Home பெண்கள் தாய்மை நலம் பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டில் உறவு ஆபத்தானதா?

பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டில் உறவு ஆபத்தானதா?

314

தாய் நலம்:திருமணமான ஒவ்வொரு தம்பதியர்களின் கனவும் தங்களுக்கென ஒரு குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்பதே! தம்பதியரின் ஆசைப்படி அவர்களுக்கு ஒரு குழந்தை உண்டான பின், அவர்கள் என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களின் மனதின் ஓரத்தில் சின்னதொரு சோகம் இருந்துகொண்டே இருக்கும். இது அவர்களின் உற்சாக உலகமான உடலுறவை குறித்ததே! இதை வெளியில் மறுத்து பேச எத்தனித்தாலும், மனதின் ஆழத்தில் இருக்கும் ஆசையை மறைத்து, மறுத்துப்பேசுவது என்பது அர்த்தமற்ற ஒன்றாகும்.

ஏனெனில் உடலுறவு உணர்ச்சி ஆண் மற்றும் பெண் இரு பாலினருக்கும் பொதுவானது தான். அதிலும் கர்ப்பகாலத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்களால், பெண்ணில் இந்த உணர்வு மேலோங்கியே காணப்படும். இந்த நிலையில் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் அது குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் தம்பதியர் மனதில் தோன்றுவதுண்டு. அந்த சந்தேகத்திற்கான விடையை அளிக்கவே இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறோம். படித்தறிந்து, மற்றவர் அறிய பதிப்பை பரப்புங்கள்..!

உணர்வுகள் மாறுபடுமா? கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்ப உணர்ச்சி ஒருவருக்கொருவர் மாறுபடும்; அதாவது சில கர்ப்பிணிகள் கர்ப்பகால உடலுறவில் அதிக இன்பம் அடையலாம்; சிலருக்கு மிகக்குறைவான இன்பமே கிட்டி, அதீத வலி ஏற்படலாம். இது பெண்களின் உடல் மற்றும் மருத்துவ நிலைகளை பொறுத்து மாறுபடும். ஆனால், இன்பம் குரைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடலுறவு இன்ப உணர்வு மிகவும் வித்தியாசமானதாக இருப்பதாக பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில், பெண்களின் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உணர்வுகள் மேலோங்கி மகிழ்ச்சியை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது; மேலும் பிறப்புறுப்பு சாதாரண நாட்களை விட, கர்ப்பகால உடலுறவில் அதிக ஈரப்பதத்தை வெளிப்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.

மார்பக மாற்றங்கள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலகட்டத்தில் மார்பகஙக்ளில் சில மாற்றங்கள் ஏற்படும்; அந்த சமயத்தில், உடலில் உருவாகும் மாற்றங்கள் உடலுறவு உணர்ச்சியை மிக அதிகமாக தூண்டிவிடுவதாக இருக்கும். இந்த நிலையில் மட்டும் உடலுறவு கொள்வதை தவிர்த்து கவனமாக இருத்தல் வேண்டும், குழந்தை முற்றிலுமாக கருவறையில் உருவான பின்,மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு பிறகு உடலுறவில் ஈடுபடலாம். ஆனாலும் மார்ப்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களை உடலுறவு கொள்ள பேராசை அடைய செய்யும். மார்பகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அங்கு தொடுதல் மற்றும் பிற உணர்வுகளை எதிர்பார்க்கும்; அந்த எதிர்பார்ப்பை பெண்களின் மனதில் ஏற்படுத்தும். மேலும் கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் ஏற்படும் சோர்வான உணர்ச்சியும், பெண்ணை அரவணைப்பு மற்றும் அன்பைக் குறித்து எண்ணச் செய்து ஏங்க வைக்கும். இதனாலேயே பெண் கர்ப்பமடைந்தால், அந்த காலகட்டத்தில் கணவன் அவளுடனேயே இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது; ஏனெனில் கர்ப்பகால ஹார்மோன் மாற்றங்களால், பெண்ணில் ஏற்படும் உணர்வுகளை தீர்த்து வைக்க கணவர் ஒருவரால் மட்டுமே முடியும். பெண்ணின் உணர்வுகளை தீர்த்து வைக்க, தம்பதியர் கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா, குழந்தையை பாதிக்குமா, போன்ற விவரங்களை அடுத்த பத்திகளில் பார்க்கலாம் வாருங்கள்!

பாதுகாப்பானதா?
கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பான விஷயம் தான்; ஆனால், அது தம்பதியரின் உடல் மற்றும் கருப்பையில் இருக்கும் கருவின் உடல் – மருத்துவ நிலையை பொறுத்து மாறுபடும். கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதை குறித்து வெளிப்படையாக மருத்துவரிடம் கலந்தாலோசித்து மேற்படி செயல்பட்டால், தேவையற்ற இழப்புகளை தவிர்க்கலாம். ஏனெனில் கர்ப்பகாலத்தில் கருப்பையில் குழந்தை வளர்வதால், அதன் அமைப்பு மற்றும் நிலை நாளுக்கு நாள் மாறுபடுகிறது; அதைக்குறித்து அறியாது உடலுறவில் ஈடுபட்டால், அது தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

கருக்கலைப்பு உண்டாகுமா? கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால், கருவில் வளரும் குழந்தைக்கு பாதிப்பு அதாவது கருக்கலைப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் அனைத்து தம்பதியரின் மனதிலும் எழக்கூடிய ஒரு கேள்வியே! கர்ப்பகால தாம்பத்யம் சரியான மருத்துவ ஆலோசனையுடன், அதிக உச்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில்லாமல் நடந்தேறினால், அதனால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது. மேலும் கர்ப்பம் அடைந்த முதல் மூன்று மாதங்கள் பெண்கள் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டும்; எந்தவித வீட்டு வேலைகளையும் செய்யாமல் இருந்தால் மிக நல்லது. நன்கு மாதத்தில் கரு கருப்பையில் நிலைபெற்ற பின், அன்றாட வேலைகள் மற்றும் உடலுறவில் கூட ஈடுபடலாம். மேலும் மருத்துவரிடம் இந்த விஷயங்களை பற்றி பேச தயங்கி, சரியான ஆலோசனை இன்றி உடலுறவு கொண்டால், அது இழப்பை உருவாக்கலாம்; எனவே, சரியான மருத்துவ ஆலோசனையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள்; மகிழ்ச்சியாய் கர்ப்பகலாத்தை மேற்கொண்டு, ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க முயலுங்கள்!

குழந்தையை பாதிக்குமா? பெண்ணின் கருவறையில் வளரும் குழந்தை பலமான கருப்பை சவ்வுகளால் சூழப்பட்டு, பாதுகாப்பாகவே வளர்கிறது; ஆணும் பெண்ணும் கவனத்துடன், காதலுடன் உடலுறவு கொண்டால், அது குழந்தையை பாதிக்காது, குழந்தையுடன் பெற்றோரை பிணைக்கும்; அந்த உடலுறவு தருணத்தில் குழந்தையும் மகிழ்ச்சியாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பகாலத்தில் குழந்தை கருப்பை சவ்வின் தடித்த சுவர்களுக்குள்ளாக பனிக்குட நீர் சூழ வளர்கிறது; இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால், ஆணின் பிறப்புறுப்பு பெண்ணின் பிறப்புறுப்பில் மட்டும் நிலைத்து, குழந்தையை சென்றடையாத வகையிலேயே பெண்ணின் உடலில் கருப்பை அமைந்துள்ளது.

பிரசவ வலி! கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வது கர்ப்பிணியின் உடலுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சி அளித்து, பெண்ணை ஆரோக்கியமான மனநிலையில் வைத்திருக்க உதவுகிறது; மேலும் கருவில் இருக்கும் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும். கர்ப்பகாலத்தில் சாதாரணமாக உடலுறவு கொள்வது, பெண்களின் பிரசவத்தினை எளிதாக்க உதவுவதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உடலுறவு கொள்வதோ, சுயஇன்பம் காண்பதோ குழந்தையை பாதிக்காது, ஆனால், இவற்றை ஒரு அளவுடன் கட்டுப்பாட்டுடன் செய்து வருதல் வேண்டும்.

Previous articleஒரு பெண் ஆணை காதலிக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
Next articleஉடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்….