Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்கள் எளிதில் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா ?

பெண்கள் எளிதில் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா ?

71

உடல் கட்டுப்பாடு:மனிதனின் உணவு பழக்கவழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. நமது முன்னோர்கள் தாங்கள் உண்பதை விட அதிகாமாக உடல் உழைப்பில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் பலவருடங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். இதற்கு முன்னர் உடல் எடையை அதிகரிப்பதற்காக மருத்துவமனையை தேடிச் சென்றனர். ஆனால் தற்போது உடல் எடையை குறைப்பதற்காக பலரும் மருத்துவமனையை தேடி செல்கின்றனர்.

தற்போதைய வாழ்க்கை முறையில் மனிதனின் உடல் உழைப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் கடைகளில் கண்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, அதிகமாக மாமிசம் சாப்பிடுவது ஆகியவற்றால் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர்.

உடல் எடையை குறைப்பதற்கு எளிமையான வழிமுறைகள் உள்ளன.

தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் ஒரு டம்ளர் குடிப்பதால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். பின்னர் வெந்நீரில் எலுமிச்சை தேன் ஆகியவற்றை கலந்து அருந்தினால் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.

தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைப்பதற்கு முக்கியமான
முக்கியமான ஒரு விஷயம்.

காலை உணவிற்கு சாதத்தை உணவாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.இரவு சாப்பாட்டிற்கு பின்பு வெந்நீர் அருந்தினால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து உடல் எடை குறைவிற்கு உதவியாய் இருக்கும்.