டே உடலுறவில் ஈடுபடுவதாக சொன்னார். ஆனால், என்னை பொறுத்தவரை, உங்களால் குழந்தைகள் தூங்கிவிட்டதை உறுதியாக சொல்லமுடியாது. குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் எழலாம் அல்லது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தூங்காமல் கண்னைமட்டுமே படுத்திருக்கலாம்.” என பதிவில் கூறியிருந்தார்.

ஒரு புறம் சில பெற்றோர்கள், குழந்தைகளை அருகில் படுக்க வைத்து கொண்டே, தங்கள் இணையருடன் உடலுறவு கொள்ளும் வழக்கத்தை வைத்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால் மற்றொரு புறம் சிலர் இப்படி செய்வது, குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயலாக நினைக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை, போதிய இடவசதியின்மை மற்றும் குழந்தை வளர்ப்பு முறை ஆகிய இரு காரணங்களால் இத்தகைய நிலை தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, 39 சதவீத மக்கள், அதாவது 7.4 கோடி குடும்பங்கள் ஒரே ஒரு அறையுள்ள வீடுகளில் வசிப்பதாக கூறுகிறது. இது போன்றே, 60 லட்சம் குடும்பத்தினருக்கு, அதாவது 3 சதவீதத்தினருக்கு பிரத்தியேக அறைகளே இல்லை. கிட்டத்தட்ட இதே கணக்கெடுப்பு விவரம் தான் 2001 இலும் இருந்தது.

மற்றொரு காரணத்தை பார்த்தோமெனில், மேற்கத்திய நாடுகளில் உள்ள குழந்தைகள் வளர்ப்பு முறைகளை போல் இல்லாமல், இந்திய குடும்பங்களில் குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வளரும் வரை பெற்றோர்கள் தங்களுடனேயே படுக்க வைக்கின்றனர்.

சிறிய வகையிலான வீடுகளில் வசிக்கும் பெற்றோர்கள், இட நெருக்கடியால் தங்கள் அந்தரங்க செயல்பாடுகளை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இத்தகைய நிலையில், குழந்தைகள் அறையில் இருக்கும் போது உடலுறவு வைத்துக்கொள்கையில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுரை கூறுகிறார் சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் ஜெயந்தினி.

இருப்பினும் அவர், இத்தகைய நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு எதிரானது என்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கும் விவாதம் சரியல்ல என கூறுகிறார். “ பெற்றோர்கள் சாதாரணமாக தங்களுக்குள் உடலுறவு வைத்து கொள்வதேயல்லாமல், இது குழந்தைகளுக்கு எதிரானது அல்ல.” என கூறினார்.

மேலும் அவர், பெற்றோர்கள் தங்களுக்குள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் கவனிக்கிறார்கள் என்பதை முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் அதன் தாக்கம், அவர்கள் வயதை பொறுத்து மாற கூடும்.மேலும், சில குழந்தைகளிடம் அந்த தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்க கூடும். குழந்தைகள் முதல் இளம் பருவத்தினர் வரையிலான அவருடைய நோயாளிகள் பலரும் தங்கள் பெற்றோர்கள் உடலுறவு வைத்திருப்பதை பார்த்துள்ளதை தெரிவித்ததாக கூறினார்.

“ ஒரு குழந்தை, தனது தந்தை, தாயாரை கொல்ல முயற்சிப்பதாக நினைத்து பயந்து போயுள்ளது.சில குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு உடலுறவின் மீது வெறுப்பு உருவாகிறது. இதனால் குழந்தைகள் இதுகுறித்து எதுவும் பேச முடியாத நிலையிலோ அல்லது எதிர்வினையாற்ற முடியாமலோ அவர்களின் கவனம் சிதறடிக்கப்பட கூடும்” என்றார்கள்டாக்டர்கள்.

பெற்றோர்களின் உடலுறவு நடவடிக்கைகளை குழந்தைகள் பார்ப்பது, உளரீதியாக அவர்களுக்கு நல்லதல்ல என்றும், அத்தகைய சூழல்களை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றுகுழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரும், கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நினா நாயக்கூறுகிறார்.

“இது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவது ஆகாது. எனினும் ஒரு குழந்தைக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடியது. தாங்கள் பார்த்தவற்றை என்னவென்று தெரிந்து கொள்ளும் நிலையிலோ அல்லது அதை சொல்லும் நிலையிலோ அவர்கள் இருப்பதில்லை. இன்னும் சில குழந்தைகள் தங்கள் தாயார் தவறாக பயன்படுத்தபடுகிறார் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. இது அந்தந்த குழந்தையின் வயதினை பொறுத்தது.” என்றார் அவர்.

இருப்பினும் அவர், குழந்தைகளை அருகில் வைத்து கொண்டு, பெற்றோர்கள் உடலுறவு வைத்து கொள்ள வேண்டிய சூழலை ஒப்புகொள்கிறார். ஆனால், அத்தகைய நிகழ்வுகள், குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி விழிப்புணர்வு இல்லை என கூறுகிறார்.

“திருமண உடலுறவை பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. இந்த பிரச்சனைகளை பற்றி குழந்தைகளின் டீன்-ஏஜ் பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ இதுகுறித்து அவர்களிடம் பேசுவதன் மூலம் அவர்கள் அந்தரங்கத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்கள் ஒரு குடும்பம் ஆன பின், இப்படிப்பட்ட சூழல்களை எவ்விதம் கையாளுவது பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் இதை பற்றி பேச துவங்க வேண்டும்.” என்றார் அவர்.

பெற்றோர்களால் என்ன செய்ய முடியும் ?

குழந்தைகள், பெற்றோர்களின் பாலியல் நடவடிக்கைகளை ஏதேச்சையாக பார்ப்பதை தவிர்க்க சில எளிய வழிமுறைகளை கடைபிடிக்கலாம். உடலுறவு கொள்வதற்கு தனியாக வேறொரு அறை இல்லையெனில், தங்கள் குழந்தை நன்கு தூங்கிவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வீட்டில் அதிக அளவில் இடவசதி உண்டு எனில்,குழந்தைகளை படுக்கையறையில் படுக்க வைத்து விட்டு, சமையலறையையோ அல்லது ஹால் பகுதியையோ பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

டாக்டர் ஜெயந்தினி கூறும்போது, முடிந்தால் குழந்தைகளை வேறொரு அறையில் படுக்க வைப்பதன் மூலம், குழந்தை திடீரென எழும்பி அறையில் என்ன நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளும் நிலையை தவிர்க்க முடியும்.

இடவசதி அதிக அளவில் பிரச்சினை இல்லையெனில், பெற்றோர்கள் குழந்தைகளை அவர்கள் நான்கு வயது ஆகும் வரை, ஒவ்வொரு அறைகளிலும் தூங்க வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். “ மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள், தாங்களாகவே தூங்கும் பழக்கத்தை சீக்கிரமாகவே பெற்று விடுகின்றன. ஆனால் இந்தியாவில், இத்தகைய நிலை அடைய குழந்தைகளுக்கு 4 முதல் 5 வயது வரை ஆகிவிடுகின்றன. ஆனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும், தாங்கள் விரும்பும் நேரம் தங்கள் பெற்றோரின் அறைக்குள் நுழையலாம் என நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், உடலுறவு வைக்கும் நேரம் குழந்தைகள் திடீரென அறையில் நுழைவதை தடுக்க பெற்றோர்கள் அந்த அறையை பூட்டி இடுவது நல்லது.” என டாக்டர் கூறுகின்றனர்.