Home சமையல் குறிப்புகள் பூண்டு மிளகு சிக்கன் வறுவல்

பூண்டு மிளகு சிக்கன் வறுவல்

33

தேவையான பொருள்கள்:

சிக்கன்-அரை கிலோ
பெரிய வெங்காயம் -1 or சின்ன வெங்காயம்-அரை கப்
நாட்டு பூண்டு- 1 கப்
மிளகுத்தூள்-2 or 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 டீ ஸ்பூன்
மஞ்சள் –சிறிது.
இஞ்சி-சிறிது
கருவேப்பிலை,மல்லி இலை
உப்பு-தேவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய்- தேவைக்கு ஏற்ப
தாளிக்க:

பட்டை
சோம்பு
கடுகு
பிரியாணி இலை-1
செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து,பின் அதில் மஞ்சள்,மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து குறைந்தது,அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் கடாயில் ஆயில் ஊற்று காய்ந்தது தாளிக்க கொடுத்து இருக்கும்பொருள்கள் சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பின் பூண்டு சேர்த்து வதக்கி,பாதி வதங்கியது,ஊற வைத்துள்ள சிக்கன் ,சிறிது உப்பும் சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும்,பின் இஞ்சி சேர்த்து சிம்மில் மூடி வைத்துசிறிது நேரம் வேகவைத்து ,இடையில் திறந்து தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து விடலாம், பூண்டு,வெங்காயம் நன்றாக வதக்கி சிக்கன் உடன் நன்றாக கலந்த உடன் மிளகுத்தூள்,சிறிது கரம் மசாலா விரும்பினால் சேர்த்து சிக்கன் நன்றாக வெந்து,ஆயில் பிரிந்து வரும் போது கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து இறக்கவும்.