Home பெண்கள் தாய்மை நலம் இரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

இரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

27

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நன்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் உணவில் சற்று அதிகமாகவே அக்கறை காட்ட வேண்டும். மேலும் கர்ப்பமான பின் பெண்கள், குழந்தைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

முக்கியமாக உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என உணவுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

நட்ஸில் வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பாலை தவறாமல் குடிக்க வேண்டும். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் சற்று அதிகமாகவே பாலைப் பருக வேண்டும்.

தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படும். ஆகவே கர்ப்பிணிகள் தயிரை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் மெர்குரி குறைவாக உள்ள மீனைத் தான் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.

கொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள், கொண்டைக்கடலையை சாப்பிட்டால், குழந்தையின் தசை வளர்ச்சி அதிகம் இருக்கும்.

முட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இந்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிட்டால், இன்னும் நல்லது.

பசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இந்த இரும்புச்சத்து குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும்.