Home இரகசியகேள்வி-பதில் முதலிரவு முடிந்த பின் ஏற்படும் பாலியல் தொடர்பான கேள்விகள் பதில்கள்

முதலிரவு முடிந்த பின் ஏற்படும் பாலியல் தொடர்பான கேள்விகள் பதில்கள்

667

டாக்டர் கேள்வி பதிகள்:முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.

காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின் வண்ணங்களை மாற்றும். ஆண் மகனையும் இந்த நாணச் சுழல் விட்டுவைப்பதில்லை. ‘ராத்திரி எப்டிடா நடந்தது’ என தூரத்து நண்பனும் அலைபேசியில் துரத்துவான். ஆனால், நடந்த எதையுமே யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது என்பது மட்டுமே நிதர்சனம்.

ஒருவேளை எதுவுமே நடக்காமல் போய் விட்டாலும் அதற்கான தீர்வை ரகசியமாகவே தேடித்திரியும் அவஸ்தையையும் கண்களுக்குப் புலப்படாத கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

அதனாலேயே குழப்பங்களையும் அவஸ்தையையும் மனதுக்குள் புதைத்துக் கொண்டு தாம்பத்ய வாழ்வை வேதனையுடன் பலர் கடக்கின்றனர். முதலிரவுக்குப் பிறகு அப்படியென்ன குழப்பங்கள் எழும்… அதற்கான தீர்வுகள் என்னவென்பதை பாலியல் மருத்துவர் ரமேஷ் கண்ணா விளக்குகிறார்.

தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைவாக இருந்தால் ஆர்வத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?

‘‘தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைவதற்கு அடிப்படைக் காரணம் ஒருவர் மேல் மற்றவருக்கு மனரீதியான ஈர்ப்பின்மையே. ஆகவே, ஒருவர் மேல் மற்றவர் உண்மையான அன்பினை உணர்ந்து விட்டுக்கொடுத்து முதலில் காதல்வயப்படும்படியாக மனம் ஒன்றி இருக்க வேண்டும். இதற்கு மேலும் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை இருந்தால் இணைகள் இருவரும் மனநல மருத்துவரை அணுகி தங்களது மனக்குறைகளை வெளிப்படுத்தலாம்.

மணப்பெண் சிறுவயதில் பாலியல் ரீதியாக அடைந்த மோசமான அனுபவங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மனநல ஆலோசனையில் பிரச்னையைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். சரியான காரணத்தை கண்டுபிடிக்கும் போதே பாதிப்பிரச்னை தீர்ந்துவிடும். பின்னர் பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.’’

தாம்பத்ய உறவின்போது பெண் கூச்சப்பட்டால் எப்படி அவளை உறவுக்குத் தயார்படுத்துவது?

‘‘பெண் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டிருப்பதால் பெண்ணுக்குப் பிடித்த விஷயங்களைக் கேட்டறிந்து அதை செய்து ஆண் தன்னுடைய செயல்களால் தான் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். மெல்ல இந்த கூச்ச சுபாவம் சரியாகிவிடும்.’’ தாம்பத்ய உறவின் போது ஆணுறுப்பு தயாராகாமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

‘‘தாம்பத்யத்தில் ஆண் – பெண் இருவரும் ஒருவரை ஒருவர் கொண்டாடி மகிழ்வின் உச்சத்தை அடையலாம். இதில் ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது மற்றவர் விருப்பம் இன்றி இருந்தாலும் எல்லாம் கெட்டுவிடும். தாம்பத்ய உறவுக்கு விரும்புபவர் தன்னுடைய இணையின் மனநிலையை அதற்குத் தயார்படுத்த வேண்டும்.

முதலில் எண்ணத்தை வார்த்தைகளால், வர்ணிப்பால், சீண்டலால், தீண்டலால் என மெல்ல மனதைத் தூண்ட வேண்டும். இதில் தனது இணையை மெல்ல ஆர்வம் கொள்ளச் செய்து விளையாட்டில் இறங்க வேண்டும். ஆணின் மனதில் ஆழமான காயங்கள் இருக்கலாம், வேலை அல்லது தொழில் ரீதியாக ஏதாவது இழப்புகளைச் சந்தித்திருக்கலாம். தாம்பத்ய உறவு கொள்ளும் சூழல் பிடிக்காமல் போயிருக்கலாம். ஏற்கனவே அவன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்துக் கொள்பவனாக இருக்கலாம். இத்தனை காரணங்களால் உறவுக்கான ‘மூட்’ வராது. அதனால், ஆணுறுப்பு தயாராகாமல் போகலாம்.

வேறு ஏதாவது உடல் பிரச்னைகளா என்பதையும் பெண் மனம் விட்டுப் பேச வேண்டும். ஆணுறுப்பு தயாராவதற்கான சிகிச்சை முறைகள் வழியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காணலாம். ஆணின் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பின் அளவு குறைந்தாலும் இது போன்ற பிரச்னைகள் உருவாகும். அதேபோல் ஆணுறுப்பு எழுச்சிக்கான சிறப்பு உணவுகள் உணவு ஆலோசகரிடம் கேட்டு எடுத்துக் கொள்ளலாம்.’’

பெண்ணுறுப்பு இறுக்கம், சிறிதாக இருப்பது போன்ற காரணங்களால் உடலுறவின்போது ஒத்துழைக்காமல் போகும் பிரச்னை ஏற்படுமா?
‘‘தாம்பத்ய உறவின் துவக்கத்தில் பெரும்பாலான தம்பதியர் சந்திக்கும் பிரச்னை இது. அதுவரை சிறுநீர் மற்றும் மாதவிடாய் மட்டுமே வெளியேறிய வழியில், ஆணுறுப்பை நுழைக்கும்போது பெண்ணுக்கு வலி ஏற்படும். ஆனால், பிரசவத்தின் போது இந்த வழியே ஒரு குழந்தை வெளியேறும் அளவுக்கு விரிந்து கொடுக்கும் நெகிழ்வுத் தன்மை கொண்டது.

அதனால், தாம்பத்ய உறவுக்கு மனம் தயாராகும்போது இதுவும் நெகிழ்ந்து வழி விடும். அதனால் உறுப்பு சிறிதாக இருக்கிறது என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. பெண் மனது முழுமையாகத் தயாராகிவிட்டால் போதும். அப்படியும் பிரச்னை என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மேலும் இதற்கான ஜெல்லும் பயன்படுத்தலாம்.

பெண்ணுக்கு வலிக்காத முறைகளை ஆண் கையாள வேண்டும். அதற்கு மனதளவில் பெண்ணைத் தயார் செய்வதும் அவசியம். பெண்ணின் மனம் உடன்பட்டு மகிழ்வைக் கொண்டாட முயற்சிக்கும் போது இது போன்ற சாதாரண பிரச்னைகள் எளிதில் சரியாகிவிடும்.’’

தாம்பத்ய உறவின்போது பெண்ணுறுப்பில் திரவம் உற்பத்தியானால்தான் இருவருக்கும் இன்பம் கூடுதலாகுமா? திரவம் சுரக்காமல் போனால் என்ன செய்யலாம்?

‘‘தாம்பத்யத்தின் ஆரம்ப காலக்கட்டத்தில் பயம், பதற்றம் மற்றும் மூட் வராமல் போவதால் உடலுறவின்போது பெண்ணுறுப்பில் திரவம் சுரக்காமல் போகலாம். இது இருவருக்கும் உடலுறவின் போது மனதுக்குள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். பெண் முழு மனதின்றி ஆண் அழைத்ததற்காக உடலுறவுக்கு உடன்பட்டிருக்கலாம். இரு மனமும் இசைந்தால்தான் எல்லாம் சரியாக நடக்கும், இன்பம் பெருக்கெடுக்கும். வேறு காரணங்கள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனை பெற்று செயற்கை முறையில் இதற்கும் தீர்வு காணலாம்.

உடலுறவுக்கு முன்பான விளையாட்டின் வழியாக பெண்ணின் உணர்வுகளைத் தூண்டி விட்டு உடலுறவு கொண்டால் தான் பெண்ணுறுப்பில் திரவம் சுரக்கும். இது ஆணின் செயல்களைப் பொறுத்துதான் உள்ளது. முறையான முன் விளையாட்டுக்குப் பின்னும் சுரக்காமல் விட்டால் அதற்கான ஜெல்களைப் பயன்படுத்தலாம். செக்ஸ் தெரபிகளின் மூலம் இயற்கையாகவே சுரக்கச் செய்யலாம்.’’

தாம்பத்ய உறவின்போது இருவரும் போர்னோ படங்கள் பார்க்கலாமா?

‘‘இது இருவரின் மனநிலையைப் பொருத்தது. போர்னோ படங்கள் பார்க்கும்போது பாலுணர்வு தூண்டப்படுகிறது. உடலுறவு சமயத்தில் போர்னோ படங்கள் இருவருக்குமே பிடித்திருக்கும்போது உடலுறவுக் காலத்தை நீட்டிக்கவும், நிறைய விளையாடவும் உதவுகிறது. இணையின் விருப்பத்தை அறிந்து இதனைப் பயன்படுத்தலாம் அல்லது தவிர்க்கலாம்.

ஆண் தன் இணைக்கு இது குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டாடுவது நல்ல பலன் அளிக்கும்.’’திருமணமான புதிதில் பெண்கள் ஓரல் செக்ஸ் நடவடிக்கைகளுக்குத் தயங்குவார்கள். ஆண்கள் அதுபோலச் செய்ய பெண்களைக் கட்டாயப்படுத்துவதுண்டு. இதனால் பெண்ணுக்கு தாம்பத்ய உறவே கசந்து போகவும் வாய்ப்புண்டு. இதை எப்படிக் கையாளலாம்? ‘‘உடலுறவுக்கு முன்பாக அந்தரங்க உறுப்புகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குளித்து உடலில் வியர்வை நாற்றம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். நறுமண ஸ்பிரேக்கள் மூட் ஏற்றியாக செயல்படும்.

தாம்பத்ய உறவின்போது முத்தம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதனால் உடலுறவின் போது வாய் நாற்றம் தவிர்ப்பதும் முக்கியம். இணைகள் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை முழுமையாகத் திருப்திப்படுத்தவே, இன்பத்தைத் தூண்டவே வாய் வழியான விளையாட்டுகள் உதவுகிறது. இதன் முக்கியத்துவத்தை இணைக்கு உணர்த்த வேண்டும். இது சாதாரண விஷயமாகிடும். எதையும் விருப்பத்துடன் செய்ய முயலும்போது முடியாதது எதுவும் இல்லை. பெண்ணும் இதை விரும்பிச் செய்வாள்.’’

தாம்பத்ய உறவின் துவக்க காலத்தில் உண்டாகும் சிரமங்களை எப்படி புரிந்து கொண்டு சரி செய்யலாம்?

‘‘எல்லாம் துவக்கத்திலேயே முழுமையாக நடந்திடாது என்ற புரிதல் வேண்டும். மனம் ஒன்றிய இருவருக்கும் ஒருவரின் தேவை மற்றவருக்குப் புரியும். அன்பு வயப்படும்போது சிரமங்கள் சிறந்த இன்பத் தருணங்களாய் மாறிப்போகும். ஒருவர் சிரமத்தைப் புரிந்து கொண்டு அதை எளிதாக்க முயற்சிப்பதால் அன்பு அதிகரிக்கும். காமத்தின் இன்பத்தைக் கூட்ட அத்தருணங்களில் இரு உள்ளங்களிலும் அன்பு மழை பொழிய வேண்டும். வேறு வீட்டில் இருந்து புதிய குடும்பத்தில் வாழும் பெண்ணின் ஆரம்பகால ஊடல்களைத் தணிக்கவும் கூடல் பயன்படும். ஊடல் கரையக் கூடல் கொள்வது இன்பத்தை அதிகரிக்கச் செய்யும்.’’

தாம்பத்ய உறவிலும் பெண் பல சமயம் வெளிப்படையாக இருப்பதில்லை. பிடிக்காத விஷயங்களைச் சகித்துக் கொண்டு கடமைக்கு ஈடுபடுவதுண்டு. இந்தச் சூழலில் ஆண் பெண்ணைப் புரிந்து கொள்வது எப்படி?

‘‘இன்பமோ சிரமமான நிலையோ எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் இயல்பினை இருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, அந்தரங்க நேரங்களில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முறை உறவின் பிறகும் சந்தேகங்களை மனம் விட்டுப் பேசி பிடித்ததைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த முறை ஆர்வத்தைக் கூட்டும். பெண்ணும் இது எனக்கு
வேண்டும் எனத் தாராளமாகக் கேட்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

எதுவும் விரைவில் சரியாகிடும் என்ற நம்பிக்கை. இணையில் ஒருவர் சிரமங்கள் சந்திக்கும்போது அன்பே முதல் மருந்து. எதையும் மனம் விட்டுப் பேசிப் பகிர்ந்து கொண்டு சரி செய்ய முயலுங்கள். தீர்க்க முடியாத பிரச்னையென்று எதுவும் இல்லை. காமத்தின் சுவைகள் எத்தனை என்று கண்டறியத் தொடங்குங்கள். காமத்தின் சிகரத்தில் முத்தமிட்டுக் கொள்ளுங்கள். அன்பில் திணறி, நன்றி பெருகட்டும். ஒவ்வொரு உடலுறவின் கடைசி முத்தத்திலும்இந்த நன்றியின் சுவை சேரட்டும்.’’