Home இரகசியகேள்வி-பதில் பெரிய மார்பகங்களுக்கு ஆசையா??

பெரிய மார்பகங்களுக்கு ஆசையா??

82

அப்படியானால் எது ஆரோக்கியமான மார்பகங்களுக்கான சரியான அளவு என்கிறீர்களா?


பூப்பெய்துவதற்கு முன்பு வரை பெண்களின் மார்பகங்கள் மிக மென் மையாக, அளவில் சிறியதாக இருக்கலாம். பருவமடைந்த பிறகு ஹhர் மோன் மாற்றங்களின் விளைவால், அவற்றின் மிருதுத் தன்மையும், அள வும் மாறும். பெருத்த மார்பகங்களும் சரி, சிறுத்த மார்பகங்களும் சரி, தொய்வடைந்தவையும் சரி, ஒன்று பெரிதும், மற்றெhன்று சிறிதுமாக அமைந்தவையும் சரி ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே மார்பகங்களின் அளவையும், அவற்றின் கவர்ச்சியையும் பொறுத்து அவற்றின் ஆரோக்கியம் அமைவதில்லை என் பதை ஆழமாக மனத்தில் பதியுங்கள்.

 

மார்பகங்களால் மன உளைச்சலா?


சராசரியைவிட அளவில் சிறுத்த அல்லது பெருத்த மார்பகங்கள் அமையப் பெற்ற பெண்கள் சிலருக்கு வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அது மன உளைச்சலைத் தரலாம். இந்த நிலையில் இப்பிரச்சி னைக்கு இரண்டே தீர்வுகள்தான் உண்டு.
1,ஒன்று அலட்டிக் கொள்ளாமல் அப்படியே விடுவது.
2,அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றிக் கொள்வது.
முதல் விஷயம் சிரமம் இல்லாதது. பயமில்லாதது.
நல்ல தரமான உடற்பயிற்சி நிலை யத்துக்குச் சென்று மார்பகங்களுக் கான பிரத்யேக உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். உடலின் மேற் பகுதிக்கான சில பயிற்சிகள், மார்ப கங்களை சரியான அளவில் உறுதியாக வைக்கும். முதுகு, தோள் பட்டைகள் போன்றவற்றுக்கு நல்ல சப்போர்ட் கொடுத்து, கூன் தோற்றம் விழுவதையும் தடுக்கும்.
அடுத்து சரியான பிரா அணிவது. மிகப்பெரிய மார்பகங்கள் அமையப் பெற்றவர்கள், ஸ்போர்ட்ஸ் பிரா அணியலாம். இது மார்பகங்களை நெஞ்சோடு அழுத்தி, அளவை சற்றே குறைத்துக் காட்டும்.
அதே மாதிரி அளவில் சிறுத்த மார்பகங்கள் உள்ளோர், மார்பகங்களை எடுப்பாகக் காட்டக் கூடிய பிரத்யேக பிராக்களை அணியலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
அறுவை சிகிச்சை முறை


சராசரியைவிடப் பெரிதான மார்பகங்கள் அமையப் பெற்றவர்கள் உண்மையில் அதை நினைத்து சந்தோஷப் படலாம். பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தாகத் தன்னை நினைத்துப் பெருமைப் படலாம். அதை விரும்பாத வர்களுக்கு அறுவை சிகிச்சை ஒரு தீர்வு.
இதற்கான அறுவை சிகிச்சை மயக்க மருந்து கொடுக்கப் பட்டு சுமார் மூன்று மணி நேரம் நடத்தப்படும். மார்பகங்களின் உள்ளே ஒரு ஆயுதத்தைச் செருகி, அதன் வழியே அளவுக்திக கொழுப்பையும், சதையையும் நீக்குவதுதான் இதில் பிரதானம். பெரும்பாலும் இப்படிப்பட்ட அறுவை களில் மார்பகக் காம்புகளும், அதைச் சுற்றிய பகுதியும் அப்படியே தானிருக்கும். ரொம்பவும் பெரிய மார்பகங்களாக இருந்து, தொய்வும் அதிகமென்கிற போது, மார்பகக் காம்புப் பகுதியை அகற்றி விட்டு, அதைச் சற்றே உயர்த்தி வைத்துத் தைப்பதும் உண்டு. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மார்பகக் காம்புப் பகுதிகள், அவற்றுடன் இணைக்கப் பட்டுள்ள ரத்த நாளங்களிடமிருந்து துண்டிக்கப் படுவதால், நிரந்தரமாக உணர்ச்சிகளை இழக்கவோ, தாய்ப் பாலு}ட்ட முடியாத நிலைக்குள்ளாகவோ கூடுமாம்.
அறுவைக்குப் பிறகான ஓய்வு ஐந்து முதல் ஆறு வார காலம் தேவைப் படும். காயம் ஆறுவதற்கு மாதக் கணக்கில் கூட ஆகலாம். முதல் சில நாட்களுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகவும், வீங்கியும் காணப்படலாம். இந்த அறுவை சிகிச்சை மார்பகங்களின் அளவை மாற்றுமே தவிர, அறுவையால் உண்டாகும் தழும்பு நிரந்தரமாகத் தங்கி விடும்.
உடையணிந்துதான் அதை மறைத்துக் கொள்ள வேண்டும். வலி முற்றிலும் நீங்க ஒரு மாதமும், மார்பகங்கள் ஒரு வழியாக ஒரு ஷேப்புக்கு வர மூன்று முதல் ஆறு மாதங் களும் பிடிக்குமாம்.
பெருத்த மார்பகங்களுக்குப் பெயர் போன பமீலா ஆன்டர்சன், சமீபத்தில் தனது மார்பகங்களைப் பெரிதாக் கிக் கொள்ள அடிக்கடி செய்து கொள்கிற அறுவையைக் கை விட்டு விட்டதாக அறிவித்திருக்கிறhர். தாள முடியாத முதுகுவலி, மார்பகங்களின் கனம் போன்றவையே இந்த முடிவுக்கான காரணங்கள் என்றும் அறிவித்திருக்கிறhர்.
மார்பகங்களின் அளவைக் கூட் டவோ, குறைக்கவோ செய்யப் படுகிற அறுவைகளில் இரத்த இழப்பு, இன்ஃபெக்ஷன் போன்ற விளைவுகள் தவிர்க்க முடியாதவை. தவிர, மார்பகக் காம்புகளில் உணர்ச்சியற்ற நிலை, தாய்ப்பாலு}ட்ட முடியாத நிலை, மார்பகங்களின் அளவுக்கும், மார்பகக் காம்புகளின் அளவுக்கும் சம்பந்தமில் லாம ஏற்ற, இறக்கம்,தழும்புகள் என இன்னும் பக்க விளைவுப் பட்டியல் நீள்கிறது.
பெருத்த மார் பகங்களுக்கு ஆசையா?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அதனால் உண்டாகிற பிரச்சி னைகளைத் தெரிந்து கொண்டு, அந்த ஆசையை வளர்க்கவோ, துறக்கவோ செய்யுங்கள்.
* மாதவிலக்கின் போதும், அதற்கு முந்தைய நாட்களிலும் பயங்கரமான மார்பக வலி.
* கழுத்து வலி, தலைவலி, தோள் பட்டை வலி, அடி முதுகு வலி. கூன் விழுந்த தோற்றம்.
*மார்பகங்களின் தசை மடிப்புகளுக்கிடையில் எப்போதும் வியர்வை தங்குவதால் உண்டாகிற *சருமக் கோளாறுகள்.
*மார்பகங்களை சப்போர்ட் செய்ய அணிகிற பிராவின் பட்டைகள் அழுத்துவதால் உண்டாகிற வேதனை மற்றும் நரம்புக் கோளாறுகள்