Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பகங்கள் தொங்காமல் சிக்கென வைத்துக்கொள்வது எப்படி?… அதுவும் செலவே இல்லாமல்…

மார்பகங்கள் தொங்காமல் சிக்கென வைத்துக்கொள்வது எப்படி?… அதுவும் செலவே இல்லாமல்…

65

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் முகழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்கள் மார்பகழகுக்கு கொடுப்பதில்லை. நீங்கள் தொய்வான மார்பகத்தை பெற்று இருந்தாலும் அதுவும் உங்களை வயதானவர்களாக மட்டுமே காட்டும். அதுமட்டுமா எல்லா விதமான ஆடைகளையும் உங்களால் வெளியில் அணிந்து செல்ல முடியாது.

இது மற்றவர்கள் முன்னிலையில் கூச்சத்தையும் சங்கடத்தையும் வரவழைத்து விடும். நீங்கள் என்ன தான் இதற்காகவென்றே வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிந்தாலும் இயற்கையான பலன் கிடைத்த மாதிரி இருக்காது. உங்கள் மார்புப் பகுதி தசைகள் தொய்ந்து அதன் நீட்சித்தன்மை இழந்து காணப்படும். சரி இதற்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா. கவலையை விடுங்க. நாங்கள் கூறும் சில இயற்கை முறைகளை மட்டும் பயன்படுத்தினாலே போதும் கச்சிதமான மார்பகழகை பெற இயலும்.

காரணங்கள் தாய் பாலூட்டுதல், மெனோபாஸ், திடீரென்று உடல் எடை குறைதல் மற்றும் கூடுதல், ஊட்டச்சத்து குறைபாடுகள், சரியான உள்ளாடை அணியாமல் இருப்பது, அதிகமாக ஆல்கஹால் அருந்துவது, நிக்கோட்டின் அல்லது கார்பனேட் பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால் தொங்கும் மார்பக தசைகள் உண்டாகின்றன. எந்த வித கெமிக்கல் முறையும் இல்லாமலும் பக்க விளைவுகள் இல்லாமல் மார்பகழகை மீட்க கீழ்கண்ட குறிப்புகளை பின்பற்றலாம்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மார்பக சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து அதன் வடிவத்தை இயல்பாக்குகிறது. இதனுடன் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து தேய்க்கும் போது தசைகள் இறுக்கமடைந்து இன்னும் கூடுதலான பலன் கிடைக்கும். கொஞ்சம் ஆலிவ் ஆயிலை கைகளில் எடுத்து மார்பகத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்யும் போது புதிய செல்கள் உருவாக்கம், இரத்த ஓட்டம் அதிகரித்து மார்பக அமைப்பை சரி செய்கிறது. ஒரு நாளைக்கு 4-5 தடவை இதை செய்யலாம். பாதாம், அவகேடா, ஜோஜோப எண்ணெய் போன்றவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

முட்டை மற்றும் வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் உள்ள பீட்டா கரோட்டீன் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. முட்டையின் கருவில் உள்ள புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் மார்பக சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குணப்படுத்துகிறது. மேலும் இதில் விட்டமின் ஏ, டி, பி6 மற்றும் பி12 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டை பேஸ்ட் தயாரித்து மார்பகத்தில் 15 நிமிடங்கள் தடவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

முட்டை வெள்ளை கரு முட்டையில் உள்ள ஹைட்ரோ லிப்பிட்ஸ் பொருள் தொய்வடைந்த சருமத்தை இறுஎக்கமாக்குகிறது. மேலும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முதலில் வெள்ளை கருவை நன்றாக நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். இது மார்பகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு கழுவி பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும். 1 டீ ஸ்பூன் தயிர், தேன், அடித்த முட்டையின் வெள்ளை கரு போன்றவற்றை கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு கொள்ளவும். இந்த மாஸ்க்கை அப்ளே செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

வெந்தயம் இதிலுள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும பாதிப்புகளை போக்கி தொய்வடைந்த மார்பகத்தை இறுஎக்கமாக்குகிறது. இது ஒரு ஆயுர்வேத முறையாகும். 1/4 கப் வெந்தயத்தை பொடியாக்கி பேஸ்ட்டாக்கி 15 நிமிடங்கள் மார்பக பகுதியில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். 10 சொட்டுகள் விட்டமின் ஈ ஆயில், வெந்தய எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டாக்கி மார்பக பகுதியில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் வைத்து இருக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்ய வேண்டும். யோகார்ட் மற்றும் வெந்தய பொடி சேர்த்து மார்பகத்தில் அப்ளே செய்யவும். யோகார்ட்டில் லாக்டிக் அமிலம், கால்சியம், ஜிங்க் மற்றும் விட்டமின்கள் பி உள்ளன. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து சரும செல்களை புதுப்பிக்கிறது. ஜிங்க்கில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பொருள் தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது.

மாதுளை இதில் ஆன்டி ஏஜிங் பொருட்கள் உள்ளன. மாதுளை பழத்தை உறுத்து அரைத்து கொண்டு அதனுடன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். 5-10 நிமிடங்கள் படுக்கைக்கு போவதற்கு முன் மசாஜ் செய்ய வேண்டும். மாதுளை பழ விதை எண்ணெய்யில் பைட்டோநியூட்ரியன்ஸ் உள்ளது. இது மார்பகத்தை வலிமை மற்றும் இறுஎக்கமாக்குகிறது. இந்த எண்ணெய்யை 2-3 நிமிடங்கள் தினமும் மார்பக பகுதியில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஷீ பட்டர் ஷீ பட்டரில் விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை குணமாக்ி தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது. ஷீ பட்டர் கொஞ்சம் எடுத்து மார்பகத்தில் அப்ளே செய்து 15 நிமிடங்கள் மேல்நோக்கி மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு 3-4 தடவை இதை செய்து வந்தால் விரைவான மாற்றத்தை காணலாம்.

பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெய்யின் எலாஸ்ட்டிக் தன்மை சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. இந்த ஆயில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. மில்க் க்ரீம் இயற்கை மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்பட்டு சருமத்தை மிருதுவாக்குகிறது. 4-5 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். வாரத்திற்கு 3-4 தடவை இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் மசாஜ் கூட செய்து மார்பகத்தை இறுக்கமாக்கலாம். நீச்சல் நீச்சல் உடற்பயிற்சி பெண்கள் தங்கள் உடம்பை கச்சிதமாக வைக்க உதவுகிறது. கலோரிகளை எரித்து தசைகளை இறுக்கமாக்குகிறது. நீங்கள் தினமும் சில வாரங்களுக்கு நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வந்தால் நல்ல இறுக்கமான கச்சிதமான மார்பகத்தை பெறலாம். உங்களுக்கு நீச்சலடிக்க நேரம் இல்லையென்றால் கீழ்கண்ட முறையை பின்பற்றுங்கள் சுவரை நோக்கி நேராக நின்று கொள்ளுங்கள். தோள்பட்டை தசைகள் மற்றும் கைகளை நீட்டி நீச்சல் அடிப்பது போல் செய்ய வேண்டும். இதை 100 தடவை செய்ய வேண்டும். இஞ்சி இஞ்சி நமது உடலின் மெட்டா பாலிசத்தை வேகப்படுத்தி அதிக அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கிறது. 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியை 1 கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். நன்றாக வடிகட்டி 1 டீ ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளவும். இந்த இஞ்சி டீயை 2-3 கப் தினமும் குடித்து வந்தால் நல்ல மார்பகழகு கிடைக்கும்.

உடற்பயிற்சி – புஷ் அப் தொய்வடைந்த மார்பகத்தை சரி செய்ய கீழ்கண்ட உடற்பயிற்சிகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உடற்பயிற்சி உங்கள் மார்பக தசைகளை பழைய நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. இது மார்பகத்தில் உள்ள முப்புரித்தசை, முன்புற தசைகள், முக்கோணத்தசைகள் போன்றவற்றிற்கு பயிற்சி கொடுக்கிறது. எனவே இதை மேற்கொண்டால் கச்சிதமான மார்பகழகை பெற இயலும். வயிற்றுப் பகுதி தரையில் படும்படி படுத்து கொள்ளவும். உள்ளங்கைகளை தரையில் பதித்து தோள்பட்டையை உயர்த்தி சரியான அமைப்பில் வைத்து கொள்ளவும். அப்படியே மெதுவாக வயிற்றை தூக்கி கைகளையும் கால்களையும் வலிமையாக நீட்டிக்க வேண்டும்.

மறுபடியும் பழைய நிலைக்கு வந்து திரும்பவும் செய்யவும். இதை 15 முறை செய்யவும். லிப்ட்டிங் இந்த முறை மார்பக தசைகளுக்கு மிகவும் வலிமையை கொடுக்கிறது. பாதங்களை இடுப்பு அகலத்தை விட அதிகமாக விரித்து கொள்ளுங்கள். டம்புள் கருவியை உங்கள் வலது பக்க கைகளில் வைத்துக் கொண்டு கைகளை தரைக்கு குறுக்காக வைத்து கொள்ளுங்கள். கைகளை தோள்பட்டைக்கு மேலே தூக்கி நேராக்கவும் . இது உங்கள் பெக்டோரல் மார்பக தசையை வலிமையாக்குகிறது. பழைய நிலைக்கு வந்து திரும்பவும் செய்யவும். 15 தடவை ஒவ்வொரு பக்கமும் செய்யவும். இதை எலாஸ்டிக் பேண்ட் கொண்டும் இதே முறையை செய்யலாம். வால் அப் நீங்கள் சுவற்றை பயன்படுத்தி புஷ் அப் செய்தால் எளிமையாக இருக்கும். சுவற்றிலிருந்து உங்கள் பாத தொலைவில் நின்று கொள்ளுங்கள். கைகளை சுவற்றிற்கு எதிராக வைத்து தோள்பட்டையை உயர்த்தி கொள்ளுங்கள். இப்பொழுது முழங்கையை சுவற்றை நோக்கி மடக்க வேண்டும். கொஞ்சம் நேரம் அப்படியே இருக்க வேண்டும். பிறகு பழைய நிலைக்கு வரவும். எஸன்ஷியல் ஆயில் மிளகுக்கீரை, லெமன் கிராஸ் ஆயில், சைப்ரஸ் எண்ணெய், ஸ்பியர்மின்ட் எண்ணெய், கேரட் எண்ணெய், பெருஞ்சீரக எண்ணெய், போன்ற எண்ணெய்கள் மார்பக சருமத்தின் நீட்சித்தன்மைக்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த ஆயில்களை கொண்டு மார்பக பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். சுத்தமான எஸன்ஷியல் ஆயிலை தனியாக பயன்படுத்தாதீர்கள்.

இவற்றை மற்ற எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சருமம் வெந்து போவதை தடுக்கலாம். அஸ்பாரகஸ் ரேஸ்மோசஸ் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காரணமாக இது ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது. 1 டேபிள் ஸ்பூன் அஸ்பாரகஸ் உடன் கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் சேர்த்து காலையில் மாலையில் பருக வேண்டும். இந்த பானத்தை 3 மாதத்திற்கு குடித்து வந்தால் நாளுக்கு நாள் உங்கள் மார்பகழகு மேம்படுவதை காணலாம். ராஸோல் களிமண் ராஸோல் களிமண் மொராக்கோ பகுதியில் இருந்து கிடைக்கும் இயற்கை களிமண். இது சரும செல்களை இறுக்கமடையச் செய்கிறது. இதில் கால்சியம், இரும்புச் சத்து, மக்னீசியம், சோடியம் பொட்டாசியம் போன்ற தனிமங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்கிறது. 2 டேபிள் ஸ்பூன் களிமண்ணை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குழைத்து பேஸ்ட்டாக்கி மார்பகத்தில் அப்ளே செய்ய வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். க்ரீன் டீ க்ரீன் டீ நமது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நீக்குகிறது. எனவே மார்பக பகுதியில் தொங்கும் சதைகளை குறைத்து உடம்பை கச்சிதமாக வைக்க உதவுகிறது. எனவே க்ரீன் டீ பருகி வந்தால் கச்சிதமான உடல் மட்டுமல்ல கச்சிதமான மார்பகத்தையும் பெறலாம். கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,

ஆன்டி ஏஜிங் பொருட்கள் போன்றவை சருமம் வயதாகுவதை தடுப்பதோடு சருமத்திற்கான கொலாஜனை உற்பத்தி செய்கிறது. கற்றாழை ஜெல்லை மார்பக பகுதியில் 4-5 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். கொஞ்சம் நேரம் கழித்து கழுவவும். செய்ய வேண்டியவை தினமும் தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் சருமம் வயதாகுவதை தடுக்கலாம் நேராக நிமிர்ந்து உட்காருதல், நடத்தல், படுத்தல் போன்றவை மூலம் தொங்கும் மார்பகத்தை தவிர்க்கலாம்.

யோகா பயிற்சிகளும் மார்பக தசைகளை காக்க பயன்படும் ஒமேகா 6 மற்றும் 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவும் புஷ் அப் பிராக்களை பயன்படுத்தவும் குப்புற படுக்காமல் மல்லாக்க படுத்து உறங்குவது நல்லது. விட்டமின் சி அடங்கிய பழங்களை சாப்பிடுவதன் மூலம் கொலஜனனை உற்பத்தி செய்து மார்பக சதைகளை இறுக்கமடையச் செய்கிறது. செய்யக் கூடாதவை ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் பொருத்தமற்ற பிராக்களை அணிதல் வெளியே செல்லும் போது சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசன் பயன்படுத்தாமல் செல்வது புகைப் பிடிக்கும் பழக்கம்.