Home சமையல் குறிப்புகள் உடலுக்கு வலுவைச் சேர்க்கும் கொள்ளு ரசம்

உடலுக்கு வலுவைச் சேர்க்கும் கொள்ளு ரசம்

31

தென்னிந்திய உணவுகளில் ரசமும் ஒரு வகையான சைடு டிஷ். அத்தகைய ரசத்தில் பல வகைகள் உள்ளன. அந்த வகைகளில், இப்போது உடலுக்கு ஆரோக்கியத்தையும், எடையை குறைக்கவும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்ததுமான கொள்ளு ரசத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

 

கொள்ளு – 1/2 கப்
தக்காளி – 2 (அரைத்தது)
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளி சாறு – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – 4-5
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு, நன்கு வறுக்கவும். பின் அதனை ஆற வைத்துக் கொள்ளவும்.

பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் வறுத்து வைத்துள்ள கொள்ளு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்கவும்.

பின்னர் புளி சாற்றில் சர்க்கரையைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் மிக்ஸியில் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தாளித்துக் கொள்ளவும்.

பின் அதில் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, சிறிது நேரம் வறுக்கவும். பிறகு அதில் புளி நீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள தக்காளியைப் போட்டு, வேக வைத்துள்ள கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது உடலுக்கு வலுவைத் தரும் கொள்ளு ரசம் ரெடி!!! இதன் மேல் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியைப் போட்டு சிறிது நேரம் மூடி, பின்னர் பரிமாறவும்.