Home இரகசியகேள்வி-பதில் மனைவியை நான் ரகசியமாக உளவு பார்கிறேன் ஆண்களுக்கான டாக்டர் பதில்கள்

மனைவியை நான் ரகசியமாக உளவு பார்கிறேன் ஆண்களுக்கான டாக்டர் பதில்கள்

332

பாலியல் கேள்வி பதில்கள்:ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல..!!

நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல் மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடி நிச்சயித்துத் திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில் இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர் தன்னினச் சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர் என்று ஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச் சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்த மட்டில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது பற்றியும் கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன் வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதி சீர்குலைந்துதானே இருக்கும்.

இக்காலங்களில், ஓரினச் சேர்க்கையாளனாக இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவு பிரச்சினையாயிருக்காது. எப்பொழுதுமே வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமான செயல்தான். உங்கள் பெற்றோர் உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச் சமாளிப்பது சிரமமானதே.

நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலை அல்ல. வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.

——————————————————
அலுவலகத்தில் ஆண்- பெண் உறவுமுறை எப்படி இருக்க வேண்டும்?

அலுவலகத்தில் ஆண்- பெண் உறவுமுறை எப்படி இருக்க வேண்டும்?
ஆண் பெண் யாராக இருந்தாலும், நிறுவனத்தில் உயர் பதவியை வகிப்பவராக இருந்தாலும், எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் ஒருவர் அலுவலகத்தில் நல்ல முறையில் பழகவில்லை எனில், நிறுவனம் எடுக்கும் ஒரே முடிவு பணி நீக்கம். இச்சிக்கலைத் தவிர்க்க, அலுவலகத்தில் பணிபுரியும் சக ஆண்-பெண் ஊழியர்களுடன் எப்படிப் பழகவேண்டும்? என்னென்ன விஷயங்களை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்பதைப் பற்றிய சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக!

அலுவலகம் மட்டுமின்றி பொதுவாகவே ஆண் பெண் என யாராக இருந்தாலும் திறமையுடன் இருப்பதை விட மிக முக்கியம் ஒழுக்கம். அந்த நபர் மிகவும் திறமைசாலி, நான்கு பேர் செய்யும் வேலையை ஒரு ஆளாக முடித்துவிடுவார். வேலையில் கெட்டிக்காரர். ஆனால் அவரை இப்போது நிறுவனம் வேலையிருந்து நீக்கிவிட்டதன் காரணம் என்னவென்று விசாரித்தால், அது அவர்களின் ஒழுக்ககேடான செயல்களையே சுட்டி காட்டும்.

ஆண்களுக்கே அதிக கவனம் தேவை!

• அலுவலகம் என்பது ஒருவருடன் ஒருவர் தொட்டுப் பேசி, விளையாடி மகிழ விளையாட்டு அரங்கம் கிடையாது. இதில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு என்பது முக்கியம்.

• உடல் ரீதியாகவோ, வார்த்தைகள் வழியாகவோ எப்போதும் வரம்பு மீறாதீர்கள். சக ஊழியருடன் நட்போ காதலோ உண்டானால் கூட, அதை ஒருபோதும் அலுவலகத்தில் பலர் பார்க்க வெளிப்படுத்த வேண்டாம். அலுவலகம் என்பது பணி செய்வதற்கான இடம் மட்டுமே. தேவை இல்லாமல் தனிப்பட்ட உறவையும் தொழிலையும் குழப்பி, உங்கள் வேலைக்கும் எதிர்காலத்திற்கும் நீங்களே உலை வைத்துக் கொள்ளாதீர்கள்.

பேச்சில் கவனம் தேவை!

• ஆணோ பெண்ணோ, சக ஊழியரிடம் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. அலுவலக வட்டாரத்தில் ஒருவரை ஒருவர் அழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை (சார், மேடம் அல்லது பெயர்) மட்டுமே சொல்லி அழைப்பது நல்லது.

• ஸ்வீட்டி, டியர், ஹேண்ட்சம் போன்ற வார்த்தைகளால் அழைக்க வேண்டாம். இப்படிக் கூப்பிடும்போது, அருகில் இருப்பவர்கள் முகம் சுழிப்பார்கள் என்பதை மறக்கக்கூடாது.

உடைகளில் அக்கறை!

• அலுவலகத்திற்கு ஃபார்மல் ஆடைகள் தான் சிறந்தது. அதிலும் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். பொதுவாக உடைக் கட்டுப்பாடு பெண்களுக்குத் தான் விதிக்கப்படுகிறது. ஆனால் ஆண்களும் கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக, ஷர்ட் பட்டனைப் போடாமல் அலுவலகத்திற்குள் நடமாடுவது, உள்ளாடை தெரிகிற வகையில் லோ வெயிஸ்ட் ஜீன்ஸ் அணிவதெல்லாம் கூடாது. இதனால் ஆண்கள் தங்கள் மதிப்பை தாங்களே குறைத்துக் கொள்ள நேரிடும்.

கண்களைப் பார்த்துப் பேசுங்கள்!

• ஆணோ பெண்ணோ, யார் யாரிடம் பேசும்போதும் கண் பார்த்து(ஐ-கான்டக்ட்) பேசுவது முக்கியம். சக பெண் ஊழியர்களுடன் பேசும்போது, அவர்களின் கண்களை மட்டுமே பார்த்து பேசுவதுதான் கண்ணியம். அப்படியில்லாமல் கண் பார்வை அங்கும் இங்குமாக அலைபாய்ந்தால், அது அந்தப் பெண்ணுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்தலாம். அதேபோல பெண்கள் ஆண்களிடம் கண் பார்த்துப் பேசத் தவறினால், அதுவும் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படும்.

• வெட்கம் அல்லது பயம், கூச்சம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே, இது எடுத்துக் கொள்ளப்படும். இதனால் அந்த ஆண் உங்களைப் பலவீனமானவராக எடுத்துக் கொண்டு சீண்ட வாய்ப்பு உண்டாகும். சிலர் கண்ணடிப்பது, கையை அசைத்துப் பேசுவது, உதட்டைச் சுழிப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். இவை தவறான அர்த்தத்தைக் கொடுக்கும்.

நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள்!

• அலுவலகத்தில் ஆண்கள், பெண்களிடம் நாகரிகமாக நடந்துகொள்வது முக்கியம். குழு கலந்துரையாடலின்போது பாஸ் என்கிறவர்கூட தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் நாகரிகமாகவே நடந்துகொள்ள வேண்டும்.

• சபை உரையாடலின்போது அலுவலகம், வேலைச் சார்ந்த விஷயங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேச வேண்டாம். ஆண், பெண் இருவருமே அலுவலகத்தில் பொது இடத்தில் சந்தித்து பேசும்போது அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேசுவது அவசியம். அதுதான் நாகரிகமும் கூட.

தனிப்பட்ட நட்பு வேண்டாமே!

• ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குடும்பம் சார்ந்த பிரச்சினைகளை பகிர்வதைத் தவிர்த்துவிடுங்கள். கருத்து கேட்பதோ, உதவிக் கேட்பதோ வேண்டாம். ஆரம்பத்தில் நல்ல முறையில் தொடங்கினாலும் பிற்பாடு இதுவொரு சார்ந்திருத்தலாக மாறிவிடும்.

———————————————————-
கேள்வி: என் மனைவியை நான் ரகசியமாக உளவு பார்ப்பதாக சண்டையிடுகிறாள். என்னென்னவோ ஆதாரங்கள் சொல்லி நிரூபிக்க முயல்கிறாள். நான் அப்படி எதுவும் செய்யவில்லை. இதனை எப்படி சரிசெய்வது

பதில் : இது மிகவும் சிக்கலான நிலை .இரு பக்கமுமே . இதில் உளவியல் ஆலோசனை மட்டுமல்லாமல் மனநல மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும் நிலை இருக்கலாம் என்று ஊகிக்கின்றேன். ஆதாரங்கள் என்ற சொல்லின் மூலம் நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை.தற்போதைய தொழில்நுட்ப உலகில் இப்படிப்பட்ட விஷயங்களை நிரூபிப்பது ,சூழலில் இருந்து வெளிவருவது எல்லாமே முன்பை விட எளிது .

அதனால் நிலைமை கைமீறும் போக்கு தெரிந்தால் உங்கள் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட சட்ட ஆலோசனையை கூட நாட வேண்டிய தேவை வரலாம் . இவ்வாறான சூழலில் நீங்கள் செய்யும் தாமதமே உங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்க வாய்ப்புண்டு. அதனால் எது செய்தாலும் உடனடியாக செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து .

உங்கள் தற்போதைய நிலையில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம். பயணிக்கும் பாதை கடினமாக இருந்தாலும் சென்றடையும் இடத்தை அடைதலே தேவை எனும் போது பயணத்தின் நோக்கமே பெரிதாக தெரிய வேண்டும். உங்கள் மன உறுதி அதற்கு அவசியம் .உங்கள் சுற்றமும் நண்பர் வட்டமும் இந்நிலையில் உங்களை எப்படி அணுகுகின்ற்ன என்பதும் முக்கியம் .

நல்லதே நடக்கும் என நம்புவோம் .

வாழ்த்துகள். வெல்வோம்.