Home பெண்கள் பெண்குறி பெண்ணின் அந்தரங்க உறுப்பின் கன்னி திரையால் ஏற்பட்ட உண்மை சம்பவம்

பெண்ணின் அந்தரங்க உறுப்பின் கன்னி திரையால் ஏற்பட்ட உண்மை சம்பவம்

549

பெண்ணின் அந்தரங்கம்:இல்லற வாழ்க்கை என்பது வெறுமென தாம்பத்தியம் மட்டும் அடங்கியது இல்லை. ஆனாலும், தாம்பத்தியம் இல்லாத இல்லற வாழ்க்கை யாராலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

நடு வயதினை தாண்டிய பிறகு தாம்பத்தியம் இல்லறத்தில் பெரும் அங்கமாக இருக்க போவதில்லை. ஆனால், திருமணமான ஆரம்பத்திலேயே கலவுதல் உறவின்றி வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்றால், அதற்கு எத்தனை ஆண், பெண்கள் சரி! என்று தலையை ஆட்டுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி. திருமணத்திற்கு பிறகு தாம்பத்தியம் வைத்துக் கொள்ள இயலாது என்றாலே விவாகரத்து கோரும் சமூகம் இது. ஆனால், தங்கள் உறவில் ஆறு வருட காலம் கலவுதல் உறவு இல்லாத போதும், தன் துணைக்காக, அவருக்கு உறுதுணையாக இருந்து அவரது வலிகளுக்கும், உணர்சிகளுக்கும் மதிப்பளித்து உண்மையான காதலுடன் காத்திருந்துள்ளார் பென்.

முதல் ராத்திரி! அனைவரையும் போல முதல் ராத்திரி அன்றே கலவுதலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தங்கள் இல்லற தாம்பத்திய வாழ்க்கையை துவக்கினார்கள் பென் மற்றும் எமிலி. ஆனால், அது முடியாத காரியமாக மாறியது. முதல் ராத்திரி அன்று மட்டுமல்ல. திருமணமான முதல் இரண்டு வாரமாக தொடர்ந்து எமிலியால் உடலுறவில் ஈடுப்பட முடியாமல் போனது. ஒவ்வொரு இரவும் எமிலி (28), பென் (31) கலவுறவில் ஈடுபட முனையும் போதும், தன் பெண்ணுறுப்பில் மிகுதியான வலியை உணர்ந்திருக்கிறார் எமிலி. எமிலியின் வலிக்கு பென் காரணமில்லை, எமிலியின் உடல்நிலை தான் காரணம் என்பது ஆரம்பத்தில் அவர்களுக்கே தெரியாது.

வெஜைனிஸ்மஸ்! எமிலிக்கு வெஜைனிஸ்மஸ் (vaginismus) என்ற பாதிப்பு பிறப்பிலிருந்தே இருந்திருக்கிறது. இதுக்குறித்து எமிலி ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. வெஜைனிஸ்மஸ் என்பது பிறப்புறுப்பு உடன் ஈடுருவி கலவுதில் ஈடுபடும் போது வெஜைனா தசையில் மிகுந்த வலி ஏற்படும். இதற்கு காரணம், அவரது பிறப்புறுப்பு உள் தசை பகுதி மிக இறுக்கமாக இருப்பது தான். இந்நிலையால், கலவுறவில் ஈடுபடும் போது, ஆண்குறி கொண்டு ஊடுரவ செய்யும் போது எமிலிக்கு கத்தியை வைத்து குத்துவது போல, செங்கலை வைத்து முட்டுவது போன்ற கொடூரமான வலி ஏற்பட்டிருக்கிறது.

ஆறு வருடங்கள்! இந்த வெஜைனிஸ்மஸ் எனும் பிரச்சனையில் இருந்து பூரணமாக குணமாக எமிலிக்கு ஆறு வருடங்கள் ஆனது. அதுனால் வரை தன் திருமண வாழ்வில் தன்னை ஒரு முழுமையான பெண்ணாக நான் ஒருபோதும் உணரவில்லை என்று தன் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் எமிலி. ஆரம்பத்தில் கலவுறவில் ஈடுபட முடியாமல் போன சமயத்தில் வைப்ரேட்டர், ஸ்ட்ரெச் பயிற்சிகள் என பல முயற்சி செய்து பார்த்தும் எந்த பயனும் இல்லை. நானே என்னை நினைத்து மனம் நொந்து போனேன். என்னால் பென்னுக்கு ஒரு முழுமையான மனைவியாக இருக்க முடியவில்லை என மேலும் எமிலி கூறி இருக்கிறார்.

கனிவான கணவர்! பிறராக இருந்திருந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம், வம்சம், வாரிசு என பலவற்றை கூறி விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்திருப்பார்கள். ஆனால், பென் ஒரு கனிவான கணவர். தன் மனைவி எமிலியின் நிலையை, வலியை முழுமையாக அறிந்துக் கொண்டு அவருக்கு பக்கபலமாக இருந்தார். பென்னை பார்த்த முதல் தருணத்தில் இருந்து இன்று வரை அவரை எப்போதும் கனிவான, அற்புதமான நபராக தான் நான் காண்கிறேன் என மனமகிழ்ந்து கூறி இருக்கிறார் எமிலி.

முதல்முறை! எமிலி, பென் முதன் முதலில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு சர்ச்சில் தான் ஒருவரை ஒருவர் முதன் முதலாக பார்த்துக் கொண்டனர். சந்தித்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2009) இந்த ஜோடி இல்லற பந்தத்தில் இணைந்தது. எமிலி, பென்னின் திருமணம் கலிபோர்னியாவில் இருக்கும் சாண்டா பவுலா எனும் பகுதியில் நடந்ததது. திருமணம் முடிந்த கையோடு தங்கள் முதலிரவி கொண்டாட இந்த தம்பதி தாங்கள் புக் செய்து வைத்திருந்த ஹோட்டலுக்கு சென்றிருக்கின்றனர். அங்கே, தங்கள் முதல் கலவுறவை அனுபவிக்க முனைந்த போது தான் முதல் முறையாக எமிலி அந்த கொடூரமான வலியை எதிர்கொண்டிருக்கிறார்.

வலி! அப்போது தான் எமிலி இது முதல் முறை கலவுதலின் போது ஏற்படும் வலியாக தெரியவில்லை. கத்தியை வைத்து குத்துவது போல, செங்கலை வைத்து முட்டுவது போல மிகுதியான வலி ஏற்படுகிறது என்று பென்னிடம் கூறி இருக்கிறார் எமிலி. சரி! முதல் முறை என்பதால் இப்படியான வலி ஏற்பட்டிருக்கும் என்று கருதிய பென், எமிலியை சமாதானப்படுத்தி. சில நாள் கழித்து மீண்டும் ஹனிமூனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது ஹவாய் சென்ற இந்த தம்பதி ஒரு ரொமாண்டிக்கான சூழலை உருவாக்கி பின் கலவுதலில் ஈடுபட முனைந்துள்ளனர். மீண்டும் அதே வலி ஏற்பட்டது எமிலிக்கு.

பயம்! இம்முறை எமிலிக்கு மனதில் பயம் அதிகமாக இருந்தது. மிகவும் வருந்தினார். தங்கள் தேனிலவு அன்றே எல்லா ஏற்பாடுகளையும் ரத்து செய்துவிட்டு ஹவாயில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் பென் மற்றும் எமிலி. பிறகு எமிலி மற்றும் பென் சேர்ந்து நிறைய பயிற்சிகள், வழிமுறைகளை அவர்களாக முயன்றிருக்கிறார்கள். ஆனால், எந்த பயனும் அவை அளிக்கவில்லை. இரண்டு மாத காலம் கழிந்து வேறு வழியில்லை என்று முடிவான பிறகு பெண் நோய் மருத்துவரை சந்தித்து தங்கள் நிலையை எடுத்து கூறி இருக்கிறார்கள்.

தோல்வி! ஆரம்பத்தில் மருத்துவர் இது அளவு சார்ந்த பிரச்சனை என்று கருதி இருக்கிறார். டைலேட்டார்கள் (dilators) கொடுத்து பார்த்திருக்கிறார். முதல் முறை ஏற்படும் வலியாக இது இருக்க கூடும் என மருத்துவர் அறிவுரைத்திருக்கிறார். ஆனால், எமிலியால் வலியை பொறுத்துக் கொள்ள இயலவில்லை. டைலேட்டார் முறை தோல்வியடைந்தது. பென் விரும்புவதை தன்னால் கொடுக்க இயலாது என்று அழுதிருக்கிறார்.

பொய்! சில சமயம் தோழிகள் என் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கும் போது, அவர்களிடம் அதுக்குறித்து பொய்யாக தான் பதில் அளித்து வந்தேன். ஆனால், அவர்கள் ஏதேனும் முக்கியமான கேள்விகள் குறித்து கேட்கும் போது என்னால் சரிவர பதில் கூற இயலாது. சிறப்பாக இருந்தது என்று மட்டும் கூறி பேச்சை மாற்றிவிடுவேன். பென் என்னால் மனமுடைந்து இருப்பார் என்று நானே அனுமானம் செய்துக் கொண்டு, பென்னிடம் சென்று மன்னிப்பு கோரியுள்ளேன். நான் ஒரு சரியான மனைவியாக இருக்க முடியவில்லை, மன்னித்துவிடு என்று கூறி யுள்ளேன். ஆனால், பென் என்னிலையை புரிந்துக் கொண்டு அக்கறையாக நடந்துக் கொண்டார்.

கன்னி சவ்வு நீக்கம்! 2013ம் ஆண்டு திருமணமாகி நான்காண்டுகள் நிறைவடைந்திருந்தது. ஆனால், நாங்கள் முழுமையாக ஒருமுறை கூட கலவுறவில் இணைந்தது இல்லை. அப்போது தான் எமிலிக்கு hymenectomy எனப்படும் கன்னி சவ்வு நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், உடலுறவில் ஈடுபடும் போது வலி கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் கருதினார்கள். அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாத காலம் கழித்து மீண்டும் கலவுறவில் ஈடுபட முனைந்தனர் பென் – எமிலி ஜோடி. ஆனால், மீண்டும் அதே வலி தான் எமிலிக்கு. அவர்களால் கலவுறவில் ஈடுபட முடியவில்லை

டிவி நிகழ்ச்சி! பிறகு 2015ம் ஆண்டு ஒரு நாள் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த பென் திடீரென எமிலியை அழைத்து அந்த நிகழ்ச்சியை காண கூறி இருக்கிறார். டிவியில் தோன்றிய பெண்மணி, எமிலிக்கு ஏற்படும் அதே அறிகுறிகள் மற்றும் வழிகள், உடல் நிலையை குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். டிவியில் அந்த பெண் கூறிய அனைத்தும் அப்படியே எமிலிக்கு பொருந்தியது. அப்போது தான் எமிலிக்கு ஏற்பட்டிருப்பது என்ன பிரச்சனை என்றே அறிந்துக் கொள்ள முடிந்தது. அதுவரை அவர்கள் ஐந்தாண்டுகளாக ஏதேதோ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர்.

நான் மட்டுமில்லை… அப்போது தான் எமிலி, நான் மட்டுமே இப்படியான நிலையில் இல்லை. என்ன போன்றே பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்துள்ளார். அந்த வீடியோவில் தோன்றி பேசிய பெண் நியூயார்க் கை சேர்ந்தவர். அது ஒரு பெண்கள் சிகிச்சை மையம். உடனே நண்பர் மூலமாக தகவல்களை திரட்டிய பென், எமிலியை அங்கே அழைத்து செல்ல திட்டமிட்டார்.

7 இலட்சம்! எமிலியின் இரண்டு வார சிகிச்சைக்கு மட்டுமே ஏழு இலட்ச ரூபாய் வரை செலவானது. சிகிச்சை பெற 1500 மைல்கள் கடந்து எமிலியை அழைத்துக் கொண்டு நியூயார்க் அடைந்தார் பென். முதல் வாரம் தினமும் இரண்டு முறை எமிலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டாவது வாரம் (தினமும் இரண்டு மணிநேரம்) பென்னும் சிகிச்சையில் கலந்துக் கொண்டார். டைலேட்டார் கொண்டு எப்படி ஊடுருவல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற சிகிச்சை அங்கே எமிலிக்கு அளிக்கப்பட்டது. இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு எமிலியும், பென்னும் கலவுறவில் ஈடுபட முயன்றனர். இம்முறை எந்த பிரச்சனையும் இன்றி அவர்களது ஆறு ஆண்டுகால காத்திருப்புக்கு ஒரு நல்ல பலன் கிடைத்தது. இப்போது தங்கள் கலவுறவு வாழ்க்கை ஆரோக்கியமாகவும், அற்புதமாகவும் இருக்கிறது என்று எமிலி மனமகிழ்ந்து கூறி இருக்கிறார்.

ஆண் குழந்தை! 2016ம் ஆண்டு எமிலி – பென் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஒரு தாயாக நான் சிறப்பாக உணர்கிறேன். எனக்கு நிறைய குழந்தைகள் ஈன்றெடுக்க வேண்டும் என்று ஆசை. பென் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இப்போது, இதே பிரச்சனை கொண்டிருக்கும் பிற பெண்களுக்கு தீர்வளிக்க நான் தயாராக இருக்கிறேன்.

முக்கியமாக தாய்மார்கள் தங்கள் மகளிடம் இப்படியான பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். எல்லா பெண்களும் இதுக்குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்று. கலவுதல் என்பது பாசிட்டிவான ஒன்று. அதை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார் எமிலி.