Home இரகசியகேள்வி-பதில் உடலுறவு சம்பந்தமான வாசகர் சந்தேகம்

உடலுறவு சம்பந்தமான வாசகர் சந்தேகம்

96

கேள்வி

1.உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்றுவிடலாமா?

அல்லது
15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா?
உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே?
ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே?
பதில்

இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே.உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம்(நீந்துவதன் மூலம்) பெண்ணின் முட்டையைச்
சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் இருபது நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது
நல்லது என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி
வைப்பதும் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.

 

கேள்வி

நல்ல பல தகவல்களை சொல்கிறீர்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் என்றும் எத்தனை வயதுவரை நாம் உறவில் ஈடுபட முடியும் தயவு செய்து விளக்கினால் நிறையப் பேரின் சந்தேகம் தீரும்.

பதில்

எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.
எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவில் ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.

ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம்.
அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஆகவே திருமணம்யாகியிருந்தாலும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை.
எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.

ஆனாலும் இள வயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகலாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்குரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்

 

குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?

இது பொதுவாக நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம். இது சம்பந்தமான சந்தேகங்களைக் கொண்ட ஏராளமான மெயில்களைப் பார்த்தபின்பு தனித்தனியாக பதில் அளிக்காமல் பொதுவான இடுகையாகவே இடுகின்றேன்.

குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று கால எல்லை இல்லை. எப்போது பெண்ணின் மனதும் உடலும் அதற்குத் தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.

சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வார்கள். சில பெண்கள் உடல் உறவுக்குத் தயாராவதற்கு சில மாதங்கள் கூடச் செல்லலாம்.
ஆகவே இது பற்றி கணவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து இருவரும் மனமற்றும் உடல் ரீதியாக உடலுறவுக்குத் தயாரான பிறகு உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.

முக்கியமாக உடலை உறவை ஆரம்பிக்கும் போது வைத்திய ஆலோசனை மூலம் தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டை தெரிவு செய்து கொள்வது அவசியமாகும்.

உடலுறவில் ஈடுபடுவதால் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.