Home உறவு-காதல் ஒரு பெண் ஆணை காதலிக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு பெண் ஆணை காதலிக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

320

காதல் உறவு:இளம் பருவம் அல்லது கட்டிளமைப் பருவம் என்றாலேயே ஒரு குதூகலம் தான். இந்த வயதிலேயே எதிர்ப்பால் மீதான் ஈர்ப்பு அதிகரிக்கும். நம்மைச் சுற்றி உள்ள பெண்களோ அல்லது ஆண்களோ நம்மைப் பார்க்காத போதிலும், அனைவருமே நம்மைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது இந்த வயதில் தான்.

அது சரி, கட்டிளம் ஆண் ஒருவன் ஒரு பெண் மீது விரும்பம் கொண்ட போதிலும், குறித்த பெண்ணுக்கு அந்த ஆண் மீது விரும்பம் உள்ளதா என்பதை அறிவது இவ் வயது ஆண்களின் மிக முக்கிய வேலையாக உள்ளது.

இளம் பெண்களின் மனதை அறிவதென்பது மிகக் கடினமாகும். சில சமயங்களில் அவள் இன்முகம் கொண்டிருப்பாள். அதுவே அடுத்த நொடியில் சிறிதேனும் விருப்பம் அற்றவளைப் போல் நடந்து கொள்வாள்.

உண்மையிலேயே ஒரு பெண் ஒரு ஆண் மீது விருப்பம் கொண்டுள்ளாளா என்பதை அந்தப் பெண் நடந்து கொள்வதை வைத்து கண்டறிய முடியும். அவை என்ன என்கின்றீர்களா?

01. உடல் மூலம் வெளிபடுத்தப்படும் சைகைகள்

ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடித்து விட்டால் அதனை அவளது உடற் சைகைகள் மூலம் கண்டு பிடிக்கலாம். அந்த ஆண் கதைக்கும் போதேல்லாம், அவனை நோக்கி சாய்த்து கொண்டு அடிக்கடி அவளது முகத்தை தொட்டுப் பார்ப்பாள். அத்துடன் அவளது விரல்கள் அவளது கூந்தலையே வருடிப் பார்க்கும். கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதுடன் குறித்த ஆண் இருக்கும் பக்கம் நோக்கியே அவளது கால்கள் செல்லும்.

02. முகபாவனை

ஒரு பெண் ஒரு ஆணுடன் கதைக்கும் போது அவளது முகத்தில் ஏற்படும் பாவனையை வைத்துக் கூட இதை கணித்து விடலாம். ஆணின் கண்களையே பெண்ணின் கண்களும் வட்டமிடும். கண் இமைகள் அடிக்கடி படபடக்கும். அவள் சிரிக்கும் போது புருவங்கள் உயர்ந்து கதைக்க முற்படுவதைப் போல் இருக்கும். ஒவ்வொரு பேச்சுக்கு இடையிலும் அவள் தனது உதட்டைக் கடிப்பாள்.

03. பேச்சு

தனது மனதுக்கு பிடித்த ஆணுடன் ஒரு பெண் கதைக்கும் போது அந்த ஆணின் பேச்சுடன் ஒத்துப் போவதற்கு ஏற்றாற் போல் அவளது தொனி அமைந்திருக்கும். அது மட்டுமின்றி, அந்த ஆண் சிரிப்பதைப் போன்று மிமிக்ரி செய்வாள். அவன் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகளை அந்தப் பெண்ணும் உபயோகிப்பாள்.

04. தொடுகை

ஒருபெண், குறித்த ஆணை தொடுவதில் அதிகம் அக்கறை காட்டுவாளாயிருந்தால் அவள் மீது அவளுக்கு கொள்ளைப்பிரியம் என்று அர்த்தம். அந்த ஆணை தொட்டுப் பேசுவதற்கென்றே பல காரணங்களை கொண்டிருப்பாளாயின் அதுவும் அந்த ஆண் மீதுள்ள பிரியத்தை எடுத்துக் காண்பிக்கும் காரணிகளில் ஒன்று. சில சமயங்களில் ஆணின் தலைமுடியைப் பிடித்து வருடுதல் அல்லது பிரியும் நேரங்களில் கன்னத்தில் முத்தமிடல் என்பவையும் இதையே சுட்டிக் காட்டுகின்றது.

பிறகென்ன? இத்தனை அறிகுறிகளையும் ஒரு பெண் உங்களுக்கு காட்டுவாளாயின் கண்டிப்பாக உங்களை அவளுக்கு பிடிக்கும்.