Home பெண்கள் பெண்குறி பெண்கள் உச்சம் அடைய பெண்அந்தரங்க உறுப்பை சரிசெய்ய வேண்டியது

பெண்கள் உச்சம் அடைய பெண்அந்தரங்க உறுப்பை சரிசெய்ய வேண்டியது

545

பெண்கள் அந்தரங்கம்:தாம்பத்ய சுகம் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பமும் கை கூடும். செக்ஸ் பற்றியும் அதனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம்.

தாம்பத்ய சுகம் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பமும் கை கூடும். செக்ஸ் பற்றியும் அதனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம்.

தாம்பத்ய சுகத்திற்கான உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை நாம் நமது பார்ட்னருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற எக்ஸ்போசர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் அடிப்படை சிக்கலும், பல பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த முழுமையான அறிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்கின்றனர் உளவிலாளர்கள்.

உச்சநிலை விழிப்புணர்வு

ஆர்கசம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் சிரமம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இதுகுறித்து முதலில் கவலைப்படுவதை விட்டு விட வேண்டும். மன நிலை முழுமையாக தாம்பத்ய உறவில் ஈடுபடாதபோது இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. இது மனோ ரீதியான பிரச்சினைதான் என்றாலும் சில டிப்ஸ்களை கடைப்பிடித்தால் இதிலிருந்து விடுபடலாம் என்பது உளவியல் வல்லுநர்களின் அறிவுரை.

இயலாமையால் ஏற்படும் ஏமாற்றம்

சில பெண்களுக்கு ஏதேனும் ஒரு நிலையில் உச்சக்கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு உறவின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை. உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள், என்றோ அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.

அவசரம் வேண்டாமே!

உறவின் போது பெரும்பாலான பெண்களின் கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதிலேயே அவர்களின் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள்.

இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிரியான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும். அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

பிறப்புறுப்பு வறட்சி

பெண்களுக்கு உணர்வின் போது எழுச்சி ஏற்படுவதிலும் சில சமயங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக பிறப்புறுப்பில் வழவழப்புத் தன்மை குறைந்து, அது அவர்களது பார்ட்னர்களுக்கு சிரமத்தைத் தர நேரிடும். இதையும் தவிர்க்கலாம். அதேபோல உறவுக்கு முன்பும், உறவின்போதும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது மிக மிக அவசியம். அப்படி ஏற்பட்டால் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து போகும். இதனால் உறவு கசந்து போகும்.

பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட இரண்டு காரணங்கள் உண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலு}ட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.

குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹால்தான் இந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்பதன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.

இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம். அதன்படி நடக்கலாம். நாமே கூட மன ரீதியாக இதை சரி செய்ய முடியும். இதற்காகவே பல புத்தகங்கள், வீடியோக்கள் உள்ளன. அவற்றை அணுகி சுயமாக அறிந்து கொள்ளலாம். எனவே உச்சத்தை அடைவது சிக்கலா இருக்கே என்ற கவலையை விட்டு விட்டு அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினால், எல்லாம் இன்ப மயமாகும்!.