Home காமசூத்ரா உங்க ஜோடியின் சந்தோஷ ஸ்பாட் எது என்று தெரியுமா?

உங்க ஜோடியின் சந்தோஷ ஸ்பாட் எது என்று தெரியுமா?

40

உங்க மனைவியின் காது கிட்டே போய் நெருக்கமாக புஸுபுஸுவென்று மூச்சு விட்டபடி பேசும்போது மனைவிக்கு கழுத்துப் பகுதியில் புல்லரிப்பதைப் பார்த்திருக்கலாம். அதேபோல அந்தரங்க சமயத்தின்போது உங்களது தொடைப் பகுதியையும், அருகாமைப் பகுதியையும் உங்களது மனைவி கை விரல்களால் வருடும்போது உங்களுக்கும் புல்லரித்திருக்கும். இப்படி ஆண், பெண் இருவரது உடல்களிலும் சிற் சில இடங்கள், சந்தோஷத்தை வாரிக் கொடுக்கும் பகுதிகளாக அமைந்திருக்கின்றன.

நமது உடலின் எல்லாப் பகுதிகளுமே இப்படி இருப்பதில்லை. சில இடங்களில்தான் இந்த சந்தோஷப் புள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றை சரியான முறையில் கையாண்டால் உறவின்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். அந்த இடத்தைத் தொட்டால் போதும், உடனே ‘பியூஸ்’ போய், உங்களிடம் சரணடைந்து விடுவார்கள். என்ன கோபத்தில் இருந்தாலும் சரி, தொட வேண்டிய இடத்தை கரெக்டாக தொட்டால் போதும்.

சரி எந்தெந்த இடங்களைத் தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும் என்பதைப் பார்க்கலாமா…

உதடு… உதடு ஒரு அருமையான ஏரியா. அதிலும் பெண்களின் மேலுதட்டை விட கீழுதடுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளை அதிகரிக்க உதவுகிறதாம். காதலை வெளிப்படுத்த முத்தமிடுவது வழக்கம். அதேசமயம், உறவின்போது முதலில் முத்தத்தில்தான் எல்லோரும் தொடங்குவார்கள். உதடுகளை கையாளும் விதத்தைப் பொறுத்து உங்களது மனைவியிடம் நீங்கள் பாராட்டு பெறுவதும் அமையும். எனவே ‘பர்ஸ்ட் இம்ப்ரஷன், பெஸ்ட் இம்ப்ரஷனாக’ அமைய வேண்டுமானால் முத்த விளையாட்டில் ‘எக்ஸ்பர்ட்’ ஆகி விடுங்கள், அதுதான் நல்லது.

உதடுகளில் முத்தமிடும்போது மென்மையாக ஆரம்பித்து ஆழமான முத்தத்துடன் முடிக்க வேண்டுமாம். உதடுகளை உதடுகளால் லேசாக நிமிண்டுவது, வருடுவது, கைவிரல்களால் தடவிக் கொடுப்பது, லேசாக வலிக்காத வகையில் கடிப்பது, ஆழமாக உள்ளிழுத்து சுவைப்பது என நிறைய வேலைகள் இதில் உள்ளன. பார்த்துப் பதமாகச் செய்தால் நல்லது.

உதடுகளிலேயே ரொம்ப நேரம் இருப்போருக்குத்தான் உணர்ச்சிகள் அதிகமாக பெருக்கெடுக்குமாம். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உதடு விளையாட்டிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளை அனுபவிக்க முடியும் என்கிறார்கள்.

முழுமையான அன்பு மற்றும் காதலுடன் முத்தமிடும்போது எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி சரண்டராகி விடுவார்களாம். முன் விளையாட்டுக்களிலேயே ‘பெஸ்ட்’ முத்தம்தானாம்.

அடுத்து நெற்றி, கண் இமை, கழுத்தின் பின்புறம் … பெண்களுக்கு இந்த மூன்று பகுதிகளுமே உணர்ச்சிகளின் குவியல் பகுதிகளாகும். குறிப்பாக கழுத்தின் பின்புறம். இது குறித்து நிறையவே சொல்லியாகி விட்டது. இருந்தாலும் மறுபடியும் சொல்லலாம், தப்பில்லை. கழுத்தின் பின்புறமும், காது மடல்களும் உணர்ச்சிகரமான நரம்புகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அன்பாக அழுத்தமாக தொடர்ச்சியாக முத்தம் கொடுத்துப் பாருங்கள், உங்க மனைவி எப்படி உணர்ச்சிவசப்படுகிறார் என்று தெரியும்….

அதேபோல கண் இமைகள். கண் இமைகளுக்கு முத்தம் தரும்போது முழுமையான பாதுகாப்பு உணர்வையும், காதலையும் உணர்கிறார்களாம் பெண்கள். காமத்தை விட தன் மீ்தான காதலுக்கு நமது கணவர் முக்கியத்துவம் தருகிறார், நமது பாதுகாப்புக்கு இவர் ஆதரவாக இருக்கிறார் என்று பெண்கள் கருதுகிறார்களாம். இதனால் இன்னும் சவுகரியமாக உணர்வதால், மேலும் முழுமையாக தங்களைக் கொடுக்க அவர்கள் முன்வருவார்களாம்.

நெற்றியும் கூட முன் விளையாட்டில் முக்கியமான ஒரு பகுதிதான். கன்னத்தில் முத்தமிடுவது போல நெற்றியிலும் முத்தமிட்டு விளையாடலாம். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.

இதேபோல மார்பகம், அக்குள், தொடைகள், இடுப்பு, முதுகு, பாதம் என பெண்களுக்கு உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடிய இடங்கள் நிறையவே உள்ளன. இதே போல ஆண்களுக்கும் கூட உணர்ச்சிகள் குவிந்து கிடக்கக் கூடிய இடங்கள் நிறையவே உள்ளன.

இருவரும் அவரவர் ‘பேவரைட் ஏரியா’வைத் தெரிந்து வைத்துக் கொண்டு உறவின்போதும், உறவு தேவைப்படும்போதும் அங்கு அடிக்கடி போய் வந்தால் அளவற்ற இன்பத்திற்கு 100 சதவீத கியாரண்டி தரலாம்.