Home அந்தரங்கம் கட்டிலறையில் மனைவியின் அரவணைப்பு இப்படி இருக்வேண்டும்

கட்டிலறையில் மனைவியின் அரவணைப்பு இப்படி இருக்வேண்டும்

312

அந்தரங்க கட்டில்:இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவியைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம்தான் என்பதை புரிந்து கொள்வார்களாம் கணவர்கள்.

உணவில் மட்டுமல்ல தலையில் வைக்கும் பூவின் மூலம் கூட தங்களின் காதலை, தேவையை பெண்கள் உணர்த்துவார்களாம். வாசனை நிறைந்த மல்லி, முல்லை, சாதி மல்லி சூடினால் அன்றைக்கு இரவு படுக்கை அறையில் காதல் மழை இருக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் வாசமில்லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது பூக்கள் வைக்காமல் இருந்தாலே வேறு எதுவும் விசேசமில்லை பேசாமல் படுத்து தூங்குங்க என்று குறிப்பால் உணர்த்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

இதுபோன்ற சில பல சமாச்சாரங்களை சொல்லி காமசூத்திரக் கலையை குறிப்பால் உணர்த்தியுள்ளது ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’. முன்குறிப்பு மட்டுமல்லாது உறவுக்கு முன்னும் பின்னும் தம்பதியர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கிளு கிளு சமாச்சாரங்களை அள்ளித் தெளித்துள்ளது அந்த ஆய்வுப் புத்தகம்.

சலிக்க சலிக்க முத்தமழை

உறவின் தொடக்கத்தில் முன் விளையாட்டுக்கள் களை கட்டும். சலிக்க சலிக்க ( சலிக்குமா என்ன?) முத்தமழைதான். ஆனால் முடிந்த பின்னரோ துணையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இதுவே பெண்களுக்கு உளவியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்திவிடுமாம். உறவின் முன்பு எப்படி துணையை தயார் படுத்துகிறோமோ அதேபோல உறவிற்குப் பின்னும் அன்பாய் தலை வருடி ஆறுதலாய் அணைத்தபடி படுக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வெட்கத்தில் சிவக்கும் முகம்

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 170 பேர் பங்கேற்றனர். உறவின் போது அவர்களின் தேவைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. உறவின் முன் செக்ஸியான பேச்சு, முத்தம், போன்ற முன்விளையாட்டை விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை

அதேபோல் உறவு முடிந்து, சோர்ந்து போய் படுத்திருக்கும் ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம். அதேபோல் உறவின் போது நடந்த ரொமான்ஸ் நிகழ்வுகளை கதோரம் கிசுகிசுப்பாய் பேச விரும்புகின்றனராம்.

காதல் வெளிப்படும் தருணம்

உறவின் தொடக்கத்தில் ஐ லவ் யூ கூறுவதைப்போல உறவு முடிந்த பின் அதற்கு நன்றி கூறும் விதமாக ஐ லவ் யூ சொல்லுங்களேன். அதுவே அடுத்த ரவுண்டுக்கு வழி ஏற்படுத்தி தரும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் உறவு முடிந்த உதறிவிட்டு வெளியேறத்தான் நினைக்கின்றனர். சட்டென்று குளிக்கபோகின்றனர். ஆனால் தம் அடிக்கப் போய்விடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே மனைவியை பூவாய் தாங்கி அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு, காதோரம் ஐ லவ் யூ சொல்கின்றனராம்.

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு என்பது உடலின் சங்கமம் மட்டுமல்ல அது இரு மனங்களின் சங்கமம் கூடத்தான். எனவேதான் மனமொத்து உறவில் ஈடுபடும் போது அது எண்ணற்ற ஹார்மோன்களை சுரக்கின்றன. இந்த ஹார்மோன் காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு நூலில் தெரிவித்துள்ளது.

Previous articleவிந்து ,சிறுநீர் குடிப்பதைச் சில பெண்கள் விரும்புவதாகச் சொல்லப்படுவது உண்மையா?
Next articleசுரக்கும் தாய்ப்பால் குழந்தைக்குப் போதுமானதா… தாய்மார்கள் அறிவது எப்படி?