Home சூடான செய்திகள் கட்டில் உறவில் தோன்றும் இந்த உள்ளுணர்வுகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது

கட்டில் உறவில் தோன்றும் இந்த உள்ளுணர்வுகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது

128

Happy Couple Sitting On Couch
சூடான செய்திகள்:இல்லறம் என்பது ஆண் ஒருவர் மட்டும் முடிவெடுத்து, பயணிக்கும் சவாரி அல்ல. மனைவி, குழந்தைகள், பெற்றோர் என அனைவரது பங்கும் இதில் முக்கியமாக தேவை. நீங்கள் சரியாக தான் செயல்படுகிறீர்களா? அல்லது தவறு செய்ய போகிறீர்களா என உங்கள் மனதே அவ்வப்போது ஓர் உள்ளுணர்வை ஏற்படுத்தும்.

அதை நீங்கள் மதிக்காமல் போனால், சில சமயங்களில் மிதிப்பட வேண்டியதும் வரும். அடிப்பட்டு தான் திருந்த வேண்டும் என்ற அவசியமில்லை. மற்றவரிடம் இருந்து கூட பாடங்கள் கற்று நீங்கள் உங்களை, உங்கள் வாழ்க்கையை, இல்லறத்தை திருத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம் சீர்குலைவது போல தெரிந்தால், உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். முன்பு நீங்கள் தனி நபராக இருந்த போது பெற்றோர் உங்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள இருந்தனர். ஆனால், இப்போது உங்கள் ஆரோக்கியம், தனிப்பட்ட நபர் என்ற முறையில் தாண்டி, உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் விஷயமாக இருக்கும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

பொருளாதாரம்

அதே போல தான் பொருளாதாரம். தனியாக இருக்கும் போது நீங்கள் ரிஸ்க் எடுப்பது வேறு, குடும்பமாக இருக்கும் போது ரிஸ்க் எடுப்பது வேறு. ரிஸ்க் எடுக்கலாம் ஆனால், சேமிப்பை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு, படிப்பு செலவு, மருத்துவ செலவு என எதையும் பதிக்காத வண்ணம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதவி

தவறுகள் நடப்பது இயல்பு. அவ்வாறு நடக்கும் போது, உங்கள் துணை மனமுடைந்து இருப்பது போல நீங்கள் உணர்தால். அவர் உங்களிடம் இருந்து மறைத்தாலும் கூட, நீங்கள் அவருக்கு மனதளவில் ஊக்கமடைய உதவ வேண்டும், அரவணைப்புடன் இருக்க வேண்டும்.

திறமை

பிறப்பால் நம் அனைவரிடமும் ஏதேனும் ஒரு திறமை இருக்கும். திருமணத்திற்கு பிறகு அதை நீங்கள் இழப்பது போல ஏதேனும் உணர்வு எழுந்தால் மீண்டும் அதை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள். அதை பயிற்சி செய்ய துவங்குங்கள். உங்களது அந்த திறமை தான் உங்களது மன அழுத்தத்தை, பாரத்தை குறைக்கும் கருவி. மேலும், இது இல்லறத்திலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஈடுபடவும் உதவும்.

சரியா? தவறா?

எந்த ஒரு செயலும் செய்யும் முன்பு உங்களுக்கு ஓர் உள்ளுணர்வு தோன்றும், இது சரியாக இருக்குமா? அல்லது முடிவுகள் தவறாகிவிடுமோ என. அவ்வாறான தருணங்களில், உங்கள் துணை மற்றும் உறவினர்களோடு கூடி பேசி முடிவெடுங்கள்.

பேசி முடிவெடுங்கள்!

இல்லறம் சார்ந்த எந்த விஷயமாக, முடிவாக இருந்தாலும், தனித்து முடிவெடுக்க வேண்டாம். குறைந்த பட்சம் உங்கள் மனைவியிடமும், குழந்தைகள் பருவம் எய்தியவுடன், அவர்களிடமும் கலந்தாலோசித்து முடிவெடுப்பது தான் சரி!