Home சூடான செய்திகள் இதெல்லாம், இப்படி எல்லாம் பேசுனா பிடிக்காது – சாட்டிங் பாய்ஸ் மீதான பெண்களின் கருத்து!

இதெல்லாம், இப்படி எல்லாம் பேசுனா பிடிக்காது – சாட்டிங் பாய்ஸ் மீதான பெண்களின் கருத்து!

35

ஃபிளர்ட் செய்யும் ஆண்கள் என்று மட்டுமில்லாமல், நண்பர்கள், உறவினர்களில் யாரோ ஒருவர், உடன் பணிபுரியும் நபர் என அவர் யாராக இருப்பினும், எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது ஓவர் பில்டப் செய்து, நான் எல்லாம் அங்க இருந்திருந்தா நடக்குறதே வேற… என கிலோ கணக்கில் மொக்கை போடும் ஆண்கள் மீதான பெண்களின் கருத்து என்ன? வாங்க பாப்போம் / படிப்போம்…

பரிந்துரை! ஜொள்ளு விடுபவர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அளவுக்கு மீறி ஜவ்விழுப்பு இழுத்து பேசும் ஆண்களை தங்கள் தோழிகள், நண்பர்களிடம் அவனிடம் அதிகமா வெச்சுக்காத என பரிந்துரைத்து, உங்கள் நட்பு வட்டாரம், சமூக வட்டார விரிவாக்க பணிகளை முடக்கி விடுவார்களாம்.

கால் கட்! நீங்கள் பொதுவாக அழைத்தாலும் சரி, அவசரத்திற்கு அழைத்தாலும் சரி கால் செய்தால் எடுக்கவும் மாட்டார்கள், கால் செய்யவும் மாட்டார்கள்.

கருத்து! ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி எல்லாரிடமும் கருத்து கேட்டாலும், உங்களிடம் கேட்க மாட்டார்கள்.

முக்கியமானவை! நீங்கள் முக்கியமான விஷயத்தை கூற வந்தாலும் கூட, உங்களை விட்டு விலகி தான் செல்வார்கள். தட்டிக்கழிக்க செய்வார்கள்.

தவிர்த்தல்! நீங்கள் பத்தடிக்கு தொலைவில் வருவதை காணும் போதே, பிஸியாக இருப்பது போலவும், வேறு நபருடன் பேசுவது போலவும் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எச்சரிக்கை! போதுமப்பா சாமி, மொக்கை தாங்கல, கொஞ்சம் நிப்பாட்டு… காத்து வரட்டும் என நேரடியாக எச்சரிக்கை செய்வார்கள்.

பிளாக்! முன்பு தான் எச்சரிக்கை, கால் எடுக்காமல் இருப்பது எல்லாம். இப்போதெல்லாம் நேரடியாக பிளாக் செய்துவிட்டு அப்பா சாமி, தொல்லை ஒழிந்தது என நிம்மதி பெருமூச்சு விட்டு, அவர்களுடைய வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்களாம்.

எரிச்சல்! பொதுவாக ஒரு பெண்ணுடன் அதிகம் பேசும் போது, அவரது முக பாவனை வைத்தே அவர் ஆர்வமாக உள்ளார, எரிச்சல் அடைகிறாரா? என அறிந்துவிடலாம். எனவே, அவர் எரிச்சல் அடைகிறார் என தெரிந்துவிட்டால் பைபை சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம்.

திட்டு! ஒவ்வொரு பொண்ணுக்கும், ஒவ்வொரு ஃபீலிங் அல்லவா. எனவே, சிலர் முகத்திற்கு நேராகவே திட்டு அனுப்பி விடுவார்களாம்.

பேசவே கூடாது! இரண்டாவது, மூன்றாவது சந்திப்பிலும் நீங்கள் அளவுக்கு அதிகமாக பேசிக்கொண்டே இருந்தால். அவர்களோடு நான்காவது சந்திப்பு கிட்டவே கிட்டாது!