Home இரகசியகேள்வி-பதில் போதைக்கும் பாலியலுக்கும் என்ன தொடர்பு ? விளக்கும் டாக்டர்

போதைக்கும் பாலியலுக்கும் என்ன தொடர்பு ? விளக்கும் டாக்டர்

202

இரகசியகேள்வி-பதில்கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்று கூறுகிறான். அப்படி ஈடுபடுவது சரியா? அவன் கூறுவது உண்மையா?

பதில்: உங்கள் நண்பர் கூறுவது சுத்தப் பொய்! மது அருந்தும்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தூண்டப்படும். ஆனால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது.

மேலும் தொடர்ந்து மது அருந்தினால் ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உருமாறி பெண்பால் ஹார்மோனான ஈஸ்டராய்டுகளாகி விடுகிறது.

இதனால் தான் மது போதையில் மூழ்கிய ஆண்களுக்குத் தோல் மென்மையாகிவிடுகிறது. தசை போட்டுவிடுகிறது. பெண்ணைப் போல மார்பகங்கள் உருவாகிவிடுகின்றன. முகத்திலும் பிறப்புறுப்பிலும் ரோமங்கள் குறைந்துவிடுகின்றன.

இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆபத்தாக விந்தணுக்களின் எண்ணிக்கையும் டெஸ்டோஸ்ட்ரானின் உற்பத்தியும் ரொம்பவும் குறைந்து ஒரு கட்டத்தில் ஆண்மையே பறி போய்விடுகிது. ஆக, மது ஆண்மைக்கு உலை வைக்கிறதே தவிர உச்சக்கட்டத்தை நீட்டிப்பதில்லை.
——————–

கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்று கூறுகிறான். அப்படி ஈடுபடுவது சரியா? அவன் கூறுவது உண்மையா?

பதில்: உங்கள் நண்பர் கூறுவது சுத்தப் பொய்! மது அருந்தும்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தூண்டப்படும். ஆனால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது.

மேலும் தொடர்ந்து மது அருந்தினால் ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உருமாறி பெண்பால் ஹார்மோனான ஈஸ்டராய்டுகளாகி விடுகிறது.

இதனால் தான் மது போதையில் மூழ்கிய ஆண்களுக்குத் தோல் மென்மையாகிவிடுகிறது. தசை போட்டுவிடுகிறது. பெண்ணைப் போல மார்பகங்கள் உருவாகிவிடுகின்றன. முகத்திலும் பிறப்புறுப்பிலும் ரோமங்கள் குறைந்துவிடுகின்றன.

இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆபத்தாக விந்தணுக்களின் எண்ணிக்கையும் டெஸ்டோஸ்ட்ரானின் உற்பத்தியும் ரொம்பவும் குறைந்து ஒரு கட்டத்தில் ஆண்மையே பறி போய்விடுகிது. ஆக, மது ஆண்மைக்கு உலை வைக்கிறதே தவிர உச்சக்கட்டத்தை நீட்டிப்பதில்லை.
————
பாலியல் பற்றிய ஆர்வம் அவர்களை செயலில் இறங்கச் செய்கிறது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களில் பதின் பருவக் குழந்தைகளுக்கான தனிமை கிடைக்கிறது. அவர்கள் தொலைக்காட்சி, சினிமா மற்றும் சோஷியல் மீடியாக்களில் பார்க்கும் விஷயங்களும் பாலுணர்வைத் தூண்டும் விதமாகவே உள்ளது.

தனிமையான பொழுதுகளில் ஒத்த வயதுடையவர்கள் பாலியல் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எதிர்பாலினத்தவருடன் இதுபோல நடந்து கொள்வது பிரச்னை என்பதால் லெஸ்பியன் மற்றும் ஹோமோ பாலியல் வைத்துக் கொள்வதும் நடக்கிறது.

டியூஷன் செல்லும் இடங்கள், பள்ளி, விடுமுறை நாட்களில் குரூப் ஸ்டடி ஆகிய சந்தர்ப்பங்களிலும் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாலுணர்வுத் தூண்டல் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கமும் உள்ளது. இது அளவுக்கு அதிகமாகும்போது அவர்களது சிந்தனை செயல், நடத்தை அனைத்தையும் பாதிக்கிறது.

எதிர்பாலினத்தவரை இவர்கள் பார்க்கும் பார்வை கூட பாலுணர்வு தொடர்பானதாகவே இருக்கும். ஒரு சிலர் தன்னுடைய சகோதரி, அத்தை போன்ற நெருங்கிய உறவுப் பெண்களைக்கூட பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அபாயமும் உள்ளது.

போதைக்கு அடிமையாவது போல பாலுறவு சிந்தனைக்கு அடிமை ஆனவர்கள் சிறு வயது குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர். பாலுணர்வு சார்ந்தே இயங்குவதில் சமூக சீரழிவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பதின் பருவத்தினரிடம் பாலியல் சுரண்டல்

பாலியல் குறித்து பெரிதும் விழிப்புணர்வு இல்லாத பதின் பருவத்தினரை திருமணமானவர்கள் தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பதின் பருவ ஆண்கள் திருமணமான பெண்களுடன் உறவு கொள்வதால் குழந்தை உருவாகிடுமா என்ற பயத்தை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு பாலுறவு கொள்வதால் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படலாம் என்பது பற்றி இவர்களுக்குத் தெரிவதில்லை.

இது போன்ற அபாயங்கள் பதின் பருவத்தினருக்கு உள்ளது. அதேபோல திருமணமான ஆண்களுடன் பதின் பருவ பெண்கள் பாலுறவு வைத்துக் கொள்கின்றனர். தாய்க்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கும்போது அவர்களது மகளும் பாலியல் உறவுக்கு ஆளாக்கப்படுவது நடக்கிறது. இதில் வினோதமாக பதின் பருவப் பெண்கள் தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் பாலுறவு கொள்வதை அனுமதிக்கின்றனர்.

அதனால் தன் படிப்பும் கெட்டு வாழ்க்கையே தடம் மாறப் போகிறது என்ற பயமோ, விழிப்புணர்வோ இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இவர்கள் திருமண மானவர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பிரச்னைக்குத் தீர்வு என்ன?

பதின் பருவத்தினரை வழி நடத்துவதில் பெற்றோர், சமூகம், பள்ளி மூன்று தரப்பினருக்கும் பொறுப்புள்ளது. பெற்றோர் தன்னளவில் பாலியல் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருப்பது மற்றும் பதின்பருவத்தினர் சம வயது உடையவர்கள், ஒரே பாலினத்தவருடன் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்.

சத்தான உணவு, உடல் சக்தியை எரிப்பதற்கான உடற்பயிற்சிகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் அளிப்பதும் முக்கியம். இந்த வயதில் அவர்களுக்குள் உள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து அதில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிப்பதும் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும். பாலுணர்வு தொடர்பான ஆர்வம் தவறில்லை. ஆனால் அதன் பின்னால் அலைவது தேவையில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

திடீரென தனிமையில் இருப்பது, படிப்பில் நாட்டம் குறைவது, சரியான தூக்கமின்மை, குற்ற உணர்வுடன் இருப்பது, யாருடனாவது நெருக்கமாக இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலர்ட் ஆகுங்கள். பதின் பருவம் என்பதும் இரண்டாவது குழந்தைப் பருவமே. நீங்கள் குழந்தைப் பருவத்தில் காட்டிய அன்பை இப்போதும் மிச்சம் இன்றித் தரத் தயாராகுங்கள் பெற்றோரே.